டாக்டர் வைகுண்டம் & விஸ்மயா
யார் யார் வாய்க்கேட்பினும்……தாம்பரம் ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷன் பைலட்டுகளுக்கு டிரெய்னிங் அளித்து அவர்களை ரெடி பண்ணும் ஸ்தலம் என்பதுதான் பொதுவாக அறியப்பட்ட சமாச்சாரம். ஆனால் அந்த ஸ்டேஷனில் முழுமையாக ரெடி செய்யப்பட்ட ஒரு அறை மட்டும் யாருக்கும் அனுமதி இல்லாத பிரதேசம். அங்கே வரும் ஆஃபீசர்கள் ஜீன்ஸ் கூலர்ஸ் சகிதம்தான் வருவார்கள். அவர்கள் இந்திய உளவுத்துறை ஆசாமிகளும் ஏர் ஃபொர்ர்ஸ் இண்டெலிஜென்ஸ் எனப்படும் விசேஷ உலவு ஆசாமிகள்.
அன்று காலையிலேயே அந்த அறை பரபரப்பாக இயங்கியது. வழக்கமாக டீ கொண்டு போகும் சந்திரன் நிறுத்தப்பட்டான்.
“இந்தப்பக்கமே வரக்கூடாது!”
அன்று காலை டெல்லியிலிருது அமைதியாக வந்திறங்கிய ஏர் ஹெட்குவார்ட்டர்ஸ் ஸ்க்வாட்ரனின் எம்ப்ராயர் லெகஸி ஜெட் விமானத்தில் நால்வர் வந்திருந்தனர். ஏர் கமாடோர் ராத்தோர், விங் கமாண்டர் அபிமன்யு, ஃப்ளைட் லெஃப்டினெண்ட் விஸ்மயா மற்றும் எம்ப்ராயரை செலுத்திய பைலட் ஆஃபீசர்.
டேபிளின் முன் விரித்த படத்தின் முன் இவர்கள் மூவர் மற்றும் தாம்பரத்தின் சீஃப் சுக்பிர் ஆவானா குனிந்து பேசிக்கொண்டிருந்தனர்.
“ஆர் யூ ஷ்யூர் ராத்தோர்? ரா இந்த மாதிரி அப்பப்போ பொரளி கிளப்புவாங்களே?”
”இல்லை ஆவானா! தெ வேர் வெரி ஷ்யூர் திஸ் டைம்!”
“ருஹுணு குமனா ஒரு டென்ஸ் வனப்பகுதியாச்சே?”
“ரிமெம்பர், அது ஹம்பன்தோட்டா ஹார்பருக்கு அருகில்!”
“ருஹுனு குமனா ஒரு பாதுகாக்கப்பட்ட சைட். நேஷனல் பார்க் வேற. அங்கியேவா? ஹவ் டேரிங்!”
ஆமாம். அந்த ஆபத்தான மலைச்சரிவுலதான் சைனா ந்யூக்ளியர் ரியாக்டர் செட் அப் பண்றாங்களாம்!”
“என்னது ந்யூக்ளியர் ரியாக்டரா? அங்க முடியுமா?”
“ஸ்மால் மாட்யுலர் ரியாக்டர் தான்! ஆனாலும் நமக்கு ஆபத்துதான்!”
அபிமன்யு குறுக்கிட்டான்.
“ரெகான் பண்ணிடலாமா?”
“இம்பாஸிபிள்!”
மறுத்தார் ஆவானா.
”அங்கே காத்து மைக்ரொ பர்ஸ்ட்ஸா வீசும். டென்ஸ் ஏரோசோல் கிளவுட் ப்ளேன் ரேடார் வேவ்ஸை முழுமையாக முடக்கிடும்! யு வில் ஹேவ் நோ கைடன்ஸ்!”
”அது மட்டுமில்ல ராத்தோர். அங்க பறக்கணும்னா முன்னூறு அடிக்குள்ள காண்ட்டூர் ஃப்ளையிங்ல பறக்கணூம். ஆனா அந்த ருஹுனு ஹில்ஸோட பள்ளத்தாக்குல 300 அடி கூட உயரம் கிடைக்காது..ஓ நோ! ஸ்யூஸைடல்!”
”அண்ட் சுக்கோய் 1200 மைல்ஸ் வேகத்துல…. டைரக்ட் ரெஸிப்பி ஃபார் கிராஷ்!”
விங் கமாண்டர் அபிமன்யு இடைமறித்தான்.
”ஐ வில் ஃப்ளை ரிகான்!”
ஏர் கமாடோர் ராத்தோர் கிட்த்தட்ட சப்தம் போட்டார்.
“அபி! விளையாடாதே! உன்னை இழக்க முடியாது. நாம கிரவுண்ட் ரிகான் பண்ணிக்கலாம். ஐ வில் டாக் டு தி மினிஸ்டர்!”
“நோ கமாடோர். ஐ கேன் டு இட்!. விஸ்மயா! ஆர் யூ ரெடி?”
“எனி டைம் வித் யூ, பார்ட்னர்!”
விஸ்மயா சிரிப்போடு சொல்ல, இருவரையும் வியப்புடன் பார்த்தார் ஆவானா.
“வாட் கைண்ட் ஆஃப் க்ரீச்சர்ஸ் யூ டூ!”
“சுக்கோய் இருக்கா?”
டிரெயினிங்குக்காக ஒண்ணு வந்திருக்கு. எஸ் யூ 30 2MKI போதுமா? அத தயார் பண்ணிடலாம்! ஓகே லெட் மி கெட் மை டீம்! ரெடியாகறோம்!”
அடுத்து நாள் அதிகாலை சுக்கோய் விமானம் அபிமன்யூவின் கமாண்டிலும் விஸ்மயா விங்-வுமனாகவும் பறந்தது. கடல் மட்டத்திலிருந்து வெறும் 250 அடி உயரத்தில், சுக்கோய் காக்பிட்டில் விங் கமாண்டர் அபிமன்யூவின் மூச்சு ஆக்ஸிஜன் மாஸ்க்கிற்குள் சீராக இயங்கிக் கொண்டிருந்தது.
அந்தச் செங்குத்தான பள்ளத்தாக்கிற்குள் ரேடார் சிக்னல்கள் கட் ஆகியிருந்த நிலையில், ஹை ரிஸல்யூஷன் தெர்மல் இமேஜிங் கேமரா மூலம் அணு உலையின் 'நியூக்ளியர் சிக்னேச்சரை' வெற்றிகரமாக டிஜிட்டல் ஃபைலாகப் பதிவு செய்தார் அபிமன்யூ.
மிஷன் முடிந்தது!
ஆனால், மலை இடுக்கிலிருந்து வெளியேறி 32,000 அடி உயரத்திற்குச் செங்குத்தாக ஏறும் போது, அல்டிமீட்டர் முள் கிறுகிறுவெனச் சுழன்றது. காக்பிட் டிஸ்ப்ளேயில் ஹைட்ராலிக் ஃபெய்லியூர் மெயின் பஸ்' என்ற சிவப்பு எச்சரிக்கை மின்னியது.
"விஸ்மயா... சிஸ்டம் கெட்டிங் லாக்ட்," அபிமன்யூவின் குரலில் லேசான நடுக்கம்.
அவருக்குச் சற்றுப் பின்னால், சர்வதேச எல்லைக்கு வெளியே தன் விமானத்தில் காவலுக்குப் பறந்து கொண்டிருந்த ஃப்ளைட் லெஃப்டினெண்ட் விஸ்மயா உடனே ரேடியோவில் அலறினாள், "ஈகிள்-1! பேக்-அப் ஃப்ளைட் கன்ட்ரோலுக்கு மாறுங்க! யூ ஆர் லூசிங் ஆல்டிடியூட் ஃபாஸ்ட்!"
அபிமன்யூ 'ஜாய்ஸ்டிக்'-கை பின்னோக்கி இழுக்க முயன்றார். ஆனால், அவரது வலது கை விரல்கள் தன்னிச்சையாக விறைத்துப்போயின. கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தன. 5... 4... 3... ஜி-ஃபோர்ஸ் அவரது உடலை இருக்கையோடு அழுத்த, விமானம் தலைகீழாக சுழன்றது.
"எஜெக்ட், அபி! எஜெக்ட் பண்ணுங்க!" விஸ்மயா கத்தினாள்.
கடைசி வினாடியில், அபிமன்யூவின் இடது கை எஜெக்ஷன் ஹேண்டிலைப் பிடித்து இழுத்தது. 'கேனோபி' வெடித்துச் சிதற, ராக்கெட் சீட் அவரை வான்வெளியில் தூக்கி எறிந்தது. இந்தியப் பெருங்கடலின் எல்லைக்கு அருகில் அவர் பாராசூட்டில் இறங்கினாலும், காற்றின் கோர வேகத்தில் அவரது உடல் ஃப்யூஸ்லேஜ் பகுதியில் பலமாக மோதியது.
சென்னை ஜெனரல் ஹாஸ்பிட்டலின் தீவிர சிகிச்சைப் பிரிவு.
டாக்டர் வைகுண்டம் தனது தடிமனான பிரேம் போட்ட கண்ணாடியைக் கழற்றி, மேஜை மீது வைத்தார். அவரது கண்கள் ஸ்கேனிங் ஃபிலிம்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தன.
"செரிப்ரல் லேசரேஷன், மல்டிபிள் ரிப் ஃபிராக்சர்ஸ், அப்புறம் லேசான நியூமோதொராக்ஸ்" என்றார்.
அருகில் அவினாஷ், "புரொஃபசர், சர்ஜரி முடிஞ்சு சர்குலேட்டரி சிஸ்டம் ஸ்டேபிள் ஆயிடுச்சு. ஆனா..."
"ஆனா, அவரோட பிளட் டாக்சிகாலஜி ரிப்போர்ட்ல
'பிராமிபெக்சோல்' 0.5 மில்லிகிராம் இருக்கு, அதானே?"
பெரியவரின் குரலில் ஊசி முனை கூர்மை.
அவினாஷ் தடுமாற்றத்தோடு பேசினான்.
"அது... அது பார்கின்சனுக்கான இனிஷியல் ஸ்டேஜ் டிரக் புரொஃபசர்! அப்படீன்னா….!"
"எக்ஸாக்ட்லி!" வைகுண்டம் எழுந்து நின்றார்.
"ஒரு பைட்டர் பைலட், தன் கைகள் நடுங்குறதை மறைக்க, இந்திய விமானப்படைக்குத் தெரியாம இந்த மாத்திரையைத் திருட்டுத்தனமா சாப்பிட்டிருக்கான்! இதனாலதான் காக்பிட்ல அவனுக்கு மோட்டார் ஃப்ரீஸ் ஆகி ஆக்ஸிடெண்ட். இது நேர்மையில்லாத செயல். கிரிமினல் நெக்லிஜென்ஸ்!"
அப்போது, அறையின் கதவு பலமாகத் திறக்கப்பட்டது. ஏர் கமாடோர் ரத்தோர், முழு ஆர்மி யூனிஃபார்மில் உள்ளே வந்தார்.
"டாக்டர் வைகுண்டம்! விங் கமாண்டர் அபிமன்யூவோட மெடிக்கல் க்ளியரன்ஸ் சர்ட்டிஃபிக்கேட்ல நீங்க கையெழுத்துப் போடணும். இது ஒரு சாதாரண மெக்கானிக்கல் ஃபெய்ல்யூர்ன்னால நடந்த ஆக்ஸிடெண்ட்டுனு மெடிக்கல் போர்ட்டலுக்கு ரிப்போர்ட் அனுப்பிடுங்க. ஐ வில் டேக் கேர் ஆஃப் தி ரெஸ்ட்!"
பெரியவரின் சிரிப்பில் உறைபனி குளிர்ச்சி.
"கமாடோர், உங்க அதிகாரம் உங்க ஏர்பேஸ்ோட முடியுது. இது என் ஹாஸ்பிட்டல். என் பேனா உண்மைக்கு மட்டுமே கட்டுப்படும். அபிமன்யூ தன்னோட நோயை மறைச்சுப் பறந்திருக்காரு. நான் உண்மையான ரிப்போர்ட்டை கோர்ட்-மார்ஷியல் போர்டுக்கு அனுப்புவேன்."
"டாக்டர்! அவரோட 15 வருஷ சேவையை யோசிச்சுப் பாருங்க! அவர் மேல் நடவடிக்கை எடுத்தா, அவரோட மானம், ரேங்க் எல்லாம் போயிடும்!"
ரத்தோர் கர்ஜித்தார்.
"என் ஸ்டெதாஸ்கோப் யூனிஃபார்மைப் பார்த்து இரக்கப்படாது, கமாடோர். தப்பு தப்புதான்!"
"தப்பு இல்லை சார், அது தியாகம்!"
அறை வாசலில் ஃப்ளைட் லெஃப்டினெண்ட் விஸ்மயா நின்றுகொண்டிருந்தாள். அவளது முகத்தில் லேசான காயங்கள், ஆனால் கண்களில் தீப்பொறி.
பெரியவர் நிதானமாகத் திரும்பி, "அண்ட் ஹூ ஆர் யூ?"
"ஃப்ளைட் லெஃப்டினெண்ட் விஸ்மயா, சார்.
அபிமன்யூவோட விங்-மேன்,"
அவள் உள்ளே வந்து வைகுண்டத்தின் டேபிள் முன் கம்பீரமாக நின்றாள்.
"டாக்டர் சர், நீங்க பிராமிபெக்சோல் மாத்திரையைப் பார்த்தீங்க. ஆனா, அந்த மாத்திரைக்குப் பின்னாடி இருக்குற 'ஃப்ளைட் டெலிமெட்ரி டேட்டா'வை பார்க்கல!"
வைகுண்டம் புருவத்தை உயர்த்தினார்.
"மேக் மி அண்டர்ஸ்டாண்ட், யங் லேடி?"
"ஷ்யூர் சர்!"
விஸ்மயா ஒரு ஐ பேடை மேஜை மீது வைத்தாள்.
"அபிமன்யூ சாருக்கு எஸ்ஸென்ஷியல் ட்ரெமூர் இருந்தது உண்மைதான். ஆனா, அவர் அந்த மாத்திரையைத் தானா சாப்பிடல. ஸ்ரீலங்காவோட ருஹுணு குமனா கான்யன்ல சைனா கட்டிக்கிட்டு இருக்குற ரகசிய ந்யூக்ளியர் ரியாக்டரை மேப் பண்ணுற ரெகான்னஸைன்ஸ்-க்காகப் பறக்க துணிஞ்ச ஒரே ஆள் அவர்தான். அந்த டெர்ரைன்' எவ்வளவு கொடூரமானதுனு உங்களுக்குத் தெரியுமா டாக்?"
"என்னது, சீக்ரெட் ந்யுளியர் ரியாக்டரா?"
வைகுண்டம் திடுக்கிட்டார்.
"ஆமா சார்! 250 அடி உயரத்துல, ரேடார் பிளைண்ட் ஸ்பாட்ல, பாறைகளுக்கு நடுவுல சுக்கோயைக் கொண்டுபோய் அந்த டேட்டாவை எடுத்துட்டாரு. சர், இது ஹ்யூமன்லி இம்பாஸிபிள் அட்வென்ச்சர், யூ நோ?”
’பட் லேடி, ஹிஸ் கண்டிஷன்… ஹிஸ் ட்ரக் இண்டேக்…அன் எதிகல் இல்லியா? உங்க ஏர்ஃபொர்ர்ஸுல ரூல்ஸ் கிடையாதா? நீங்க அதையெல்லாம் மதிக்க பண்ண மாட்டீங்களா?”
”ஈஸி டாக்டர், ஈஸி! நீங்க டாக்சிகாலஜி ரிப்போர்ட்ல பார்த்த அந்த கெமிக்கல் ஸ்பைக்... அது ஃப்ளைட்டுக்கு முன்னாடி எடுத்துண்ட டாப்லெட்டுனால இல்ல! எஜக்ட் ஆகி, இண்டியன் ஓஷன்ல விழுந்த அவரை ஸெர்ச் அண்ட் ரெஸ்க்யூ டீம் மீட்டப்போ, அவருக்குக் கொடுத்த அவசரக் கால கோம்பாட் ஸ்டிம்யுலண்ட் இஞக்ஷனால உண்டான கெமிக்கல் ரியாக்ஷன்! ப்ளீஸ் லுக் அட் திஸ் ஃபீல்ட் மெடிக்கல் ரிப்போர்ட்!"
பெரியவர் ஒரு கணம் ஸ்டன் ஆகி நின்ற இடத்தில் உறைந்துபோனார். வேகமாக அந்த ஐபேட் தரவுகளைத் தன் கையால் ஸ்க்ரோல் செய்தார்.
அவரது மூளை கணக்குப் போட்டது.
Mass Spectrometry... Plasma Half-life... Interaction with Adrenaline...
"மை காட்..." பெரியவர் மெல்ல முணுமுணுத்தார்.
"மருந்தோட சைட் எஃபக்ட் இல்லை... அது அவசர சிகிச்சையின் இம்பாக்ட்!"
"எஸ் டாக்டர் சர்!"
விஸ்மயா தொடர்ந்தாள்.
"அபிமன்யூவுக்கு சிறிய நடுக்கம் இருந்தது உண்மைதான். ஆனா, இந்த விபத்துக்குக் காரணம் அது இல்லை ! நம்ம நாட்டோட பாதுகாப்புக்காகத் உயிரைப் பணயம் வச்சு அந்த மிஷனை முடிச்சவர் அவர். இப்போ நீங்க கொடுக்குற ஒரு தவறான ரிப்போர்ட், ஒரு ஹீரோவை தேசத்துரோகியா மாத்திடும்! ப்ளீஸ் டாக்டர்!"
அறையில் சில வினாடிகள் மயான அமைதி நிலவியது. ஏர் கமாடோர் ரத்தோர் பெரியவரின்ன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
வைகுண்டம் மெதுவாகத் தன் பேனாவை எடுத்தார்.
"கமாடோர் ரத்தோர், லெட் மி மேக் இட் க்ளியர். அபிமன்யூ இனி எந்தப் போர் விமானத்தையும் இயக்க முடியாது. பர்மனெண்ட் கிரவுண்டிங் ஃபார் ஆக்டிவ் ஃப்ளையிங். அதை என் ரிப்போர்ட்ல தெளிவா எழுதிடுவேன்."
ரத்தோர் ஏதோ பேச வர, பெரியவர் கையை உயர்த்தினார்.
"ஆனா, இந்த விபத்துக்குக் காரணம் அவரோட அலட்சியம் இல்லை. எமர்ஜென்ஸி மெடிக்கல் ரியாக்ஷன். அதனால் அவர் மீது கோர்ட் மார்ஷல் வேண்டாம். அவர் இனி ஃப்ளைட் இன்ஸ்ட்ரக்டரா இளம் பைலட்களுக்குப் டிரெய்னிங் குடுக்கட்டும்."
ரத்தோர் பெருமூச்சுடன், "தேங்க் யூ, டாக்டர்," என்றார்.
வைகுண்டம் விஸ்மயாவைப் பார்த்தார். அவளது முகத்தில் ஒரு சிறிய புன்னகை அரும்பியது.
"ஃப்ளைட் லெஃப்டினெண்ட் விஸ்மயா... நீ ஒரு நல்ல டாக்டரா இருந்திருக்கலாம்!"
விஸ்மயா ஆச்சரியத்துடன், "ஏன் சார்?" என்றாள்.
"ஏன்னா, நீ ரொம்ப துல்லியமா டேட்டாவை அனலைஸ் பண்ற!".
"ஆனா டாக்டர் சர், நீங்க ஒரு மோசமான ஆர்மி மேனாக இருந்திருப்பீங்க1”
”ஒய்?
‘... ஏன்னா, நீங்க ஆர்டர்ஸுக்குக் கீழ்ப்படியாம, உண்மையை மட்டும்தான் கவனிக்கறீங்க!"
விஸ்மயா கம்பீரமாக நிமிர்ந்து நின்று, வைகுண்டத்திற்கு ஒரு ‘ஸ்மார்ட் சல்யூட்’ அடித்தாள்