CS 118
“ வாங்க! அப்பா எப்படி இருக்கார்?”
“ பரவால்ல டாக்டர்! இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது!”
“குட்! சீனியரும் அதான் சொன்னார்!”
“இப்ப இன்னொரு ப்ராப்ளம் டாக்டர்!”
”என்ன ப்ராப்ளம்?”
“போன மாசம் வளர் ஹாஸ்பிடல்ல அப்பா அட்மிட் பண்ணியிருந்தோமே, ஆமா அதுக்கு ஆன செலவு மூண்ரை லட்ச ரூபாய். அதுல ரெண்டரை லட்சம் இன்ஷுரன்ஸ் குடுத்தாங்க!”
“தெரியுமே! நா சொல்லித்தானே அட்மிட் ஆனாரு
அப்பா! அவங்க மட்டும் ஒழுங்கா பார்த்திருந்தா இப்ப இந்தக்கஷ்டம் வந்திருக்காது. இத்தனை வலி இல்லாம சரி பண்ணியிருக்கலாம்!”
“உங்க சீனியர் பாத்தவுடனே சொல்லிட்டாரே!”
“அவர் லேசுப்பட்ட ஆளில்ல! ஆமா, ஏதோ இன்ஷுரன்ஸ் ப்ராப்ளம்னீங்களே?”
“ஆமாம் டாக்டர்! இப்ப ஜெனெரல் ஆஸ்பிடல் சார்ஜுக்கும் அப்ளை பண்ணினோம்.! ஏன்னா கவரேஜ் இதுக்கும் சேர்த்துத்தானே இத்தனை வருஷம் ப்ரீமியம் வாங்கினாங்க!”
”கரெக்ட்!”
“இப்ப என்னடான்னா, அந்த வளர் ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட் தப்பு. இப்ப ஜெனெரல் ஆஸ்பத்ரில பண்றதுதான் சரி, அதனால அந்த க்ளெயிம ரிஜக்ட் பண்ணிட்டாங்களாம். குடுத்த ரெண்டரை லட்ச ரூபாய இண்டரஸ்டோட திருப்பித்தரச்சோல்றாங்க!”
“வாட் நான்சென்ஸ்!” என்ன பண்ணினீங்க?”
“அதான் உங்ககிட்ட அட்வைஸ் கேட்கலாம்னு…!”
“கொஞ்சம் இருங்க என் சீனியர்ட்ட பேசிட்டு சொல்றேன்!”
“சொல்லு நரசிம்மா! என்ன சொல்றார் உன் பேஷண்ட் போஸ்ட் மாஸ்டர் ஜெனெரல் ரிடயர்ட்!”
“ஹீ ஈஸ் இம்ப்ரூவிங் சார்!”
“ஹீ மஸ்ட் பி! இனிமே அந்த வளர் ஹாஸ்பிடலுக்கு யாரையும் அனுப்பதப்பா நரசிம்மா! தே ஆர் ஜஸ்ட் எக்ஸ்டார்ஷனிஸ்ட்ஸ்!”
“இப்ப இன்ஷூரன்ஸ் கம்பெனியும் சேர்ந்துட்டாங்க சார்!”
”என்ன ஆச்சு?”
…………………………
“அட்ராஷியஸ்! அந்தப்பையன எங்கிட்ட அனுப்பு! நானே அஃப்ஃபிடவிட் தரேன்! இன்ஷூரன்ஸ் கம்பெனிய கோர்ட்ல பாத்துக்கறேன்னு சொல்லிடச்சொல்லு!” ப்ளடி க்ரூக்ஸ்!”
“கேஸ் நம்பர் CS 118! ராஜகோபாலன் versus மினிமம் காஸ்ட் இன்ஷூரன்ஸ் கம்பெனி!”
“என்னப்பா என்ன கேஸ்?”
“வில்ஃபுல் நெக்லெக்ட்! அப்புறம் ராங் க்ளெயிம் மை லார்ட்!”
”சுருக்கமா சொல்லுங்க! எனக்கு மூணு மணிக்கெல்லாம் போகணும்! கம்ப ராமாயணம் சொற்பொழிவு இருக்கு!”
“எஸ் மைலார்ட்!”
”ஓகே! டிஃபெண்டண்ட் ப்ளீ என்ன?”
”நாங்க வில்ஃபுல்லா பண்ணலை மைலார்ட்! டாக்டர் அட்வைஸ் படிதான் செஞ்சோம்.!”
”இன்ஷூரன்ஸ் என்ன கேட்கறாங்க!”
”செட்டில் பண்ணின க்ளெயிமும் அதுக்கான வட்டியும் அபராதமும்!”
“டாக்டரோட அஃப்ஃபிடவிட் இருக்கா?”
”சப்மிட் பண்ணியிருக்கோம் டாக்டர்!”
“ப்ளெயிண்டிஃப் என்ன சொல்றாங்க?”
“மை லார்ட்! இன்ஷூரன்ஸ் க்ளயிம் பண்றதுக்காக டாக்டரும் இவங்களோட conspire பண்ணி அஃப்ஃபிடவிட் குடுத்திருக்காரு! நீங்க அத அட்மிட் பண்ணக்கூடாது!”
”அந்த அஃப்ஃபிடவிட் குடுங்க!”
ஜட்ஜ் படித்தல்.
”நா ப்ளெயிண்டிஃப் இன்ஷுரன்ஸ் கம்பெனிகிட்ட ஒரு தரம் நேரடியா கேட்க விரும்பறேன்! நீங்க நேர்மையாத்தான் இந்த கேஸ் ஃபைல் பண்ணியிருக்கீங்களா?”
”மை லார்ட்!”
“கேட்ட கேள்விக்கு பதில், எஸ் ஆர் நோ?”
“எஸ் மைலார்ட்! எங்க கிட்ட முழு விவரங்களும் இருக்கு.!
“உங்களுக்கு தெரியுமா இந்த பேஷண்ட், அதான் அந்த ரிடயர்ட் போஸ்ட் மாஸ்டர் ஜெனெரல் இப்ப ஜெனெரல் ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட்டுல இருக்கார். இந்த அஃப்ஃபிடவிட் கையெழுத்து போட்ட டாக்டர்தானே அவரை கவனிக்கிறார்?”
”ஆமாம் மைலார்ட்! அவர்மேல்தான் எங்கள் கம்பெனிக்கு நம்பிக்கை இல்லை. அவர் ஒத்துழைப்போடுதான் பேஷண்ட் குடும்பம் தப்பான க்ளெயிம் போட்டு எங்ககிட்ட பணத்த வாங்கிட்டாங்க!”
“சரி உங்களுக்கு ஒரு முறை சரி செய்து கொள்ள வாய்ப்பு கொடுத்தும் நீங்க அதைப்பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதோ என் தீர்ப்பு.
“கேஸ் டிஸ்மிஸ்!”
கோர்ட்டில் அசௌகரிய அமைதி.
“இன்ஷுரன்ஸ் கம்பெனி பேஷண்டின் குடும்பத்துக்கு இந்த கேஸ் செலவு முழுதும் கொடுத்து அபராதமாக பத்தாயிரம் ரூபாய் கொடுக்கணும். அடுத்த முறை இந்த கம்பெனி என் கவனத்துக்கு வருமானால் நான் ஒரு கோர்ட் இன்வெஸ்டிகேஷன் ஆர்டர் பண்ணிவிடுவேன்!”
“மைலார்ட்! இன்னும் கேசை ஆரம்பிக்க வேயில்லை.அதுக்குள்ள…!”
“ஆரம்பிக்க என்ன இருக்கு? இன்ஷுரன்ஸ் கம்பெனி வக்கீலுக்கு ஒண்ணு சொல்ல விரும்பறேன்! ஒரு கேசை எடுத்துக்கறதுக்கு முன்ன பேசிக்கா நெஜம் இருக்கானு பாத்துட்டு எடுங்க! இல்லேனா உங்க எதிர்காலம் காலியாகிடும்! அஃபிடவிட்ல யார் டாக்டர் கையெழுத்துன்னு பார்த்தீங்களா? அவர் மேலயே நம்பிக்கை இல்லேன்னா சொல்றீங்க! அவர் சம்மந்தப்பட்ட எத்தனை கேஸ் நான் இதே கோர்ட்ல பார்த்திருக்கேன்னு தெரியுமா? ஆகவே, கேஸ் டிஸ்மிஸ்!
எல்லோரும் வாயடைத்துக்காத்திருக்க, ஜட்ஜ் தொடர்ந்தார்.
மிஸ்டர் க்ளார்க்! கோர்ட்டை க்ளியர் பண்ணுங்க! CS 124 நாளைக்கு பத்து மணிக்கு போடுங்க!
கோர்ட் கலைகிறது.