இன்றைய கதையரங்கத்தில் (9 மே2019).....
தாராள மனதுடன் ஒரு குள்ள நரி…
”அவினாஷ்! எங்க போய்ட்ட? நிர்மலா கூப்டறாங்க! உடனே பெட் நம்பர் 124!”
“ஒரு அஞ்சு நிமிஷம் டீ குடிக்கலாம்னு கேண்டீன் போனேன்! அதுக்குள்ள என்ன?”
”அந்த வயித்து வலி கேஸ்! திடீர்னு காலையிலேர்ந்து துடிக்கறான்! வலி வலின்னு கதறல்! நிர்மலா ரெண்டு மணி நேரமா ட்ரீட் பண்றாங்க! ஒண்ணும் கேக்கல!”
“தோ வர்ரேன் சிஸ்டர்!”
“நிம்மி! டெஸ்ட் எடுத்தியா?”
”எடுத்துட்டேன்! ஆனா தேவையே இல்ல அவினாஷ்! அல்சரேடிவ் கோலிடிஸ்!”
“எத வெச்சு சொல்றே?”
“நேத்து காரமா சிக்கன் சாப்டானாம்! கூடவே விஸ்கி! அப்பப்ப வயித்து வலி வருமாம்!இன்னிக்கு பிச்சுக்கிச்சு!”
“என்ன பெயின் கில்லர் குடுத்தே?”
“முதல்ல ஆக்ஸிகோடோன்! கேக்கலைன்னு இப்பத்தான் ப்யூப்ரிநார்ஃபைன் போட்டேன்!”
“ஓ அவ்வளவு ஸ்ட்ராங்கா? அதுக்குமா கேக்கல!”
”அதான் எனக்கே குழம்பறது?”
“வேற என்ன டெஸ்ட் எடுத்தே?”
” சிடி ஸ்கான் பார்த்தாச்சு1”
“அதுல என்ன தெரிஞ்சுது?”
“க்ளியரா இல்ல அவினாஷ்! அதான் ல்யூகோசைட் ஸிண்டிகிராஃபி பண்ணலாம்னு யோஜனை. உங்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு…?”
அந்த ஹாலே கிடுகிடுத்தது.
“என்ன பண்றீங்க மை டியர் இன்காம்பீடெண்ட் டாக்ட்டர்ஸ்?”
”குட் மார்னிங் புரொஃபசர்! என்ன டெஸ்ட் பண்ணனும்னு அவினாஷோட கன்சல்ட்…!”
“ஆமா இவர் பெரிய எக்ஸ்பர்ட் பாரு! ஷோ மீ த ரிபோர்ட்ஸ்!”
சர சரவென பேப்பர் புரட்டல். மீண்டும் இடி.
“நான்சென்ஸ்! அப்சல்யூட் வேஸ்ட் ஆஃப் டைம்!அல்சரேடிவ் கோலிடிஸ்! மை ஃபுட்! நிர்மலா! யூ மஸ்ட் கொ பேக் டு காலெஜ்!”
“புரொஃபசர்..?”
“டாம்மிட்! கால் ப்ளாடர்! ஃபுட் பால் மாதிரி தெரியறதே! அக்யூட் பெயின்! ரிக்கரிங் சிம்ப்டம்ஸ்! பைல் அப்ஸ்ட்ரக்ஷன்! இந்நேரத்துக்கு பஸ் ஃபார்ம் ஆயிருக்கும்!”
“ஓ மை காட்! எப்படி மிஸ் பண்ணினேன்!”
“நெவர் மிஸ்ட்ரஸ்ட் தி ஆப்வியஸ்! லிவர் டெஸ்ட் எடு! அமிலேஸ் லிபேஸ் லெவல் பாரு! சி டி ஸ்கான் கால் பிளாடர் எடு! பைல் டக்ட் செக்பண்ணு! கொட்டை எழுத்துல தெரியும் பாரு! கெட் கோயிங்!”
நிர்மலாவும் அவினாஷும் பரபரப்பாக ஓட, ப்யூலா வருகை.
“புரொஃபசர்! கமிஷனர் லைன்ல! உங்களோட பேசணுமாம்!”
“எந்த கமிஷனர்? கார்ப்பரேஷனா?”
“ஓ நோ! போலீஸ்!”
“சொல்லுங்க எட்வர்ட்! காதரீன் எப்படி இருக்கா?”
“ஓ ரொம்ப நல்லா இருக்கா டாக்டர்! உங்களுக்குத்தரணும்னு ஒரு பெயிண்டிங் பண்ணிட்டிருக்கா!”
“குட் குட்! கீப் ஹர் ஹெப்பி எட்! ஆமா இப்ப என்ன விஷயம்?”
“ஒரு ஸ்ட்ரேஞ்ச் கேஸ் டாக்டர்! ஒரு சின்னப்பையன்! 21 வயசு! எஞ்சினீரிங் காலெஜ் டிராப் அவுட்! எங்க போலீஸ் கம்ப்யூட்டர ஹேக் பண்ணிட்டான்!”
” ஹேக்? அப்படீன்னா?”
“ஓ புரொஃபசர்! எங்க போலீஸ் கம்ப்யூட்டர் டேட்டவெல்லாம் அவன் வீட்ல உக்காந்துண்டே ட்ரெஸ்பாஸ் பண்ணியிருக்கான்! மேஜர் சீக்ரெட்ஸ் எடுத்திருப்பானோ என்னமோ?”
“ இண்டர்னெட் அண்ட் ஆல் தட்! சரியான நேரத்துல பிடிச்சிட்டீங்க் இல்ல?”
“ஆமாம்! எங்க சிஸ்டம்ல வார்னிங் வந்திருச்சு! ஒரு மாதிரி எங்க சைபர் கூட்டம் அவனப்பிடிச்சுட்டாங்க! ஆனா பையன் தான்…?”
“நான் என்ன பண்ணனும்?”
”அவன மேலோட்டமா பார்த்தா மெண்டலி டிஸ்டர்ப்டா தெரியறான்! ஆனா இவனுங்களையெல்லாம் நம்ப முடியாது! அவன செக் பண்ணி ஹீ ஈஸ் ஆல்ரைட்டுன்னு ஒரு சர்ட்டிஃபிக்கேட் குடுத்திட்டீங்கன்னா நாங்க எங்க வேலயச்செய்வோம்!”
“பாக்கறேன்! செக் பண்றேன்! எது சரியோ அதும்படிதான் சர்ட்டிஃபிக்கேட் தருவேன்!”
“ஓ ஐ நோ டாக்டர்! பையன் நிச்சயமா ஏதோ விஷமம் பண்ணியிருக்கான். உள்ள வெச்சு ரெண்டு தட்டு தட்டி ப்ரூவ் பண்ணி வெளியே வராத படி தள்ளிடறேன்!”
“அதெல்லாம் உங்க பாடு! அனுப்புங்க!”
இன்ஸ்பெக்டர் கதிரவனோடு வந்த அந்தப்பையன் ஒல்லியாக இருந்தான். கன்னங்கள் ஒட்டிப்போய்ய் மார்புக்கூடு பின்னிக்கிடந்தது. கண்களில் ஒரு பயம், ஆச்சரியம். முகத்தில் சின்னப்பருக்கள். அரும்பாக மீசை முளைக்க ஆயத்தங்கள். பார்வை அங்கும் இங்கும் நிலை கொள்ளாமல் தவித்தது.
“நில்லுடா இப்படி!”
“இன்ஸ்பெக்டர்! ஏன் கத்தறீங்க?”
“அயோக்கியப்பய சார்! எங்க கம்ப்யூட்டரையே ஊடுருவிட்டான்னா பாருங்க! இது முடியட்டும் ராஸ்கல்! யாருக்காக நீ இதப்பண்ணினேன்னு பிச்சி எடுத்து விஜாரிக்கறேன் பாரு!”
“ஷட் அப் இன்ஸ்பெக்டர்! கெட் அவுட்! ப்யூலா! இவர வெளில அனுப்பு! நீங்க போய்ட்டு சாயங்காலமா வாங்க!”
“சார் ரிப்பொர்ர்ட் ரெடி பண்ணி வெச்சிடுங்க!”
“ஐ நோ மை ஜாப்! யூ க்ளியரவுட் ரைட் நௌ! ப்யூலா! இன்னும் ஒரு மணி நேரம் யாரையும் உள்ள அனுப்பாத! டாக்டர் ரஞ்சன் குமாரை உடனே வரச்சொல்லு!”
அடுத்த ஒரு மணி நேரம் மூவரும் பேசுதல். பெரியவரைப்பார்க்க வந்த அவினாஷ், நிர்மலா அஸிஸ்டண்ட் ரெஜிஸ்டிரார் எல்லோரும் காத்துக்கொண்டிருந்துவிட்டுபோய்விட்டனர்.
முதலில் டாக்டர் ரஞ்சன் குமார் வெளியேறினார்.
“ரஞ்சன்! நாட் ய வோர்ட்!” என்னும் பெரியவரின் அதட்டல் கேட்டது.
“ப்யூலா! நம்ம முரளிக்கு காண்டீன்லேர்ந்து ஒருசாப்பாடு வரவழை!முரளி!நீ இங்கியே என்னோட சாப்பிடு,என்ன?”
முரளி உற்சாகத்தோடு சரிங்க என்று தலையாட்டியது ப்யூலாவுக்கு ஆச்சரியம். சாப்பிட்டு முடித்தவுடன் மறுபடி ப்யூலாவைக்கூப்பிட்டார்.
“நான் கொஞ்சம் வெளியே போகணும்! முரளி இங்கியே இருக்கட்டும். அவனுக்கு என்னோட கம்ப்யூட்டரைக்குடு. அவன் ஏதோ கேம்ஸ் விளையாடப்போறானாம்!”
“ஓகே புரொஃபசர்!”
“முரளி! ஒன்லி கேம்ஸ்! வேற எந்த சேட்டையும்பண்ணக்கூடாது!”
முரளி சிரித்தவாறே ”சரிங்க சார்” என்றான்!
“என்னகதிரவன்? பெரியவர்ட்டேர்ந்து ரிப்போர்ட் வந்தாச்சா?”
“பெரியவரே வந்திருக்கார் சார்!”
ஓ! வாங்க டாக்டர்! என்ன நீங்களே..?”
”உங்க கிட்ட தனியாப்பேசணும்! முரளிபத்தி!”
”ஓகே!கதிரவன் நீங்க கொஞ்சம்வெளில இருங்க!”
கதிரவன் ஏமாற்றத்தோடு டாக்டரை முறைத்துக்கொண்டே வெளியேறினார்.
ஒரே வாரத்தில் முரளி மீதான கேஸ் பேப்பர்கள் மூடி வைக்கப்பட்டன. முரளியின் பெற்றோர் கமிஷனர் ஆஃபீசுக்கு வரவழைக்கப்பட்டு எட்வர்டே அவர்களுடன் நீண்ட நேரம் பேசினார். நடுவில் ஜெனரல் ஆஸ்பத்திரிக்கும் ஜார்ஜ் கோட்டைக்கும் ஃபோன் போட்டு அவர்களைப்பேசவைத்தார். அடுத்த வாரத்தில் முரளிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அவலகத்தில் சைபர் செக்யூரிட்டி பிரிவில் ஜூனியர் லெவல் சிஸ்டம் அனலிஸ்ட் வேலை தரப்பட்டது.
இன்னும் ஒரே நிகழ்ச்சியுடன் கதையை முடிக்கலாம்:
பொதுப்பணித்துறை டெண்டர் விவகாரத்தில் லஞ்சம் வாங்கி காண்டிராக்ட் குடுத்த முறைகேடில் துறையின் உதவி மேலாளரும் மந்திரியின் பிஏவும் கைது செய்யப்பட்டு, அந்த மந்திரி கிராம பஞ்சாயத்துத்துறைக்கு மாற்றப்பட்டார்.