வசுந்தரா & வைகுண்டம்
”ம்ஹும்…அது
வேற நியாயம்…
வசுந்தராவின்
குரல் பக்கத்தில் இருப்பது போல உறுமியது.
“எஸ் வசு?”
”என்ன? அந்த
ராம்பாபுவுக்கு 45% இன்க்ரிமெண்ட் போட்ருக்கே?”
“ஹி டிஸர்வ்ஸ்
இட், வசு!”
“லைக் ஹெல்,
ஹி டஸ்! யூ அண்ட் டி சரித்திரத்திலேயே இவ்ளோ இன்க்ரிமெண்ட் யாருக்கும் கிடச்சது இல்ல!
என்ன ஏதானும் லிம்கா ரிகார்ட் கிரியேட் பண்றியா?”
”ஒ நோ வசு!
அவன ரெக்ரூட் பண்ணினபோதே அவனோட ஈக்வலெண்ட் ஸ்டாஃபுக்கும் குறைவான சம்பளம் தான்! ஆனா
ஹிஸ் பர்ஃபாமன்ஸ் ஈஸ் ட்ரெமெண்டஸ்! வெல்லூர் ஸி அண்ட் எஃப் டெப்போ மட்டுமே 125% க்ரோத்
லாஸ்ட் இயர்!அண்ட் யூ நோ தட்!”
“எஸ் ஐ நோ!
ஆனா இவ்ளோ இன்க்ரிமெண்ட்?”
“இல்ல வசு!
அவன மோடிவேட் பண்ணனும்னு பாக்கறேன்! ஐ டெல் யூ! அடுத்து வருஷம்
ஹி வில் ஏர்ன் ஹிஸ் சாலரி ஸிம்ப்ளி இன் ஒன் க்வார்ட்டர்!”
“அதுவும் ஓகே.
ஆனா அதுக்காக 45%..? மன்ஸுக் என்னை நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து மாதிரி பார்ப்பார்!”
“அண்ட் வாட்
கைண்ட் ஆஃப் யூஃபெமிஸம் ஈஸ் தட்?”
“சொன்னா உனக்கு
புரியாது! எங்க ஊர் ஃபேமஸ் ரைட்டர் சொல்லுவார்!”
“சுஜாதா, ஐ
நோ! பட் வசு! இந்த ராம்பாபு மாட்டர், என் முடிவுப்படி விடு. யு வில் நாட் ரிக்ரெட்!”
“சரி நீ இவ்ளோ
பிடிவாதம் பிடிக்கறேன்னா விஷயம் இருக்கும்! ஓகே ஐ வில் மானேஜ் வித் மன்ஸுக்! அண்ட்
பை தி வே, டெல் ராம் பாபு! நான் அப்ரிஷியெட் பண்ணினேன்னு!”
“ஓஹ் சொல்றேன்!
தி கிரேட் வசுந்தரா உன்னை பாராட்டிட்டாங்கப்பான்னு சொல்லிடறேன்!”
”கட் தட் காமெடி
மித்தேஷ்!”
மித்தேஷ் சிரித்துக்கொண்டே
ஃபோனை வைத்துவிட்டு ராம்பாபுவைக்கூப்பிட்டான்.
நான்கு மாதங்களுக்குப்பிறகு..
அந்த ஸ்கூட்டர் பேய் போலப்பறந்தது. ஈஸி ஆர்
டிராஃபிக் இல்லாத மதியம் அத்தனை ஏகாந்தம். எதிர்காற்று முகத்தில் தெறிக்க
மணிக்கட்டின் திருகலில் வேகம் அவனுக்கு போதை அளித்திருக்க வேண்டும். இடது புறம்
தூரத்தில் நீலம் பாரித்த கடலின் நடுவில் வெள்ளை நுரைக்கோடுகள். மேலே ஒன்றிரண்டு
நாரைகள் மதிய சியஸ்டாவுக்குப்போய்க்கொண்டிருக்க, தூரத்துப்பனை
மரங்களின் வரிசை. அன்று காலை அதே ரோடில் பயணித்த ராமசாமி
லாரி சர்வீஸ் வண்டியின் பின் புறத்திலிருந்து விழுந்த ஒற்றைக்கருங்கல் ஜல்லியின்
கூர் முனை அந்த ஸ்கூட்டரின் முன் சக்கரத்தை நிரடிய
கணப்பொழுதில் ………….
அஸ்ஃபால்ட்
ரோடு கீறல் போடப்பட, சக்கரங்களின் ரேடியல் டயர் கிழிந்து நூலாக எஞ்சினும் கருங்கல்
தரையும் பொறிபறக்க உரசின ஃப்ரிக்ஷனில் ஸ்கூட்டர் சரிந்து ஓட, பயணித்த ஆசாமி முதுகு
தேய்ந்து ரத்தக்கதறலோடு ஏதோ தெருவோர ரியல்
எஸ்டேட் அறிவிப்பு போர்டின் நுனியில் ணங்கென்று மோதி…..
“ ராஜு! அட்மிட் தெம்! நவ்! ட்ரௌமா கேர்ல வரச்சொல்லு!”
“ டாக்டர்! ஆள் சிங்கிங்! பல்ஸ் பிலோ 30!”
“விழுந்த அதிர்ச்சியில அப்படியே இடது புறமா தூக்கி எறிஞ்சிருக்கு! அந்த
நெருஞ்சிப்புதர் மேல விழுந்ததால ஸ்கல் தப்பிச்சுது. உடம்புல முள் இஞ்சுரி! ஷாக்!
ட்ரௌமா!”
” என்ன ஸ்டேடஸ்?”
“ விப்லாஷ், நெக் ஸ்டிரெயின், லாஸிரேஷன்
அண்ட் ஸ்கின் பேர்ன்ஸ்!”
“இண்டர்னல் ஃபங்ஷன் எப்படி?’
“ப்ரெயின் டாமேஜ் பாஸிபிள்!. லிவர், லங்ஸ் ஹார்ட் ஆல் இன் குட் கண்டிஷன்!”
“ பட், இம்பாக்ட்ல ஹி ஈஸ்
இன் ய டீப் கோமா!”
“இப்பவே இண்டர்மிடண்ட் சீஷர், கன்வல்ஷன் இருக்கு!
லுக் அட் த ஐஸ்! தோஸ் ப்யூபில்ஸ்!”
“முழுக்க டைலேட் ஆகியிருக்கு புரொஃபசர்!”
“கோமாலேர்ந்து எழுந்துப்பானா மாட்டானா?”
“சொல்ல முடியாதும்மா!
ப்ரெயின் ஹெமர்ரேஜ் ஆகியிருக்கு!”
“அய்யோ! ப்ளீஸ்!
ஒரே புள்ள! கொடுக்கு! எழுப்புங்க ப்ளீஸ் எழுப்புங்க!”
“டிரை பண்றோம்ம்மா!
கொஞ்சம் பொறுமையா இருங்க!
“கோமாலேர்ந்து
அப்படியே செத்துட்டா நானும் செத்துருவேன்! ப்ளீஸ்!”
“அம்மா! பதறாதீங்க!
ஏதானும் செய்ங்க!
எம்ப்புள்ள வேணூம்! எனக்கு வேணூம்!
“இருங்க இருங்க!
அவினாஷ்! இந்தம்மா இப்படி கூவுதே! எதுனா செய்யேன்!
”ஆவ்ரில்! செய்யலாம்!ஆனா
அதோட எஃபக்ட் விபரீதமாப்போய்ட்டா..? பெரியவர் என்னைக்கொன்னுடுவாரு!”
“அவினாஷ்! என்ன
செஞ்சா கோமாவுலேர்ந்து எழுப்பலாம்?”
“டிஃபால்ட்
அஸெண்டிங்அரௌஸல் நெட் ஒர்க்கைத் தூண்டி விடணூம்!”
“எனக்கு புரியல
அவினாஷ்!”
“த பாரு ஆவ்ரில்!
இப்பத்தான் இது பத்தி கண்டு பிடிச்சிருக்காங்க! பிரெயின் ஸ்டெம். தாலமஸ், ஹைபோதாலமஸ்
அண்ட் பேஸல் ஃபோர்ப்ரெயின் எல்லாத்தையும் லிங்க் பண்றதுக்கு பேரு வெண்ட்ரல் டெக்மெண்டல்
ஏரியா. அத்த தட்டி விடற மெடிகேஷன் செஞ்சா…”
”செய்ப்பா!
அம்மா இப்டி கூவுதே! பையன் அப்டியே பூட்டான்னா, தி கில்ட் வில் கில் அஸ் மேன்!”
“தயக்கமா இருக்கு
ஆவ்ரில்! இன்னும் முழுசா ப்ரூவ் ஆகாத விஷயம்!”
“அவினாஷ்!நீ
தானே டாக்டர்! எதுனா முடிவெடு! இல்லேன்னா அந்தம்மாட்ட சொல்லிடு, முடியாதுன்னு!
அவினாஷ் தயங்கினான்.
பிறகு அந்தப்பெண்ணைப்பார்த்தான். கதறிக்கதறி உடல் நடுங்கிக்கொண்டிருந்தாள். மூச்சு
பதட்ட மூச்சாய் கேவலாய் வந்தது. அவினாஷ் செயல்பட்டான்.
அவன் வாயிலிருந்து
ட்யூபை எடுக்கச்சொன்னான். நீண்ட குழாய் செருகிய ரப்பர் பட்டையை மூக்கில் பொருத்தினர்.
“ஸ்டர்ட் தி
கோலோடைன் ட்ரிப்!
“ஸ்டார்ட்டிங்
தி கோலோடைன் ட்ரிப்!
பதில் கன்ஃபர்மேஷன்
வந்தது.
இப்போது அவன்
வாய் மூலம் மூச்சு விடும் சப்தம். க்ளக் க்ளக்கென்று தொண்டைக்குள் நீர்க்குமிழிகள்
உருண்ட ஓசை. கண் இமைகள் படபடத்தன.
“பாருங்கம்மா!
இதப்பாருங்க!
“ஆ எம்புள்ள
இருக்கான்! இருக்கான்! கொடுக்கா! கொடுக்கா! என்னைப்பாரு அம்மா வந்திருக்கேன் பாரு என்னைப்பார்த்து
சிரி! கண்ணசைச்சு காட்டு!”
ராம்பாபு கண்கள்
இன்னும் படபடத்தன.
”மேக் இட் எயிட்
மில்லிகிராம்ஸ் பர் ஹவர்!”
அதே க்ளக் க்ளக்!
தொண்டைக்குமிழிகள்!
”ஆவ்ரில்! டிரக்
வேலை செய்யுது!”
”அவினாஷ்! ஆனா
எத்தனை நாழி! எதுனா டேஞ்சர் ஆயிடப்போவுது!”
ஆவ்ரில் சொல்லி
முடிப்பதற்குள்” வாட்ஸ் ஹேப்பனிங் ஹியர்?”
இடிச்சத்தத்துடன்
பெரியவர் வந்துவிட்டார். பேஷண்ட்டின் நிலமையைக்கவனித்தார். கண்கள் சிவந்தன. கோபம்.
நெற்றி சுருங்கியது. படபடப்பு. உதட்ட ச்சுழித்தார். இடி மின்னல் வரும் அறிகுறி
“ஹு டிட் திஸ்?
கோலோடைன் ட்ரிப்! வாட் தி ஹெல் ஈஸ் திஸ்?
”புரொஃபசர்!
இந்தம்மா பேஷண்ட் உயிரோட இருக்கானா இல்லியான்னு படபடத்தாங்க. கிரிட்டிகல். அதனாலதான்
கோலோடைன்….?”
அவினாஷ் முடிப்பதற்குள்
பேஷண்ட் உடல் உதறிப்போட்டது. வாயில் ரத்தம் தெரிய விதிர்த்தான். மேலும் ரத்தக்குமிழ்கள்.
பெரியவர் உடனே உஷாரானார். சப்தம் உச்சத்தில் போனது.
”ஸ்டாப் தி
ஆம்ப் ஆஃப் எபி!”
”செக் பல்ஸ்!”
”கிளியர் தி
ஏர் வே!ஆவ்ரில்?”
”80/60. டிசெரிப்ரேட்டிங்
புரொஃபசர்!”
”லோயர் தி ஆக்ஸிஜன்!”
”டென் லிட்டர்ஸ்
அண்ட் ரன்னிங் புரொஃபசர்!”
”ஹை ஃப்ளோ 2!
ரைட் நவ்!”
”புரொஃபசர்!
ப்யுபில்ஸ் ஆர் ஃபிக்ஸெட் அண்ட் டைலெட்டட்!”
”ஆப்னெயிக்
90/70!”
புரொஃபசர் ஆணையிட்டார்.
”ஆல்கனைஸ் ஹிஸ்
யூரின்! ப்ரெப் ஹிம் ஃபார் ஹேமோபெர்ஃப்யூஷன்! அண்ட் எனக்கு அவனோட ஸி பிஸி லைட்ஸ் வேணூம்.
கால் ந்யூரோ! ப்ரோண்டோ!”
ஆபரேஷன் தியெட்டர்
தூள் பறந்த து.
”புட் த எண்டொட்ராக்கியல்
ட்யூப்! ஆம்ப்யூ பாக் குடுங்க! க்விக்!”
”புரொஃபசர்!
ஐயாம் பாக்கிங்!”
”அவினாஷ்! என்ன
பண்ணினே? இவனோட நெலமை தெரியாதா உனக்கு? ஒய் தி ஹெல் கோலோடைன் ட்ரிப்? அப்படி என்ன அவசரம்
அவனை கோமாவிலிருந்து அடிச்சு எழுப்ப?”
”இல்ல புரொஃபசர்!
அவங்கம்மாதான்…..!”
”முதல்ல அவங்கள
வெளில துரத்து! இந்தாம்மா! கெட் அவுட் ஃப்ரம் ஹியர்!”
”டாக்டர்! எம்புள்ள!
எம்புள்ள! என்னாச்சு?
“உங்க புள்ளதாம்மா!
ஆனா உசுரோட வாண்டாமா? இப்ப கண் முழிச்சுட்டு அப்புறம் செத்தா ஓகேவா?”
”அய்யோ! ஏழுகொண்டலவாடா!”
”பின்னெ? நாங்க
எதுக்கு இருக்கோம்! நீங்க போங்க! ஆவ்ரில்! இந்தம்மாவ வெளில கூட்டிட்டு போ. ப்யூலாட்ட
சொல்லி காபி குடுக்கச்சொல்லு! அவினாஷ்! பிளண்டர்! ஹிமாலயன் பிளண்டர்!”
”சாரி! சாரி!
புரொஃபசர்!”
அவினாஷ் பயத்திலும்
குற்ற உணர்ச்சியிலும் தடுமாறினான். பெரியவரின் குரல் இப்போது இளகியது.
“இந்த எக்ஸ்பெரிமெண்ட்டெல்லாம்
இன்னும் ரெடியாகல அவினாஷ்! நீ என்ன இவன ஸ்லீப்பிங்
ப்யூட்டின்னு நெனச்சியா? ஒன் கிஸ் அண்ட் எழுந்து உக்காந்துருவான்னு பாத்தியா? டாம்மிட்!
ஹி ஈஸ் நாட் ரோஸாமண்ட் ஐ ஸே!”
“ஸாரி அகெயின்
புரொஃபசர்!”
”சாரி சொல்லாத!
கத்துக்கோ! இனிமே கத்துக்கோ! இன்னொரு தரம் தப்பு பண்ணினே, ஐ வில் ஈட் யூ ஃபார் டின்னர்!”
அவன் அடுத்து ஏழு நாள் கோமாவில் இருந்து பின்னர் கண் திறந்தான். இன்னும்
பத்து நாளில் முழுமையாக நினைவுகளைப்பெற்றான். அடுத்து மூன்று
மாதத்தில் ஃபிஸியோதெராப்பியில் எழுந்து நடக்க ஆரம்பித்தாலும் வாக்கர் உதவி தேவையாய்
இருந்தது. பேச்சு இன்னும் கொஞ்சம் மழலை கலந்து லேசான குழறலுடன் தான் வந்தது. அடுத்து வாரம் ஆஃபீசுக்குப்போனான்.
“நீ இன்னும்
ஒரு வாரம் லீவுலயே இரு ராம்!”
ராம்பாபுவை
அனுப்பிவிட்டு மித்தேஷ் வசுந்தராவுக்கு ஃபோன் பண்ணினான்.
“வீணா! மித்தேஷ்!
நீட் டு ஸ்பீக் டு யுவர் பாஸ்!”
“சாரி மித்தேஷ்!
மேம் இஸ் இன் லண்டன் ஃபர் தி நெக்ஸ்ட் த்ரீ டேஸ்!”
”வெல்கம் வசுண்டரா!
யு லுக் மோர் பியூடிஃபுல்!”
”தாங்க் யூ
சர் வில்லியம்! ஆண்ட் ஹவ் ஈஸ் லேடி வில்லியம்ஸ்?”
“ஒ! தி ஓல்ட்
ஈகிள் ஈஸ் ஃபிட் லைக் ய ஃபிடில்!”
“ஸோ வசு! ஹவ்
ரெடி ஈஸ் யுவர் ஸ்பீச்?”
“சர் வில்லியம்!
எனக்கு உங்கள் மேல் கோபம்! இரண்டு நாள் டைம் கொடுத்து கான்ஃபரன்ஸில் பேச்சொன்னால் எப்படி?
தயார் செய்ய வேண்டாமா? அண்ட் திஸ் ஈஸ் க்ளோபல் ஆடியன்ஸ்!”
“என்ன பண்ணுவது
வசுந்தரா! யூ அண்ட் டி டைரக்டர் ஹெச் ஆர் சர் ராபர்ட் உடல் நிலை சரியில்லை. என்லார்ஜ்ட்
ப்ராஸ்ட்ரேட்! சர்ஜரி பண்ணியாக வேண்டுமாம்! அவருக்கு இணையாக பேசக்கூடியவள் நீ மட்டும்
தானே?”
“உங்கள் புகழ்ச்சிக்கு
நன்றி! ஆனால் நான் என்ன ஹெச் ஆர் நபரா?”
“அதெல்லாம்
எனக்குத்தெரியும்! நீ ஜமாய்த்துவிடுவாய்! யூ ஹேவ் ய பியூட்டிஃபுல் ப்ரெயின் டூ!”
ஸீஸர் பெலி
என்பவரால் வடிவமைக்கப்பட்ட கேனரி வார்ஃப் சப் வேக்கு எதிரில் இருக்கும் அபார தி பெல்லிங்டன்
என்னும் பெரிய கான்ஃபரன்ஸ் வளாகத்தில் யூ அண்ட் டியின் க்ளோபல் சம்மிட் தொடங்கியது.
பலரும் பவர் பாயிண்ட் ஸ்லைடுகள் போட்டு பேசினபிறகு ஹெச் ஆர் சப்ஜெக்டில் பேச வசுந்தரா
எழுந்தாள். போடியத்தில் நின்று கையிலிருந்த சீராக டைப் அடிக்கப்பட்ட குறிப்புகளிலிருந்து
வெள்ளம் போல பேச்சு. அடித்துச்சாய்க்கும் உண்மைகள். உலகின் மற்ற வெற்றி நிறுவங்களின்
ஹெச் ஆர் பாலிஸிக்களின் சாதக பாதகங்கள். ஆனால் வசுந்தரா பேச்சின் சாராம்சம் என்னதான்
திறமை பர்ஃபார்மன்ஸ் லாபம் வெற்றி என்பது முக்கியம் என்றாலும் நம் ஊழியர்களிம் நாம்
காட்டும் மனிதாபிமானமே தலையாயது. எப்போது மனிதாபிமானத்தை மீறி கம்பெனி நன்மைக்காக ஊழியரின்
நன்மையை பாதிக்கிறோமே அன்றே நம் அழிவு தொடங்கிவிடும்!”
பேச்சின் முடிவில்
காரசார விவாதம்.
மனிதாபிமானமெல்லாம்
பார்த்தால் கம்பெனி நடத்த முடியாது என்னும் கருத்து பலரால் வைக்கப்பட்டாலும் வசுந்தரா
ஒரு முரட்டுத்தன ஆணித்தரத்துடன் மனிதாபிமானம் தான் என்று முடித்தாள்.
“வசுவைப்பத்தி
தெரியாதா? பர்ஃபார்மன்ஸ் குறைந்தால் இவள் தான் அந்த ஊழியரை வெளியே விரட்டும் முதல்
ஆள்!”
டின்னரின் போது அடுத்து சில டேபிள்களில் சில தேசத்து யூ அண்ட் டியின் ஸி ஈ ஓக்கள்
ஓரக்கண் பார்வையுடன் தங்களுக்குள் பேசினதை வசுந்தராவே கேட்டாள்.
அடுத்து வாரம் வசுந்தரா
மும்பையில் தன் அறைக்குள் நுழைந்தவுடன் மன்ஸுக் உட்கார்ந்திருந்தார். வீணா நின்றிருந்தாள்
“என்ன மன்ஸுக்,
யாரு உங்கள் தலையைத்தின்பது?”
“மித்தேஷ்!
ராம்பாபு தலை வேணூமாம்!”
“வாட்!”
நிலமை விவரிக்கப்பட்டது.
”கனெக்ட் மித்தேஷ்!”
“ஓ வசுந்தரா!
வந்துவிட்டீர்களா? இந்த மாச சேல்ஸ் காலி!”
“என்ன சொல்கிறாய்?”
“ராம்பாபு ஈஸ்
அவுட் ஆஃப் ஆக்ஷன்! மாதக்கடைசியில் நீயே என் சேல்ஸ் குறைந்தால் குதறி எடுப்பாய்! எனக்கு
ரிப்ளேஸ்மெண்ட் வேணூம்! டிட்டெயில்ஸ் ஆர் ஆல்ரெடி வித் மன்ஸுக்!”
“அப்ப ராம்பாபு?”
“ஐயாம் செண்டிங்
ஹிம் அவுட்! சாரி! வேற வழியில்லை!”
“மித்தேஷ்?”
“நோ இல் ஃபீலிங்ஸ்!”
“ராம்பாபு இப்பத்தான்
சாவுலேர்ந்து பொழச்சிருக்கான்!”
“அப்ப சேல்ஸ்
குறைஞ்சா என்னைக்கேக்கக்கூடாது!”
“ஓகே வெயிட்
! கிம்மி ஒன் ஹவர்!”
”வீணா கெட்
மி சென்னை ஜி ஹெச்!”
“புரொஃபசர்!
கால் ஃப்ரம் மும்பை!”
அண்ட் ஹு ஈஸ்
காலிங்?”
“வசுந்தரா!”
சரி கொடு! ஒய்
ஆர் யூ காலிங் நவ்! இப்ப ஹாஸ்பிடல் பிஸி டைம்!”
”சாரி அங்கிள்!
ரெண்டே நிமிஷம்!”
”ஷூட்!”
”உங்க பேஷண்ட்
ராம்பாபு? என் எம்ப்ளாயி!”
”ஹி ஈஸ் ஃபைன்
நவ்!”
“நடை தடுமாற்ரது.
பேச்சு குழறுது அங்கிள்!”
“யெஸ்! அன்ஃபார்ச்சுனேட்!
அதோடதான் அவன் வாழக்கத்துக்கணூம்!”
“இம்ப்ரூவ்
ஆகாதா?”
”மிராக்கிள்
தேவை! அண்ட் ஆர் யூ கோயிங் டு டிஸ்மிஸ் ஹிம்?”
“யோசிக்கணும்
அங்கிள்!”
“ஏன்மா?”
“ராம்பாபுவால
குடுக்கற சம்பளத்துக்கு ஜஸ்டிஃபை பண்ணி வேலை செய்ய முடியாதே?”
”இல்லை வசு!
அது வேற ஞாயம்! ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்!”
“…………………………!”
“யூ ஆர் மை
கேர்ள்! உங்கப்பன் எப்படி இருக்கான்!”
“சேம் அங்கிள்!
ஈவினிங் ஃப்ரீ ட்யுஷன்! அம்மா, வடை சுண்டல்
ஃப்ரீ ஸ்னாக்ஸ்!”
“நல்ல மனுஷங்க!
ஓகே, ஐ காண்ட் வேஸ்ட் எனிமோர் டைம்!”
அன்று மாலையே
மித்தேஷுக்கு இன்னொரு சேல்ஸ்மன் அனுப்பப்பட்டான். சேல்ஸ் பிளானிங் செக்ஷனுக்கு புரொமோஷனுடன்
வந்த ஆசாமியின் தள்ளாடு நடையும் குழறலான பேச்சும் சில நாட்களுக்கு பேசப்பட்டு அடங்கிவிட்டது.
அந்த மாதக்கடைசியில்
லண்டனிலிருந்து வந்த புதிய ஹெச் ஆர் கொள்கை அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் நடந்த செமினாரின்
விளைவாக இனிமேல் “யு அண்ட் டியின் ஒவ்வொரு மானேஜரும் தாம் எடுக்கும் ஊழியர் சம்மந்தப்பட்ட
முடிவுகளில்”எம்பத்தி” என்னும் மனிதாபிமானத்துக்கு முதல் இடம் தரப்பட வேண்டும்” என்ற
புதிய மாற்றம் க்ளோபல் சர்க்யுலாரக சொல்லப்பட்டிருந்தது
மும்பையில்
எப்போதும் போல மழைகொட்டித்தீர்த்தது.
Good
ReplyDeleteONE MORE FEATHER ON VASUNDARAS HAT. CONGRATULATIONS SIR. GOD BLESS YOU AND YOUR FAMILY FOREVER. WITH REGARDS RANGRAJAN SRIDHAR.
ReplyDelete"மதிய சியெஸ்டாவிற்காகப்போன. நாரைகள்"- நீலக்கடற்பரப்பில் வெள்ளை நுரைக்கோடுகள்!" : என்ன ஒரு ப்யூட்டிஃபுல் வரிகள்?!?
ReplyDeleteவசு, வைகுண்டம்& வாத்யார் மூவரும் ஒரே கதையில்!!!! வாவ்!!
சுதாகர்- சென்னை
🌹
ReplyDeleteOutstanding lyrics brilliant 👏. Empathy makes us more humane
ReplyDeleteஅவசரத்தில் ராம்பாபு ராமசாமியா ஒரு நொடியில் மாறிவிட்டானோ.
ReplyDeleteசார் சின்ன வேண்டுகோள். தயவுசெய்து இந்த AI படங்கள் வேண்டாம். முதலில் இருந்தே வைகுண்டத்தையும்/வசுந்தராவையும்/விபா/வினுலா வையும் தொடர்ந்து படித்ததால் – அவர்கள் பற்றிய ஒரு அழகான படம் பிம்பமாக மனதில் பதிந்து இருக்கிறது. இந்த AI படங்கள் அந்த கேரக்டரிகளின் தனி குணாதிசயளை கெடுத்து விடுகிறது. நன்றி
ReplyDeleteI concur with you. Somehow, they don't seem to be apt.
Deleteராமசாமி லாரி சர்வீஸ் வண்டியின் பின் புறத்திலிருந்து விழுந்த ஒற்றைக்கருங்கல் ஜல்லியின் கூர் முனை அந்த ஸ்கூட்டரின் முன் சக்கரத்தை நிரடிய கணப்பொழுதில்
ReplyDeleteஅஸ்ஃபால்ட் ரோடு கீறல் போடப்பட, சக்கரங்களின் ரேடியல் டயர் கிழிந்து நூலாக எஞ்சினும் கருங்கல் தரையும் பொறிபறக்க உரசின ஃப்ரிக்ஷனில் ஸ்கூட்டர் சரிந்து ஓட,
What a beautiful narrative..... கண் முன் கொண்டு வந்த ஆக்சிடென்ட்... well-done Mr.Raghu.
புதிதாக, புதிய வார்த்தைகளில் பாராட்ட நான் JR இல்லையே! Planning dept இல் ராம்பாபு contribution அடுத்து வேண்டும். He has to justify Vasu's empathy. ! He will !
ReplyDeleteS. Jothilakshmi
ReplyDeleteரெண்டு ஆதர்ச ஹீரோஸ் சேர்த்த கதை நிச்சயம் நல்லா தானே இருக்கும் …As usual the way you connected both is interesting n மனிதாபிமானம் முக்கியம் என்ற உங்களது கருத்து அற்புதம் சார் 🙏
Usha Subramanian. One more story that touches the heart.The beauty of empathy in corporate life.decisions.
ReplyDeleteமனதைத் தொட்ட கதை. முடிவு எதிர்பாராதது. சபாஷ்!
ReplyDeleteமருத்துவர்கள் தம்மிடையே ஆங்கிலத்தில் பேசிக்கொள்வர் என்பது உண்மைதான், மறுக்கவில்லை. ஆனால், 'ரியலிஸம்' என்ற பெயரில், முக்கால்வாசி ஆங்கில உரையாடல்களை தமிழில் அப்படியே தந்திருக்க வேண்டுமா? அங்கங்கே தந்தால் போதாதா? படிப்பதற்கு அதிக முயற்சி எடுக்க, கதையின் சுவாரசியம் குறைந்தது.
அபாரம்
ReplyDelete