இன்றைய (27, மே, 2021) கதையரங்கத்தில்...
வையகத்தில் உண்டு…
செண்ட்ரல் ஸ்டேஷன் மணிக்கூண்டில் பன்னிரெண்டு அடித்த சப்தம் யாருக்கும் கேட்கவில்லை. எதிரே அந்தப்பெரிய ஆஸ்பத்திரியில் எப்போதும்போல சகலவித ஜன நடமாட்டங்களுடன் ஆனந்தமும், அழுகையும் ரத்தமும் கோபமும் சிரிப்பும் அலட்சியமும் அக்கறையும் வாத்ஸல்யமும் ஊடாடிக் கொண்டிருந்தன.
கன்சல்டிங் ரூம் வாசலில் அந்தப்பெண்மணி கவலையோடு உட்கார்ந்திருந்தாள். அவளின் முகத்தைக்கவனித்த அவ்ரில் அருகில் வந்து தோளைப் பிடித்துக்கொண்டாள்.
“இப்ப இன்னா ஆயிட்சின்னு இப்டி சோகமா உக்காந்திருக்கே? நத்திங் டு வொர்ரி மெய்ஸி! எங்க டாக்டருங்கோ ச்சும்மா இப்டீன்றத்துக்குள்ள கண்டு பிட்ச்சி சொஸ்தமாக்கிடுவாங்க! நீ வேணா பாரேன், ஒரே மாசத்துல நீ ரிகார்ட் ப்ளேயர்ல க்ளீஃப் ரிச்சர்ட் பாட்டப்போட்டு ஆடிக்கினு இருப்பே!”
“பட் ஆவ்ரில்…யூ நோ மீ! இந்த நோவு என்னைப்பாடாய்ப் பட்த்திக்கினு இருந்துச்சே! எத்தினி வருஷம்! டெரிக் சீனியர் கார்ட் புரொமோஷன் அன்னிக்கு ராவு ஆரமிச்சது! வயித்த வலி! இன்னியோட நைன் இயர்ஸ் ஆவ்ரில்!”
“இங்க வண்ட்டே இல்ல, தென் ஒய் ஒர்ரி!”
“வெப்பேரில அண்ட் புர்ஸவாக்கத்ல ஒரு ஆஸ்பத்ரி ஒரு டாக்டர் பாக்கி இல்ல! அல்லாரையும் பாத்தாச்சு! நோ படி குட் க்யூர் மி, ஆவ்ரில்!”
”ஐ நோ ஐ நோ! ஆமா டெரிக் எங்க?”
“ஸ்மோக் பண்ண வெளியே போயிருக்குது!”
“சரி நீ இங்க குந்திக்கினு இரு! நா போய் என்கொயுர் பண்ணிட்டு வரேன்!”
பெரியவர் அறையில் டாக்டர் செந்தில்நாதன் மற்றும் அவினாஷ்.
“என்ன கேஸ், செந்தில்?”
“லேடி! ஆங்லொ-இண்டியன்! மெய்ஸி டெரிக்! 55 இயர்ஸ்! கால் ஸ்டோன்ஸ்!”
”கோலெஸைக்ளோஸ்டைடிஸ்?”
“யெஸ் புரொஃபசர்!”
“வேற என்ன சிம்ப்டம்ஸ்?”
”தீராத வயித்துவலி! மாசத்துல நாலைஞ்சு நாளுக்கு!அக்கர்ஸ் இன் தி நைட்!”
”கால்ஷியம் பாஸிங் த்ரூ!”
“வெரி ட்ரூ!”
“ஸ்டர்ட் தி மெடிகேஷன்!”
அவினாஷ் இடைமறித்தான்.
“புரொஃபசர்! அல்ட்ரா சவுண்டு ரிப்போர்ட்ல அபெர்ரேஷன் இருக்கு!”
“எங்க கொண்டா இங்கே?”
பெரியவர் உன்னிப்பாகப்பார்த்தார்.
“லீஷன் இன் லிவர்! ஐயாம் ஒர்ரீட்!”
“அதான் புரொஃபசர்!”
“உடனே எம் ஆர் ஐ எடுத்துப்பாரேன்!”
“எடுத்துட்டோம் டாக்டர்!”
“அண்ட்…?”
ஒண்ணும் தெரியல! இன்கன்க்ளூஸிவ்!”
“ஸோ…?”
செந்தில்நாதன் கேட்டார்.
“நீடில் பையாப்ஸி எடுக்கலாம்னு சொல்றேன்! அவினாஷுக்கு சம்மதம் இல்லை!”
”ஐ அக்ரீ வித் அவினாஷ், செந்தில்! நீடிலை ரிமூவ் பண்ணும்போது கான்சர் எக்ஸ்ப்ளோட் ஆக வாய்ப்பு இருக்கு!”
”என்ன பண்ணலாம், புரொஃபசர்?”
”கால்ஸ்டோன்ஸுக்கு சர்ஜரிதானே? அப்படியே அந்த கார்னர் போர்ஷன், லெஃப்ட் லோப் தானே, ஆஃப் தி லிவரை, அதையும் ரிமூவ் பண்ணிடலாம்!”
“டன் புரொஃபசர்!”
“அந்த லிவரை பேதாலஜிக்கு அனுப்பி அனலைஸ் பண்ணச்சொல்லு!”
ஆபரேஷன் முடிந்து ஒரு வாரத்தில் மெய்ஸி வீட்டுக்குப்போனாள். போகுமுன் அவளும் டெரிக்கும் செந்தில்நாதனைப்பார்த்தார்கள்.
“மெய்ஸி! இனிமே உங்களுக்கு வயித்த வலி தொல்லை இருக்காது! ஆனா யூ மஸ்ட் கோ ஷார்ட் ஆன் ஆயில் அண்ட் கொலஸ்ட்ரால் ஃபுட்!”
“நா இப்ப மீட் கூட துன்றதில்லை டாக்டர்!”
டெரிக் கேட்டார்.
“மெய்ஸிக்கு ஒண்ணியும் இல்லைதானே இனிமே?”
“வெல், மிஸ்டர் டெரிக், ஒரு பேதாலஜி டெஸ்ட் குடுத்திருக்கோம். ஒரு வாரத்துல ரிஸல்ட் வந்துரும். நீங்க பதினெட்டாம் தேதி வந்து என்னை பாருங்களேன்!”
இருவரும் கவலையுடன் போய்ச்சேர்ந்தார்கள்.
அடுத்த வாரம் டெரிக் மட்டும் வந்து செந்தில்நாதனைப் பார்த்தார்.
“ரிப்போர்ட் வந்துருச்சா டாக்டர்?”
செந்தில்நாதன் கவலையுடன் பார்த்தார்.
“ஐயாம் சாரி டெரிக்! மெய்ஸிக்கு ஹெபாடோசெல்லூலர் கார்ஸினோமா!”
“வாட் டு யூ மீன்?”
“லிவர் கான்சர்!”
டெரிக் உடைந்துபோனார். விசும்பினார். உடல் குலுங்கியது. செந்தில்நாதன் எழுந்து அவர் தோளைத்தொட்டு ஆறுதலாய் தடவிக்கொடுத்தார்.
எதற்கோ அங்கே வந்த ஆவ்ரில் அப்படியே வாசலில் நின்றவாறு கேட்டாள். அதிர்ச்சியாக இருந்தாலும் சட்டென்று சுதாரித்துக்கொண்டு டீன் அறைக்கு ஓடினாள்.
“ப்யூலா! பெரியவர் இருக்காரா?”
“ஆவ்ரில்! உள்ள நிர்மலா…!”
ப்யூலா முடிப்பதற்குள் ஆவ்ரில் உள்ளே போய்விட்டாள்.
“ஆவ்ரில்! என்ன இது? வாட் ஹாப்பெண்ட் டு யூ?”
“டாக்டர்! டாக்டர்! மெய்ஸி..! மெய்ஸிக்கு கான்சராம்!”
“வெயிட்! இவ்வளவு பதட்டம் ஏன்? ஆவ்ரில்! காம் யுவர்செல்ஃப்! நீயெல்லாம் எவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ்ட் நர்ஸ்!”
”டாக்டர்! ஷி ஈஸ் மை ஸிஸ்டர், டாக்டர்!”
“ஓ மெய்ஸி..? ஆங்கிலோ இண்டியன்..?”
“மை ஒன்லி சிஸ்டர்!”
“வாட்? கான்சர்? பேத்தாலஜி ரிப்போர்ட் வந்துடுத்தா?”
“செந்தில் டெரிக்காண்ட சொல்லிக்கினு இருந்தாரு!நா கேட்டேன்!”
“ஸ்டுப்பிட்! எங்கிட்ட முதல்ல டிஸ்கஸ் பண்ன வேண்டாமா? ப்யூலா! கால் செந்தில்! ரைட் நௌ! அண்ட் ஆவ்ரில்! நீ டெரிக்கை காண்டீனுக்கு அழைச்சிட்டு போய் காஃபி வாங்கிக்கொடுத்து கீப் ஹிம் காம்!”
ஆவ்ரில் ஓட, நிர்மலாவும் நகர, டாக்டர் செந்தில்நாதன் உள்ளே வந்தார்.
”செந்தில்! என்கிட்ட டிஸ்கஸ் பண்ணாம நீ போய் டெரிக் கிட்ட…….. நோ நோ! பிளண்டர்!”
செந்தில் கொஞ்சம் அடிபட்டார். கான்சர் டிபார்ட்மெண்ட்டின் தலைவர். ஈகோ இடித்தது.
“பட் புரொஃபசர்! ரிப்போர்ட் ரொம்ப கிளியரா இருக்கு! டையக்நோஸிஸ் ஈஸ் ஸ்க்ரீமிங்!”
பெரியவருக்கு கோபம் குறையவில்லை.
“எல்லா ரிப்பொர்ட்ஸையும் எனக்கு அனுப்பு! அண்ட் செண்ட் டெரிக் டு மீ!”
அரைமணி நேரம் கழித்து டெரிக் உள்ளே வந்தபோது ஆள் வயதாகி இருந்தார். தோள்கள் சுருங்கி அவரின் கறுத்த சிகரெட் உதடுகளும் பியர் அருந்திய இடுங்கிய கண்களும் விரக்தியைத்தொட்டன. கூடவே கண்கள் சிவந்து ஆவ்ரில்லும் வந்தாள்.
“மிஸ்டர் டெரிக்! நானுமே டெய்ஸியோட ரிப்போர்ட்ட பாத்தேன்! கான்சர்னு டெஃபனட்டா சொல்லிட முடியாது! இன்னொரு தரம் நாங்க செக் பண்ணிடறோம். டோண்ட் லூஸ் ஹோப்!”
“எனக்காக சொல்றீங்கல்ல?”
“இல்ல இல்ல! இது மாதிரியான டையக்னோஸிஸ் எல்லாம் எப்போதுமே ஹண்ட்ரட் பர்செண்ட் நிச்சயமா சொல்ல முடியாது! நாங்க டாக்டர்ஸ்தானே? கடவுள் இல்லியே!”
“டாக்டர்!ப்ளீஸ் டோண்ட் கிவ் மி ஃபால்ஸ் ஹோப்!”
“நிச்சயமா இல்ல டெரிக்! நீங்க கிளம்புங்க! மெய்ஸிகிட்ட ஒண்ணும் சொல்ல வேண்டாம்! டுடே ஈஸ் மண்டே! நீங்க ஃப்ரைடே வாங்க! கம் டைரெக்ட்லி டு மி!”
ஆவ்ரில் விசும்பிக்கொண்டே கேட்டாள்.
“நமக்கு ஹோப் இருக்கா டாக்டர்?”
“எதிர்காலம் தான் நமக்குத்தெரியாது! ஹோப்ப ஏன் விடணூம்! லாட்ஸ் ஆஃப் ஹோப் மை டியர் ஆவ்ரில்!”
அன்று முழுவதும் பெரியவர் மெய்ஸியின் ரிப்போர்ட்டுகளுடனேயே இருந்தார். என்னென்னமோ படித்தார். கூகிளில் தேடித்தேடி படித்து குறிப்பு எடுத்துக்கொண்டார்.
அடுத்த நாள்.
“ப்யூலா! கால் டாக்டர் அஷோக்!”
“நம்ம ஹாஸ்பிடல்ல அஷோக்குன்னு….?”
“நம்ம ஹாஸ்பிடல்னு சொன்னேனா? ஹைதராபாத் லூஸிட் மெடிக்கல் டையக்னோஸ்டிக்ஸ் எம் டி!”
ஓ யெஸ்! உங்க ஸ்டூடெண்ட்! இதோ?”
“புரொஃபசர்! வாட் ய சர்ப்ரைஸ்!”
“ஆஷோக்! எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்?”
“சொல்லுங்க புரொஃபசர்!”
“ஒரு லிவர் பேதாலஜிகல் பையாப்ஸி பண்ணணும்!”
“கேஸ் டீடெயில்ஸ் சொல்லுங்க புரொஃபசர்!”
“இங்க பண்ணினோம்! ரிசல்ட்ஸ் ஆர் இன்கன்க்ளூஸிவ்! நீதான் கார்சினோமா எக்ஸ்பர்ட் ஆச்சே! உன் லாபிலயே பண்ணிடேன்!”
“நிச்சயம் டாக்டர்! டிஷ்யூ சாம்பிள் அனுப்பிடுங்க!”
“இல்லை அஷோக்! நானே நாளைக்கு கொண்டு வரேன்! ஐ வாண்ட் டு பி வித் யூ இன் டெஸ்டிங்!”
”வாவ்! ப்ளெஷர் புரொஃபசர்! ஸ்டே வித் அஸ்! வந்தனா வில் பி எக்ஸ்டாடிக்!”
ஹைதராபாதில் நாள் முழுவதும் டெஸ்டிங் போது கூடவே இருந்தார். முடிந்ததும் அஷோக்குடன் விவாதித்தார்.
”அஷோக்! ஒவ்வொண்ணா சொல்லு!
அல்ட்ராஸ்டரக்ச்சுரல் ?”
“நோ சேஞ்ச்!”
“ஸ்டியாடோஸிஸ்?”
“நெகடிவ்!”
“ஹெபாடைடிஸ்?”
“நெகடிவ்!”
“டிஸ்ப்ளேஸியா?”
“நெகடிவ்!”
“நெக்ரோஇன்ஃப்ளமேஷன்?”
“நெகடிவ்!”
”ஃபைப்ரோஸிஸ், சிர்ரோசிஸ், ஸ்கார்?”
”நத்திங் நத்திங் அட் ஆல்! புரொஃபசர்! இந்த பேஷண்ட் ஈஸ் ஃபிட் லைக் ய ஃபிடில், எக்ஸப்ட் ……….!”
’எஸ் ஐ நோ! தாங்க்ஸ் அஷோக்! நா கெளம்பறேன்!”
“ஓ நோ! இன்னிக்கு இங்க தங்கியாகணூம்! வந்தனா பெரிய டின்னர் பிளான் பண்ணியிருக்கா! புரொஃபசர்! எனை வம்புல மாட்டி விடாதீங்க! நாங்க இன்னொரு குழந்தைக்கு பிளான் பண்ணிட்டு இருக்கோம்!இன்னிக்கு உங்கள வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகலைன்னா வந்தனாவுக்கு எம்மேல தீராத கோபம் வரும்! அவ்வளவுதான் என்னோட அடுத்த ஜெனெடிக் அவுட்புட் வில் பி ஷார்ட் ஃப்யூஸ்ட்!”
“அடச்சீ! டர்ட்டி ஃபெல்லோ! நா வந்தனாவுக்கு ஃபோன் பண்ணிப்பேசிடறேன்! நீ போய் உன் வம்ச விருத்தியை பெருக்கு! அண்ட் கெட் மி ய டிக்கெட் இன் தி நைட் ஃப்ளைட்!”
அடுத்த நாள் மெய்ஸியும் டெரிக்கும் டாக்டர் செந்தில் முன்பு உட்கார்ந்திருந்தனர். கூடவே ஆவலுடன் ஆவ்ரில்.
”மிஸ்டர் டெரிக்! மெய்ஸிக்கு கான்சர் இல்லை. ஷி ஈஸ் ஆல்ரைட்!”
“தாங்க் காட்!”
“அப்ப அன்னிக்கு வந்த ரிப்போர்ட்?”
“அது இன்கன்க்ளூஸிவ் தான்! அதுதான் நான் ஹைதராபாதுக்கு அனுப்பி இன்னொரு பேதாலஜி டெஸ்ட் பண்ணச்சொன்னேன். இப்ப கிளியரா சொல்லிடுத்து!அந்த லிவர் லீஷன் வெறும் கட்டிதான்! ஆஞ்சியோமையோலிபோமான்னு சொல்லுவோம்! அத ட்ரீட் பண்ணிடலாம்!”
டெரிக் எழுந்து டாக்டர் செந்திலாநாதனைக்கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டார்.
”யூ ஆர் ய ஒண்டர்ஃபுல் டாக்டர்! உங்கள மாதிரி டாக்டர்கள் எல்லாம் அபூர்வம்! உங்களின் நன்மைக்காக நாங்க ரெண்டு பேரும் சர்ச்சுல ப்ரே பண்ணுவோம், சன்!”
அவர்கள் போனதும் ஆவ்ரில் செந்தில்நாதனிடம் கோபத்துடன் பேசினாள்.
“இன்னா டாக்டர்! என்னமோ நீங்க பண்ணினா மாதிரி கிரெடிட் எடுத்துக்கிட்டீங்க! பெரியவர் இவ்ளோ ஸ்டெப் எடுக்கலைன்னா என்ன ஆகியிருக்கும்! வாட் யூ டிட் ஈஸ் ராங் மேன்! வெரி ராங்!”
செந்தில் கோபமில்லாமல் பேசினார்.
“யூ டாக் டு தி பேஷண்ட். என்னோட பேர சொல்லவே கூடாது! சொன்னேன்னு தெரிஞ்சதுனா ஐ வில் ரிமூவ் யூ!”
”வாட்?”
“பெரியவரோட எக்ஸாக்ட் வார்த்தைகள்! காலையிலேயே என்னைக்கூப்பிட்டு பேசிட்டார்!”
ஆவ்ரில்லால் தாங்க முடியவில்லை. ப்யூலாவிடமாவது சொல்ல வேண்டும் என்று டீன் ரூமுக்குப்போனாள். ப்யூலாவின் டேபிள் முன் டெரிக்கும் மெய்ஸியும் நின்றுகொண்டிருந்தார்கள். உள்ளே பெரியவரின் குரல் சத்தமாகக்கேட்டது.