Tuesday, 11 September 2018

கதையரங்கம் 12 செப்டம்பர் 2018
வக்கீல் வேதாந்தம்
”வா உப்பிலி! என்ன ஸ்கூல் அக்கப்போர் கொண்டு வந்திருக்கே இன்னிக்கு?”
“ இல்லேண்ணா! இன்னிக்கு ஸ்கூல் சமாச்சாரம் ஒண்ணும் இல்ல. உங்ககிட்ட பேசணும்னு…!”
“என்ன மென்னு முழுங்கற? போ மன்னி இன்னிக்கு மெந்தியக்குழம்பும் தேங்காய்த்தொகயலும் பண்ணியிருக்கா. நா சாப்பிடும்போது சொல்லிண்டே இருந்தா. உப்பிலிக்கு ரொம்பப்பிடிக்கும்னு! திருக்கழுக்குன்றம் கழுகு மாதிரி வந்துட்டே! போ போய்ச்சாப்பிடு முதல்ல!”
“வேண்டாம்ண்ணா! ”
உப்பிலியின் குரலில் இருந்த மாற்றத்தை கிரகித்துக்கொண்ட வக்கீல் வேதாந்தம் நிமிர்ந்தார்.
“என்ன கவலை உனக்கு உப்பிலி?”
“ நா கேள்விப்பட்டது……?”
என்ன கேள்விப்பட்டே?”
“அந்த மாங்குடி மிராஸ்தார் சாமா கேஸ நீங்க எடுத்துண்டு இருக்கேளாமே?”
“ உன் வரைக்கும் சேதி வந்துடுத்தா? ஆமாண்டா! எடுத்துண்டிருக்கேன்! என்ன ஃபீஸ் தெரியுமா? ஒரு லட்ச ரூவா! அப்படியே உங்கிட்ட குடுத்துர்ரேன். ஸ்கூலுக்கு வெச்சிக்கோ! அடுத்த ஒரு வருஷத்துக்கு இந்த மாசம் துண்டு அடுத்த மாசம் இடிக்கறதுன்னு நீ விசனப்படவே வேண்டாம்!”
“இல்லேண்ணா! அந்தப்பாவக்காசு ஸ்கூலுக்கு எதுக்கு? வாண்டாம்னா!”
”என்ன உப்பிலி! எனக்கே அட்வைஸா? எது பாவம் எது புண்ணியமெல்லாம் நீயும் நானும் முடிவு பண்றதில்ல. அந்த ரங்கன் பண்ண வேண்டியது!”
“அப்ப அந்த ரங்கந்தான் உங்கள ஒரு லட்ச ரூவாய்க்கு கேஸ் ஒத்துக்க சொன்னானா?”
வேதாந்தத்தின் குரல் கடுமையாகியது.
“உப்பிலி! ஸ்கூல் விஷயம் ஒண்ணும் இல்லேன்னா நீ உள்ள போய் மன்னிட்ட கேட்டு சாப்பிட்டுட்டு புறப்படு!”
“எனக்கு இந்தாத்து சாப்பாடு இனிமே வாண்டண்ணா! நா ஹோட்டல்ல சாப்பிட்டுக்கறேன்!”
அடேடே! உப்பிலியா? வா வா! உன்னத்தான் நெனச்சுண்டே இருந்தேன்! வா வந்து சாப்பிட்டுட்டுப்போ! இன்னிக்கு மெந்தியக்குழம்புடா!”
“இல்லேடி! அவனுக்கு இன்னமே நம்மாத்து தளிகை வாண்டாமாம். சார் ஹோட்டல்ல சாப்பிடப்போறார்! விடு போட்டும்!”
“என்னன்னா இது! அவனோட வெளையாடிண்டு..நீ வா உப்பிலி!”
”இல்லே மன்னி! நா கிளம்பறேன்!
உப்பிலி விருட்டெனக்கிளம்ப, மாமி திகைத்து நிற்க, வேதாந்தம் கேஸ் ஃபைலுடன் ஆஃபீஸ் அறைக்குள் போனார்.
காலையில் காப்பி குடிக்கும்போது மாமி கேட்டாள்.
“இப்பவாவது சொல்லுங்கோ! உப்பிலிக்கு என்ன கோவம்?”
‘ அவனுக்கு நான் மாங்குடி கேஸை எடுத்துண்டது பிடிக்கல! எடுத்துக்கக்கூடாதுங்கறான். பாவம் அது இதுன்னு அதிகப்பிரசங்கியாட்டமா பேசினான். போடா வாயை மூடிண்டுன்னுட்டேன். அதான்!”
“நானே கேட்கணூம்னு நெனச்சேன்! எல்லோருமெ பேசிண்டாளே அந்த மாங்குடி மிராஸுதார்தான் எமாத்திப்ட்டார்னு. அவர்ட்ட ஏமாந்த அத்தனை பேருமே சின்னச்சின்ன விவசாயிகளாமே!”
“ஏண்டி உனக்கு இத்தன டீடெய்ல் எப்படி தெரியும்?”
“எல்லாம் டிரைவர்தான் சொல்லிண்டு இருந்தான். அவனுக்குப்போய் நம்ம அய்யா ஏம்மா ஆஜராகிறார்னு அவனுக்கு விசனம்!”
“இன்னமே நான் ஒரு கேஸை எடுத்துக்கணும்னா இவாள்ட்டல்லாம் கிளியரன்ஸ் வாங்க்கிக்கணும் போலருக்கு!’
”அது இல்லேன்னா! அந்த மிராஸ்தரப்பத்தி உங்களுக்கே தெரியும். நாலு மாசத்துக்கு மிந்தி நாம கொடவாசல் போனபோது அத்திம்பேர் அவன் பண்ற லேவா தேவி அயோகியத்தனத்தைச்சொல்லி சொல்லி மாஞ்சு போனாரே!”
“இன்னமே நா கேஸ் எடுத்துக்கணும்னா காந்தி வந்தா மட்டும்தான் ஒப்புக்கணுமா? என் தொழில் வக்கீல் தொழில். எனக்கு என் கிளையண்டும் அவன் குடுக்கற ஃபீஸும்தான் முக்கியம். தொழிலுக்கு துரோகம் பண்ணாம இருக்கணும் அவ்வளவுதான்! கொலைக்குத்தம் பண்ணினவனுக்கே வக்கீல் வெக்கணும் தெரியுமோனோ!”
”அதில்லைன்னா, அவனால அழிஞ்ச குடும்பம் ஒரு கிராமத்துக்கே காணும்னு சொன்னாரே அத்திம்பேர். அதும் அந்த பட்டாளத்தான் வீட்டைப்பிடுங்கிண்டு அவம்பொண்ணை நாசமாக்கி, கீழ்க்கோர்ட்டுல காசு குடுத்து சாதகமா தீர்ப்ப வாங்கிண்டான். அந்த சாமிக்கண்ணு மேல் கோர்ட்டுக்கு போனான்னு அவனையே ஆள வெச்சு கொன்னுப்டான்னு ஊரே பேச்சாயிருக்குன்னு சொன்னாரே!”
”கொடவாசல் அத்திம்பேர்தானே! திண்ணையில உக்காண்டு அக்கப்போரா பேசிண்டு இருக்கார். வாய்க்கு வந்தத உளறார்! நீயும் கேட்டுண்டு எங்கிட்ட வந்து பிலாக்கணம் பாடாத! போ! என்னை கேஸப்படிக்க விடு! அடுத்த திங்கக்கிழமை ஹியரிங் வரும் போலருக்கு!”
வந்தது.
திங்கள் கிழமை
”ஓ! சவரிராஜனா பிராஸிக்யூஷன்? உங்க மாடசாமி கேஸ் டெல்லி வரைக்கும் போயிடுத்து போலருக்கே? போறீரா?”
“இல்லை மை லார்ட்! டெல்லி வக்கீல ஏற்பாடு பண்ணிட்டாங்க!”
”ஓ சரி! இப்ப என்ன சார்ஜ்?”
“ஹோமிசைட் மை லார்ட்! ஓப்பன் அண்ட் ஷட் கேஸ்! நேர்ல பார்த்த சாட்சி இருக்கு!”
“அத நான் இல்ல சொல்லணும்! வேதாந்தம்! உங்க டெஃபென்ஸ் என்ன ப்ளீ?”
“நாட் கில்டிதான் மை லார்ட்!”
”ஓகே பிராஸிக்யூஷன்! ஆரம்பிங்க! சொற்பொழி வெல்லாம் கூடாது!”
சவரிராஜன் விலாவரியாக கேஸை ஆரம்ப முதல் விவரித்தார்.
விவசாயி சாமிக்கண்ணு கொல்லப்பட்ட வேலிக்காத்தான் முள் வெளியிலிருந்து மாங்குடி மிராஸ்தார் சாமா நடந்து போனதை நேரில் பார்த்த மாங்குடி ஜோஸியர் மத்தளராஜு முக்கியமான சாட்சி. அதுவும் கொலை நடந்த கால் மணி அவகாசத்தில் சாட்சி மிராஸ்தார் சாமாவை மேற்படி இடத்தில் பார்த்திருக்கிறார்.
”மைலார்ட்! ஃபர்ஸ்ட் டிகிரி மர்டர், வாலண்டரி மான்ஸ்லாட்டர் அண்ட் கல்பபிள் ஹோமிசைட்! மென்ஸ் ரியா ப்ளஸ் ஆக்டஸ் க்யூரியஸ் ரெண்டும் வெட்ட வெளிச்சம்!”
”உங்க லைன் ஆஃப் அர்க்யூமெண்ட் என்ன வேதாந்தம்?”
“கேஸுல அடிப்படையே தப்பு மை லார்ட்! கொடுக்கல் வாங்கல் பிஸினஸுல ஏகப்பட்ட மனஸ்தாபங்கள் வர வாய்ப்புக்கள் இருக்கு. அதெல்லாம் மென்ஸ் ரியாவுல கொண்டு வர்ரது அபத்தம். விக்டிமோட ஏதோ சம்மந்தம் இருக்குங்கறதுக்காக ஒரு இன்னசண்ட் ஆசாமியை கிரைமோடு சேர்த்து மென்ஸ் ரியாவைத்தேடிண்டு போய் ஒட்ட வெக்கறதும்…... ஐயாம் சாரி மைலார்ட்! வெரி ஜுவெனைல் ஆர்க்யூமெண்ட்!”
“ஐ அப்ஜெக்ட் மை லார்ட்! வேதாந்தம் இன்சல்டிங்காப்பேசறார்!”
“வேதாந்தம்! தட் வாஸ் ஹார்ஷ்!”
”சாரி மை லார்ட்! நா சொல்ல வந்தது கர்த்தார் சிங் வெர்ஸஸ் ஸ்டேட் ஆஃப் பஞ்சாப் கேஸ எப்படி வேணா அப்யூஸ் பண்ண முடியாது! சாட்சி சொல்வதெல்லாம் வெறும் சர்காம்ஸ்டான்ஷியல் மட்டுமே! அஸால்ட் அண்ட் பாட்டரி”, அதாவது அன்லாஃபுல் கண்டின்யூட் டச்சிங் என்பதை அவர்களால் கிட்டத்துல கூட கொண்டு வர முடியல!”
“எக்ஸ்க்யூஸ் மி மைலார்ட்! ஒரு குறுக்கீடு!”
”சொல்லுங்க சவரிராஜன்?”
“ஃபாகன் வெர்ஸஸ் மெட்ரோபாலிட்டன் போலீஸ் கமிஷனர்! இங்லாண்ட் அண்ட் வேல்ஸ் ஒரு கேஸ் போதும். இந்த கேஸுக்கு அப்படியே பொருந்தும் மைலார்ட்!”
”வேதாந்தம்?”
“அப்சர்ட் மை லார்ட்! அவர் சொன்ன கேஸ் ஒரு ஓப்பன் அண்ட் ஷட் கேஸ். இது அப்படி இல்லை!”
“அக்யூஸ்டை நேரில் பார்த்த சாட்சி இருக்குங்கறாரே?”
”இல்லை மை லார்ட்! இங்க நெறய சந்தேகங்கள் இருக்கு!”
” கொஞ்சம் எலாபொரேட் பண்ணுங்க வேதாந்தம்!”
”ஸ்ஹ்யூர் மை லார்ட்! மாங்குடி சாமா அன்னிக்கு மத்தியானம் திரு நாகேச்வரம் லட்சுமி தேட்டர்ல சினிமாவுக்குப்போய்ட்டு வர்ர வழியில அப்படியே காலார நடக்கலாமேன்னு காரை அனுப்பிச்சுட்டு ரெட்டைப்பிள்ளையார் கோவில வழியா அந்த கருவேலங்காட்டு ஒத்தையடிப்பாதையில நடந்து வந்திருக்கார். அதப்பார்த்ததாலேயே அவர் மேல குத்தம் சுமத்த முடியாதே மை லார்ட்! சாமிக்கண்ணுவுக்கு எதிரிகள்னு பார்த்தா நான் இன்னும் மூணு நாலு பேரைச்சொல்லுவேன்!”
”வேதாந்தம்! பிராஸிக்யூஷன் சொன்ன ஃபாகன் கேஸ் ஒரு பிரிசீடெண்ட் இல்லியா?”
”பிரொசீடெண்ட் என்னவோ சரி! ஆனா ரெலெவன்ஸ் இல்லவே இல்லை! மை லார்ட்! நான் வேற பொருத்தமான கேஸ் சொல்றேன்!”
“இந்தியன் கோர்ட் கேஸா சொல்லுங்க! இங்க்லேண்ட் அண்ட் வேல்ஸெல்லாம் இப்ப சப்ஜாடா மாறியாச்சு! இன்னமும் கலோனியல் கேஸெல்லாம் ரெஃபெரன்ஸ் குடுத்து காலத்த ஓட்ட முடியாது!”
“அஃப் கோர்ஸ்! ஆர் வெர்ஸஸ் டால்சன், நதுலால் வெர்ஸஸ் ஸ்டேட் ஆஃப் எம் பி, மல்ஹன் வெர்ஸஸ் கோரா பிபி குட்டி கேஸெல்லாம் பாருங்க மை லார்ட்!. ஒண்ணுல கூட கிளியர் சாட்சியோ அல்லது மென்ஸ் ரியா ப்ளஸ் ஆக்டஸ் ரியூஸோ சேர்ந்து இல்ல! ஆகவே ஒரு கேஸ் கூட நிக்கல!”
” என்ன சொல்ல வறீங்க?”
சாரி மை லார்ட்! பிராஸ்க்யூஷன் ஹோம் ஒர்க் ரொம்ப தேசலா இருக்கு!”
”அக்ஸெப்டட் வேதாந்தம். சவரிராஜன்! உங்க ஸ்டார் விட்னெஸைக்கூப்பிடுங்க!”
“ சரியா சொல்லித்தந்திருக்கீங்களா சவரிராஜன்?”
வேதாந்தம் கிண்டலாகக்கேட்க, சவரி முறைக்க மைலார்ஷிப்புமே சிரித்தார்.
ஜோசியரை வைத்து லீடிங் கேள்விகளாய்க்கேட்டு மாங்குடி சாமாதான் கொலை பண்ணியிருக்கார் என்றும் சாமிக்கண்ணுவை குத்தினதை ஜோஸியர் நேரில் பார்த்தார்போல பிராஸிக்யூஷன் சவரிராஜன் அழகாக ஜோடித்தார். வேதாந்தம் மௌனமாக கவனித்துவிட்டு கிராஸின்போது ருத்ர தாண்டவம் ஆடினார்.
“ஜோசியரே! மாச வருமானமெல்லாம் எப்படி?”
”அந்த ஆதிபுரீச்வரி அருளால ஏதோ வர்ரது!”
“அதான் எத்தனைன்னு கேட்டேன்?”
“என்ன ஒரு மாசம் அம்பாள் மனசு வெச்சா பதினஞ்சாயிரம் வரைக்கும் வரும். இல்லென்னா அஞ்சாயிரத்தக்கூடத்தாண்டாது!”
”மாங்குடியில மட்டும் என்ன வருமானம்வர்ரது?”
”ஊர் கெட்டுப்போச்சுன்னா! யாரும் பெரியவாளையும் ஜோதிஷத்தையும் மதிக்கறதில்ல. அதனால அந்தூர்ல நா யாருக்கும் சொல்றதில்ல. சுத்து வட்டார உர்கள்ள என்னை மதிக்கறா! இதுல பாருங்க, விட்டலூர், பௌண்டரிகபுரம், திருவிடமருதூர், புத்தகரம்னு அத்தனை பேரும் என்னையே சுத்திசுத்தி வரா! அவாளுக்கு ஏதோ என்னாலான ஜோஸ்ய சேவையைப்பண்ணிண்டு வரேன்! ஊர் நன்னா இருக்கணும் இல்லியா? என்ன நாஞ்சொல்றது!”
“போன வருஷம் மாங்குடி சாமா வீட்டுல ஏதோ யாகம் பண்ணினீங்களாமே? உண்மைதானா?”
“அது எதுக்குன்னா சம்மந்தமில்லாம இப்போ?”
ஜோஸியர் இப்போது பரிதாபமாக பிராஸிக்யூஷன் வக்கீலைப்பார்த்தார்.
“மிஸ்டர் சாட்சி! இங்க நாந்தான் ஜட்ஜ்! சம்மந்தம் இருக்கா இல்லியானு நாந்தான் முடிவு பண்ணனும்! அவர் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லும்!”
“மன்னிக்கணூம் பெரிய அய்யா! சொல்றேன்! ஆமா நாந்தான் யாகம் பண்ணி வெச்சேன்?”
”என்ன நடந்தது அப்ப?”
”அதொண்ணுமில்ல வக்கீல் சார்! அவங்களுக்கு நம்பிக்கையெல்லாம் ஒண்ணும் இல்ல. ஏதோ ஆடம்பரத்துக்காக பண்ணினா. என்னையெல்லாம் கூட சரியா மதிக்கல! அவ்வளவுதான் சொல்லணும். மீதி பேச்சு விரயம்தன்!”
“இல்லியே நான் கேள்விப்பட்டது வேற மாதிரின்னா இருக்கு?”
”சார் என்ன கேள்விப்பட்டேள்?”
”அந்த யாகத்துல போடறதுக்கு தங்க தாயத்து பண்ணனும்னு பத்தாயிரம் ரூபா காசு வாங்கி, கடைசில அதுல தங்கமே இல்லேன்னு மாங்குடி சாமா கேள்வி கேட்க, நீங்க ஏதோ அடாவடியா பதில் சொல்லி, ஆதிபுரீஸ்வரி பேரச்சொல்லி சாபம், தெய்வ குத்தம்னு பயமுறுத்தினேளாம். அதுல கோபப்பட்டு மாங்குடி சாமா உம்மை வீட்டை விட்டு வெளியே துரத்தினாராம். அதுலேர்ந்துதான் மாங்குடில யாரும் உம்ம கிட்ட ஜோசியத்துக்கோ பூஜைக்கோ வர்ரதில்லைன்னு………”
“இல்லென்னா! அதெல்லாம் வெறும் புரளி..!”
”அப்ப நீர் சொல்றது மட்டும் நெஜமா? மாங்குடி சாமா சொல்றது புரளியா?”
”ஆமான்னா! அவர் ஒரு துஷ்டர்! கொலையே பண்ண அஞ்சல பாருங்க! சாமிக்கண்ணுவ கொன்னுப்டாரே!”
”ஜோஸ்யரே! ஜாக்கிரதையாப்பேசும்! இன்னும் தீர்ப்பு வரல!”
“மன்னிச்சுக்கோங்கோன்னா!”
“உம்ம வண்டவாளம் வெளிப்பட்டதுனாலதான் நீர் மாங்குடியில் தொழில் பண்ண முடியல. அதான் சாமா மேல காழ்ப்போட எதிரா சாட்சி சொல்றீர்னு நா சொல்றேன்!”
வேதாந்தம்! யுவர் பாயிண்ட் ஈஸ் டேகன். அவரை விட்டுடுமே!”
இந்த ரீதியில் வேதாந்தம் ஜோசியரை சுழற்றி சுழற்றி கொக்கி போட்டு குழம்ப அடித்தார். சாட்சி முன்னுக்குப்பின் முரணாக உளற ஆரம்பிக்க அஸ்திவாரமே கலகலத்துப்போய்விட்டது. கூடவே சாமிக்கண்ணுவின் எதிரிகள் என்று இரண்டு பேரை சம்பவங்களோடு நிலை நிறுத்தி, அந்த ரெண்டு பேருக்குமே அலிபை ரொம்ப வீக்காக இருக்க, ஏன் இவர்களில் ஒருவர் கொன்றிருக்கக்கூடாது என்று திசை திருப்பிவிட்டார்.
மொத்தத்தில் பிராஸிக்யூஷனின் பந்தல் சரிந்து விழ, சந்தேகத்தின் பயனை மாங்குடி சாமாவுக்கு கொடுத்து கோர்ட் அவரை விடுலை பண்ணி விட்டது.
வெளியே வந்த வுடன் முதக்காரியமாக மாங்குடி சாமா, “எலே அந்த ஜோஸ்யனை கூட்டி வாங்கடா! வேஷ்டியக்களத்தி கோமணத்தோட ஓட வெக்கறேன்பாரு!..........” என்று ஒரு தேர்ந்த தஞ்சாவூர் வசவு வெய்ய, வேதாந்தம் அவனை அதட்டி அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தி அனுப்பினார்.
மாங்குடி சாமா மிராஸ்தார் பந்த்தாவை வேதாந்தத்தை உபசரிப்பதில் காட்டினான். அவரை வீட்டுக்கு அழைத்து பெரிய விருந்து கொடுத்தான். விட்டலூர் மிட்டாதார், பௌண்டரிகபுரத்துலேர்ந்து ஒரு டாக்டர், திருவிடைமருதூர் ரைஸ் மில் ஓனர் என்று அவனுடைய சீட்டுக்கட்டு ஜமாவையும் அழைத்து தடபுடலாக அசத்தியிருந்த விருந்தில் சினி ஆக்ட்ரெஸ் ஒருத்தியும் வந்திருந்தாள்.
“ எனுக்கு நெறைய பணம் வராத இருக்குங்கோ! நீங்க கேஸ் போட்டு வாங்கித்தந்தா நான் நெறைய ஃபீஸ் தருவேன்!”
ராமலட்சுமிஸ்ரீ வேதாந்தத்துக்கு தன் விசிட்டிங் கார்ட் கொடுத்தாள்.
”அடவை ராமுடு” என்னும் தெலுங்கு படத்தில் என் டி ராமராவ் ஜெயசுதாவை ஆற்றங்கரையில் கேலி பண்ணிப்பாடும் சீனில் தோழியாக ஒரே ஒரு நிமிடம் வந்திருக்கும் ராமலட்சுமிஸ்ரீ!
சினி ஆக்ட்ரெஸ்!
அன்று இரவே வேதாந்தம் ஸ்ரீரங்கம் போகவேண்டும் என்று கிளம்பிவிட்டார்.
அடுத்த நாள் ஒன்றும் இல்லை. அதற்கு அடுத்த நாள் காலை உப்பிலி ஓடி வந்தான்.
“மன்னி! மன்னி! அண்ணா இல்லியா?”
“என்னடா ஏன் இப்படி அரக்கப்பரக்க வரே! அண்ணா கேஸ் ஜெயிச்சாரோன்னொ, அந்த மாங்குடி சாமா அவரக்கூப்ட்டு அவாத்துல விருந்து அதுன்னு ஏக தடபுடல் பண்ணி ஒரு லட்சம் ஃபீஸும் குடுத்தான். மாமா அப்படியே ஸ்ரீரங்கம் போய்ட்டு நேத்தி இருந்துட்டு இன்னிக்கு காலம்பரதான் வந்தா! உடனே குளிச்சார்! பூஜை ரூமுக்குப்போய்ட்டா! ஒண்ணும் சாப்பிடலை! நானும் அவர் வரட்டுமேன்னு காத்துண்டு இருக்கேன்.!”
அரைமணி நேரம் கழித்து வேதாந்தம் வேளியே வந்தார். கொஞ்சம் சோர்வாக இருந்தார்.
“அண்ணா! அண்ணா! ந்யூஸ் தெரியுமா?”
”யாரு உப்பிலியா? ஏதோ கோச்சுண்டு போனேயேடா! இப்ப எங்க வந்தே? ந்தாடி! அவங்கண்ணுல சோறு காப்பின்னு ஒண்ணையும் காமிக்காதே சொல்லிட்டேன்!
” மன்னிச்சுக்கோங்கோண்ணா!
என்னடா ஏதோ ந்யூஸுன்னியே? கவர்ன்மெண்ட் கவுந்துடுத்தா?”
”அதில்லைண்ணா! நேத்து மாங்குடி சாமாவ யாரோ அடிச்சுக்கொன்னிருக்கா! விவசாயக்கலப்பையால மண்டையில் போட்டு தலை பொளந்து தட்சணமே ஆள் காலியாம்!”
கையில் வேதாந்தத்தின் பயணத்துணிமணிகளுடன் மாமி பதறியபடி ஓடி வந்தாள்.
“என்னடா சொல்றே உப்பிலி! கலப்பையால அடிச்சுட்டாளா?”
”ஆமாம் மன்னி! இன்னிக்கு தமிழ் பேப்பர்ல அல்லோலகல்லோலப்படறதே!”
”அடக்கஷ்டமே! ஊர் முழுக்க பகைன்னா இப்படித்தானாகும்! பகவான்னு ஒருத்தர் எதுக்கு இருக்கார்! அது சரி ஏன்னா! உங்க வேஷ்டியெல்லாம் ஒரே செம்மண் புழுதியா இருக்கு! எங்கியாவது புரண்டுண்டே வந்தேளா?”
”புழுதின்னா நன்னா தோச்சுப்போடேண்டி! அழுக்குப்பண்ணிக்கக்கூடவா எனக்கு உரிமை இல்லை! அத விடு, உப்பிலிக்கு காபி கொடேன்!’
“இதோ! உங்களுக்கும் கொண்டு வரேன்!”
“இல்ல எனக்கு வாண்டாம்! நான் இன்னிக்கு முழுக்க உபவாசம்!”
உப்பிலி வேதாந்தத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அங்கவஸ்திரத்தால் முகத்தை அழுந்தத்துடைத்துக்கொண்ட வேதாந்தம் கேட்டார்.
“உப்பிலி! அந்த ஃபீஸ் லட்ச ரூவாய ஸ்கூலுக்கு எடுத்துக்கறியா சொல்லு?”
”எடுத்துக்கறேன் அண்ணா! சந்தோஷமா எடுத்துக்கறேன்!”
ஸ்பஷ்டமாகச்சொன்னான்
“பரசுராமரே சொல்லும்போது எப்படி வாண்டாம்னு சொல்றது!”
முற்றும்

Tuesday, 4 September 2018

கதையரங்கம் (5, செப்டம்பர், 2018)

பலாப்பழம்…..!

”இன்னும் எவ்வளவு காலம் இந்த கவர்மெண்ட் ஆஸ்பிடல்லியே வேல செஞ்சு உளுத்துப் போகப்போற?”

“கமான் நீரஜா! கவர்ன்மெண்ட் ஆஸ்பிடல்னா என்ன இளக்காரம் உனக்கு? எங்க கிட்ட இருக்கற எக்விப்மெண்ட்ஸ்ல்லாம் உங்க அமெரிக்கா ஆஸ்பிடல்ல கூட இருக்காது, யூ நோ!”

“என்ன சம்பளம் இப்ப உனக்கு அவினாஷ்? ஒரு லட்சம் வாங்குவியா?”

“ம்ஹும்! பிடிப்பெல்லாம் போக எழுவத்தி நாலாயிரத்திச்சில்லறை!”

“லுக் அட் தட்! பீனட்ஸ்! இதுதான் உன் காபினா? எங்க கொலம்பஸ் ஆஸ்பிடல்ல டாய்லெட் கூட இதை விட பெரிசு அண்ட் ய லாட் க்ளீனர்! எட்டு வருஷ எக்ஸ்பீரியன்ஸுக்குப்பிறகும் இந்த மாதிரி சத்தத்துக்கும் அழுக்குக்கும் நடுவுல கிடந்து அல்லல்படப்போறியா? அமெரிக்கா வந்துடு அவினாஷ்! மாசத்துக்கு பன்னண்டாயிரம் டாலர்! வீடு, கார், கிளப் அண்ட் வாட் நாட்?”

“வோய்லா! மாசத்துக்கே எட்டு லட்சமா? ட்டேயப்பா! ஆனா வேண்டாம்!”

“ ஒய் அவினாஷ், ஒய் ப்ளைமி?”

“ பிகாஸ் இங்கதான்…..வெல், உனக்குப்புரியாது நீரஜா!”

“ இல்ல அவினாஷ்! சொல்லேன்! புரிஞ்சுக்க டிரை பண்றேன்!”

”எட்டு வருஷத்துக்கு மிந்தின கதை சொல்லட்டுமா?”

”சே தட்! சே தட் வெல்! என்னால ஒப்புக்க முடியறதான்னு பாக்கறேன்!”

ஜெனெரல் ஆஸ்பிடலின் அந்த மத்தியான வேளையில் ஐ சி யூ வார்டு இருந்த மூன்றாம் மாடியில் காரிடாரில் பரபரப்பு. வெள்ளை கோட் போட்ட இளைஞன் ஐ சி யு கதவைத்திறந்து ஓடி வந்து, அப்படியே சுவரருகே மடங்கி குந்தினாற்போல உட்கார்ந்து…

குலுங்கிக்குலுங்கி அழுததை அந்த காரிடாரே கொஞ்சம் அதிர்ச்சியில் பார்த்தது.

ஸ்ட்ரெச்சர் தள்ளி வந்த சவரிமுத்து, நான்காம் மாடிக்குப்படிவழியாகப்போய்க்கொண்டிருந்த நர்ஸ் வயலெட், பிளட் பாங்கின் ராமன், உள்ளே வெவ்வேறு ஸ்திதியில் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த நோயாளிகளின் உறவினர்கள் என்று எல்லோரும் உறைந்து போய்ப்பார்த்த அழுகை.

அழுதவன் ஒரு இளைஞன்! அதுவும் ஒரு டாக்டர்!

லஞ்ச் முடித்துவிட்டு டீன் அந்த நேரம் பார்த்தா ஐ சி யூவை இன்ஸ்பெக்ட் செய்ய வரவேண்டும்! அவரின் செக்ரட்டரி கூடவே.

“ என்ன ஆச்சு! என்ன பரபரப்பு இங்க?”

யாரும் ஒன்றும் பேசவில்லை. அமைதி.

“ ப்யூலா! யார் அது? லுக்ஸ் லைக் ய டாக்டர்!”

“அ..ஆ மாம் டாக்டர்! அவினாஷ் மாதிரி இருக்கு!”

“அவினாஷ்? ஹெமடாலஜியா? அண்ட் வாட் ஈஸ் ஹி டூயிங் ஹியர்?”

இப்போது சவரிமுத்து டீனிடம் நல்ல பெயர் வாங்கும் அல்ப முயற்சியில் பேசினான்.

“ தோ இப்டீக்கா உள்றேந்து ஓடியாந்தாரு! அப்படியே உக்காந்து அழுவறாரு!”

“ நோ நோ! டாக்டர் அவினாஷ்! பிரேஸ் யுவர்செல்ஃப்! மூவ் அவுட் ஆஃப் ஹியர்! “

அவினாஷ் சுதாரித்துக்கொண்டான். எழுந்து டீனிடம் மன்னிப்பாகப்பார்த்தான்.

“சாரி டாக்டர்! அங்க மை பேஷண்ட்.. பன்னண்டே வயசு.. செத்துப்போய்ட்டா. நா எவ்வளவோ டிரை பண்ணினேன்! அரை மணி முன்னாடி எங்கிட்ட சிரிச்சுப்பேசி பாட்டுப்பாடினா. ஆனா இப்ப..ஷி ஈஸ் நோ மோர்! “

குரல் உடைந்து மீண்டும் அழுகை.

டீனின் குரல் கடுமையாகியது.

”அவினாஷ்! கண்ட்ரோல் யுவர்செல்ஃப்! நீ ஒரு டாக்டர்! நீயே இப்படியெல்லாம் எமோஷனலா ஆகக்கூடாது!

இப்போது குரலைத்தாழ்த்திக்கொண்டு ரகசிய பாவனையில் சொன்னார்.

“திஸ் ஈஸ் ரிடிக்யுலஸ்! ஆஸ்பத்திரி பேரையே கெடுக்கற! உடனே நீ போய் அஸிஸ்டண்ட் டீனையும் அழைச்சிண்டு என் ரூமுக்கு வா! அண்ட் ரைட் நௌ!”

டீனின் வார்த்தையில், நடையில் தோள் குலுக்கலில் சேதாரம் தெரிந்தது. அவினாஷுக்கு பயம். நர்வஸானான். ஓடினான். அஸிஸ்டண்ட் டீன் ஏதோ ரிப்பொர்ட் பார்த்துக்கொண்டிருந்தார். அவினாஷின் நிலமையைப்பார்த்தார்.

“என்ன ஆச்சு அவினாஷ்? கமலா போய்ட்டாளா? நான் இன்னும் ரெண்டு நாளாகும்னு நெனச்சேன்! யூ டிட் யுவர் பெஸ்ட்! ஆனா நம்ம கையில எல்லாம் இல்லியே! அழணும் போல இருக்கா? வா வந்து இங்க உக்காந்துண்டு அழு! நத்திங் ராங்!”

அவினாஷ் உடைந்து மறுபடி அழுதான்.

“ டாக்டர்! ஷி வாஸ் பிரிம்மிங் வித் ஹேப்பினெஸ்! பாடினா! சிரிச்சா! ஓ மை காட்! என் வாழ் நாள் முழுக்க இந்தக்காட்சி என்னைத்தூங்க விடாது! ஐ ஹேட் திஸ் மெடிக்கல் புரொஃபெஷன்!”

அஸிஸ்டண்ட் டீன் பேசாமல் பார்த்தார்.

“ டாக்டர்! நான் ரிசைன் பண்ணப்போறேன்!”

“ரிசைன் பண்ணிட்டு என்ன பண்ணுவே?’

“ஏதாவது பண்ணுவேன்! தோட்ட வேலைக்குப்போவேன். தாலுக்கா ஆஃபீஸ்ல குமாஸ்தாவாப்போறேன் டாக்டர்! ஆனா இந்த வேல வேண்டாம்!”

அஸிஸ்டண்ட் டீன் சிரிக்கவில்லை. அவினாஷ் முகத்தைத்துடைத்துக்கொண்டான். அவர் டேபிளிலிருந்து பாட்டில் தண்ணீரை ஒரு மிடக்கு குடித்தான்.

“அவினாஷ்! நீ கரெக்ட் ரீட்மெண்ட்தான் குடுத்தே? த்ராம்போசைடோபீனியாவுக்கு என்ன பண்ண முடியும்! பிரெயின்ல சிவியர் ப்ளீடிங்! ஏற்கனவே வெரி லோ ப்ளாடெலட் கவுண்ட்! இன்னிக்கு இல்லேன்ன இன்னும் ஒரு வாரத்துக்கு மேல கமலாவால தாக்குப்பிடிக்க முடிஞ்சிருக்காது அவினாஷ்!”

“பட் ஷி வாஸ் ஸோ யங்! பன்னண்டே வயசு! அநியாயம்!”

“ எஸ் அண்ட் நோ! விதி, கடவுள் அண்ட் ஆல் தட், அவினாஷ்!”

அவினாஷ் கொஞ்சம் சுதாரித்தான்.

”சாரி டாக்டர்! டீன் உங்களையும் அழச்சிண்டு என்னை அவர் ரூமுக்கு வரச்சொன்னார்!”

“டீன்?”

“நான் ஐ சியுவுக்கு வெளில அழும்போது அவர் வந்துட்டார்!”

ஓ நோ! சரி விடு! நான் பாத்துக்கறேன்! இன்னும் கொஞ்ச நாழி இங்க இருந்துட்டு அப்புறமாப்போ!”

“இல்லை டாக்டர்! டீன் ரொம்பக்கோவமாயிட்டார். எனக்கு பனிஷ்மெண்ட் உண்டுன்னுதான் நெனைக்கிறேன்!”

“கமான் அவினாஷ்! நீ இங்க டிரெய்னீ ஹெமடாலஜிஸ்ட்! அப்படியெல்லாம் உன்னைப்பனிஷ்பண்ண விடமாட்டேன். டாக்டரும் மனுஷந்தானே! அதுவும் நீ இன்னும் சின்னவந்தான்! இதெல்லாம் அனுபவம்! இதுதான் உன்னை பிற்காலத்தில் கம்பாஷனேட் டாக்டராக்கும். ஜஸ்ட் கெட் கோயிங்! டீன நான் சமாளிக்கிறேன்!”

”அப்ப டீனைப்பார்க்க…..?”

“ஐ செட் ஐ வில் மானேஜ் ஹிம்! நீ போய் கமலாவோட ரிலேடிவ்ஸ் கிட்ட பேசு! அவங்களுக்கு ஆறுதல் சொல்லு. மறுபடி அழுகை வந்தாலும் இட்ஸ் ஓகே!”

நீரஜா தோளைக்குலுக்கிகொண்டாள்.

“அவினாஷ்! என்ன சொல்ல வரே? இதுக்காக நீ அமெரிக்க வராம இங்க கவர்ன்மெண்ட் ஆஸ்பிடல்லயே உழண்டுண்டு இருப்பியா? புரியல! ஐ யாம் அட் ய லாஸ்!”

“நீரஜா! எனக்காக பரிஞ்சு பேசின காரணத்துக்காக, என்னை சஸ்பெண்ட் பண்ண விடாம தடுத்ததுக்காக, மினிஸ்டர் வரைக்கும் போய் எனக்காக பரிஞ்சு பேசின அஸிஸ்டண்ட் டீனைப்பழி வாங்கினார் அந்த டீன். அவருக்கான புரொமோஷன் அஞ்சு வருஷம் தள்ளிப்போச்சு. இதோ ரெண்டு வருஷம் மின்னாடிதான் அவருக்கு டீன் போஸ்டிங் கிடைச்சது! அண்ட் அவரோட அறிவு, பேஷண்ட்டை டீல் பண்ற விதம், அப்புறம் அந்த எதிக்ஸ்….நீரஜா! அவர்ட்ட ஒர்க் பண்ற மாதிரி, அமெரிக்கா என்ன உலகத்துல எங்கியுமே வராது! நோ நீரஜா! டாலர்ஸ் டோண்ட் இண்டெரெஸ்ட் மீ!”

நீரஜா பேசத்தொடங்கும் முன் அந்த சின்ன காபினின் கதவு படாரெனத்திறந்தது.

“வாட் தெ ஹெல் அவினாஷ்? அந்த எட்டாம் நம்பர் பெட்டுக்கு ஆன்காலஜி ரிப்பொர்ட் கேட்டேனே என்ன பண்றே ? யூ ஆர் வெரி லேஸி…..….! “ஓ சாரி! பேஷண்ட்டா?”

“நோ நோ புரொஃபசர்! இது என்னோட கஸின்! நீரஜா! அவளும் டாக்டர்தான், ஆனா இங்க இல்ல. அமெரிக்கால!”

”ஓ கிளாட்! அவினாஷ்! சீக்கிரம் முடி! எனக்கு இன்னும் பத்தே நிமிஷத்துல ரிப்பொர்ட் வரணூம்! ஒரு நிமிஷம் லேட்டானாலும் ஐ வில் ஹேவ் யூ ஃபார் ப்ரேக்ஃபாஸ்ட்! அண்ட் யங் லேடி! என்ன பேர் சொன்னே?

”நீரஜா!”


ஓ யெஸ்! நீரஜா! குட் பை நீரஜா! டோண்ட் டிஸ்டர்ப் மை டாக்டர்ஸ் ஆன் ட்யூடி! சீக்கிரம் கிளம்பு!”

கதவு மறுபடி அடித்துச்சாத்தியவுடன் நீரஜா கேட்டாள்

“ மை காட்! ஹவ் க்ரூட்! ஹூ இஸ் திஸ் டெவில்?”

அவினாஷ் சிரித்தவாறே ”ஓகே நீரஜா! நீ கிளம்பு! எனக்கு வேலை இருக்கு! அண்ட் தாங்க்ஸ் ஃபார் த இன்விடேஷன் டு அமெரிக்கா. ஆனா நோ தாங்க்ஸ் தான் என்ண்ட பதில்! பை தி வே, இவர்தான் அந்த அஸிஸ்டண்ட் டீன்! இப்ப டீன் அண்ட் மை பாஸ்! டாக்டர் வைகுண்டம்!”

நீரஜா கொஞ்சம் அதிகமாகவே கதவை அடித்துச்சாத்தி விட்டு வெளியேறியதை அவினாஷ் புன்னகையோடு கவனித்தான்.