கண்ணை நம்பாதே…..
ஒன்று
Valley’s
Kitchen
என்ற வசீகரப்பெயர்
கொண்ட அந்த
அரையிருட்டு ரெஸ்டாரண்ட்டில் கணேஷ் தன் கைகளை
நீரஜாவில் கையின்
மேல் மிருதுவாக
வைத்து “உன்னை
எனக்குப்பிடிக்கிறது” என்று ரொமான்டிக்காகச்சொன்னபோது நீரஜா
”பக்”கெனச்சிரித்தது என்னமோ உண்மைதான்!
இந்த கணேஷ் லாயர்
இல்லை. சுனந்தாவின்
கொலை வழக்கில்
ஜெயராமனுக்கு விடுதலை
வாங்கித்தந்தவன் இவன்
இல்லை. லண்டனில்
ப்ரியாவை மீட்டவனும்
இவன் இல்லை.
இவனுக்கு தம்பு
செட்டி ஸ்ட்ரீட்டில்
ஆஃபீஸ் கிடையாது.
போலீஸில் ராஜேந்திரன்
என்ற நண்பரும்
இருக்கவில்லை. முக்கியமாக
வசந்த் என்கிற
உதவியாளனும் கிடையாது.
இந்த கணேஷ் கொடைக்கானலின்
கால் பகுதிக்கு
விரவியிருக்கும் ப்ளூ
ஸ்டேன்ஸ் எஸ்டேட்டின்
சொந்தக்காரன். ஆனால்
முப்பத்திரெண்டே வயது
இளைஞன். காப்பி,
டீ மற்றும்
மிளகு விளையும்
ஏகராக்கணக்கிலான நிலங்களுக்கு
ஏகபோக உரிமையாளன்.
நீரஜாவைக்கல்யாணம் செய்து கொள்ளப்போகிறான்.
இந்தக்கதையில் திருமணம் நடக்கப்போவது
இல்லை. இதில்
சி பி
ஐ ராமனாதன் கிடையாது. நீரஜா
மட்டும் பிஸியாக
இருக்கப்போகிறாள். அதனால்
காதல் செய்ய
அவளுக்கு டைம்
இல்லை.
“அடுத்த கதையிலாவது
பண்ணி வெச்சுடுய்யா” என்று கணேஷ் என்னைக்கேட்டுக்கொண்டிருக்கிறான்.
“பார்க்கலாம்” என்று
கித்தாய்ப்பாய் சொல்லி
வைத்தேன்.
இந்த கதை ஆரம்பிக்கும்
தருணத்தில் மணி
சாயங்காலம் ஐந்தரை.
வெளியே மேக
மூட்டம். குளிர்
தன் ஆக்கிரமிப்பை
தொடங்கி இருந்தது.
பெண்கள் ஸ்வெட்டர்
போடுவதிலும் ஆண்கள்
பாட்டில்களைத்திறப்பதிலும் மும்முரமாகிக்கொண்டிருக்கும், எப்போதும் போன்ற
இன்னொரு கொடைக்கனல்
மாலை.
இரண்டு
Valley’s
Kitchen ரெஸ்டாரண்ட்டில் ஆங்காங்கே
சிலர். சுடச்சுடக்காபி, டீ சிகரெட் என்று
எதையோ உறிஞ்சிக்கொண்டும் பேசிக்கொண்டும் ஒருவர் கண்களை
ஒருவர் உற்றுப்பார்த்துக்கொண்டும் இருக்க
அதில் ஒரு
ஜோடி கணேஷும்
நீரஜாவும்.
”உரையாடலே இல்லாமல்
ஒருபக்கம் ஜல்லி
அடித்துவிட்டியே” என்பவர்களுக்கு வந்தனத்துடன்….
“என்ன கணேஷ்!
ஒரே ரொமான்டிக்கா?”
”வொய் நாட்
நீரஜா?”
”இல்ல, இட்
ஈஸ் அம்யூஸிங்”
– சிரித்தாள்.
கணேஷ் சுரத்து இழக்க,
“கணேஏஏஏஷ்! சும்மா
விளையாடக்கூடாதா?”
“ஓக்கே ஓக்கே”
சரி,
கேளுங்க!”
வில் யூ மாரி
மீ?”
”எனக்கு அப்பா
சாய்ஸே குடுக்கலியே!”
கணேஷ் மறுபடி தொங்கலாக
மூஞ்சியை முழ
நீளத்துக்கு தூக்கி
வைத்துக் கொண்டான்.
“அப்பாவின் சாய்ஸே
ரொம்ப பிடிச்சிருக்கே!”
”யிப்பீபீ!”
கணேஷ் அமெரிக்க இளைஞன்
போல அல்லது
நம்மூர் அமிஞ்சிக்கரை
இளைஞன் சத்யம்
தேட்டரில் அரும்பாக்கம்
ஃபிகரைப்பார்த்து ஈரத்தலை
துவட்டுவது போல
சிலிர்த்தான்.
“என்ன கணேஷ்!
ஒரே ரகளையா
இருக்கே?”
கேட்டவர் ரிடயர்ட் கர்னல்
ஹரிஹரன்.
மூன்று
கர்னல் ஹரிஹரன் நீளமான
கட்டுரையை ஒரு
பக்கத்துக்கு சுருக்கினாற்
போல இருந்தார்.
அகலமான தோள்கள்,
ஆனால் அப்படியே
சுருங்கின கீழ்ப்பாகம். ஒல்லியாக குச்சிக்கால்கள். கோல்ஃப்
தொப்பி போட்டு
மறைத்த வழுக்கை.
1940களின் ஹாலிவுட்
மீசை. சார்லி
சாப்ளீனைவிட கொஞ்சம்
பெரிசு. சிக்கு
வாசம் அடித்த
உல்லன் கோட்,
கழுத்தை மறைத்த
ஸ்கார்ஃப், கையில்
ஒரு ரூல்
தடி என்று
பிஜிவுடவுஸின் லார்ட்
எம்ஸ்வொர்த் போல
ஸ்டைல் அடித்துக்கொண்டு பேசினார்.
”ஒ! கர்னல்!
மீட் மை
ஃபியான்ஸே நீரஜா!”
”அப்படியா! வாட்
அ ப்ளெசண்ட் மீட்டிங்” என்று
வயசைச்சாதகமாக்கி நீரஜாவை
கிட்டத்தட்ட அணைத்துக்கொண்டார்
“லக்கி பாய்,
யூ கணேஷ்!”
உச்ச ஸ்தாயியில் கத்திவிட்டு
கொஞ்சமே கொஞ்சம்
மெதுவாகி, ”நீரஜா!
ஒன்றிரண்டு நாட்களீல்
இவனோடு உனக்கு
போர் அடித்துவிடும். எனக்கு சொல்லி அனுப்பு.
நானே உன்னை
கல்யாணம் பண்ணிக்
கொள்கிறேன்”!
”கர்னல்! நீரஜா
யார் தெரியுமா?
சிபிஐ ராமனாதனின்
ஒரே பெண்”
”:என்னது? தேரெழுந்தூர்
ராமுவா? அவன்
பொண்ணா நீ?
உன்னை 99இல்
டெல்லில பாத்திருக்கேனே! அப்ப நீ ஸ்கூல்
போயிண்டு இருந்தே.
கொஞ்சம் அப்போ
குண்டா இருந்தியோனோ?”
”கர்னல்!” கணேஷ்
அதட்டினான்.
“நீ சும்மா
இருப்பா. உனக்கு
தெரியாது என்னோட
பாச்சலர் தினங்கள்ல
ராஜிந்தர் நகர்ல
இவ அம்மா
கையால காபியும்
அரிசி உப்புமாவும்
பல தடவை
சாப்டுருக்கேன்.”
ஓ!
அப்படியா அங்கிள்!
– நீரஜாவுக்கு அம்மாவின்
நினைவில் ஒரு
ஷணம் மனம்
குழைந்த்து.
“எப்போ கல்யாணம்?”
”இனிமேத்தான் ப்ளான்
பண்ணனும் அங்கிள்.
அப்பாகிட்ட சொல்றேன்
உங்கள மீட்
பண்ணினதை.
சொல்லும்மா.
அவன இங்க
வரச்சொல்!. கல்யணத்தை
இங்க இவனோட
எஸ்டேட்டிலேயெ வெச்சுக்கோங்க. யேய்!
கணேஷ்! அந்த
சாப்லிஸ் க்ராண்ட்
வால்மர் 1935 பாட்டில்
இன்னும் திறக்காம
வெச்சுருக்கியா?”
“என்னோட கல்யாணத்துக்கு அது உங்களுக்குத்தான் கர்னல்!”
அட்டகாசமாய்ச்சிரித்து கணேஷின் கையைப்பற்றி
குலுக்கின சூட்டில்,
“மறந்து விட்டேனே,”
என்று திரும்பி
”சாயா” என்று
கூப்பிட, அங்கேயிருந்து
வந்தவள் அபார
அழகி!
நான்கு
”சாயா! மீட்
நீரஜா அண்ட்
கணேஷ். என்னோட
ஃபாமிலி ஃப்ரெண்ட்ஸ். இது புகழ் பெற்ற
சாயாதேவி!
”அந்த சாயா
தேவியா?”
”ஆம். அவரேதான்!”
”கர்னல்! சும்மா
பொரளி பண்ணாதீங்க!
1980கள்ல பத்து
படம் நடிச்சேன்.
அதோட சினிமாவ
விட்டாச்சு. அப்பறம்
என்ன புகழ்
பெற்ற? அதெல்லாம்
பழங்கதை கர்னல்!”
”ஓ! க்ளாட்!
உங்க படங்கள
நான் ஸ்கூல்
தினங்கள்ள பாத்திருக்கேன். சிஐடின்னு ஜெயசங்கர் படம்,
அந்த மோட்டார்
போட்ல ஒரு
டூயட்!
”தாங்க் யூ!
அந்தப்படமெல்லாம் பாத்திருக்கீங்களா?”
”ஓ! எனக்கு
அப்பவே டிடெக்டிவ்
சினிமா கதைன்ன
ரொம்ப இஷ்டம்”
”அப்பவேன்னா?”
”நீரஜா ஒரு
ப்ரைவேட் இன்வெஸ்டிகேடர்! அவ அப்பா முன்னாள்
சிபிஐ. அவரும்தான்!”
– கணேஷ் உள்ளே
புகுந்தான்.
”ஓ! அப்படியா?”
கர்னல் இதற்குள் வேறு
யாரையோ விளித்துக்கொண்டு அடுத்த டேபிளுக்கு நகர,
சாயாதேவி நெற்றியைச்சுருக்கி ஒரு வினாடி ஏதோ
யோசித்து நீரஜாவின்
முகத்துக்கருகே நெருங்கி
“உங்களால் எனக்கு
உதவ முடியும்!
வில் யூ?
இன்னிக்கு ஆறரை
மணிக்கு விஸ்ஃபெரிங்
ஹைட்ஸ் பங்களாவுக்கு
வரமுடியுமா?”
மெலிதாகக்கேட்டாள்.
”அது எங்கேன்னு?”
நீரஜா இழுக்க,
கணேஷ், “எனக்கு
தெரியும், பக்கம்தான்,
அடுத்த ரெண்டு
திருப்பத்துல இருக்கு”
சாயாதேவி! நான்
அழச்சிண்டு வரேன்”
“தாங்க் யூ.
கணேஷ்! அந்தப்போலீஸ்காரன் ஆவி ரோடு இருக்கே,
அதுக்கு அடுத்த
தெரு!”
நீரஜா நிமிர்ந்தாள்.
“என்னது, போலீஸ்காரன்
ஆவியா?”
ஐந்து
கணேஷ் சிரித்தான்.
”ஓ! அதொண்ணுமில்ல. எப்பவோ அங்க பீட்ல
இருந்த ஒரு
போலீஸ்காரன் கார்
அடிச்சு செத்துட்டான். குடிகார டிரைவர்! அந்தப்போலீஸ்காரனோட ஆவி அங்கேயே உலாத்துதுன்னு
பேச்சு, பயம்
உண்டு. சில
பேர் ராத்திரிகள்ல
பாத்திருக்காங்கன்னு அக்கப்போர்!
யூ நோ
நீரஜா, த
யூஷுயல் காஸிப்!”
”இல்ல கணேஷ்!
எங்க விஸ்ஃபெரிங்
ஹைட்ஸ் வீட்டு
வேலைக்காரிகூட பாத்ததாச்சொல்லியிருக்கா! முழு
யூனிஃபார்மோட ரோந்து
வந்தானாம்!”
ஓ நோ! சாயா!
இதெல்லாம் புரளி!
நீங்களுமா நம்பறீங்க!”
இல்லை கணேஷ்! அவ
பொய் சொல்லமாட்டா. எங்க வீட்டுல பத்து
வருஷமா வேல
பண்ணறவ!”
கர்னல் அந்த டேபிளிலிருந்தே சத்தமாக்க்கேட்டார்
“சாயா! இன்னும்
கெளம்பலியா? இன்னிக்கு
ஒன்பது மணிக்கு
ரத்னகுமார் வீட்டில்
விருந்து. உன்னை
எதிர்பார்த்துண்டு இருப்பான்.
இப்பவே போனாத்தான்
நீ ட்ரெஸ்
பண்ணி கிளம்ப
சரியா இருக்கும்.
நானும் வீட்டுக்குப்போய் ஒய்ஃபை அழச்சிண்டு வரணும்.”
சாயா,
நீரஜாவிடம் ரகஸ்யக்குரலில், “நாம மீட் பண்ணப்போறது
கர்னலுக்குத்தெரியவேணாம். சரியா ஆறரை
மணிக்கு வந்துடுங்க,
ப்ளீஸ்”!
”வந்துடறோம் சாயா!”
”எட்டே முக்கால்
ஐ வில் பி அட்
விஸ்ஃபெரிங் ஹைட்ஸ்
சாயா!”
கர்னலின் குரலுக்கு சாயா
“ரெடியா இருக்கேன்
கர்னல்”
சாயா தேவி அவசர
அவசரமாக வெளியேற,
கர்னல் இன்னும்
வேறு யாருடனோ
சத்தமாக பேசிச்சிரித்துக்கொண்டிருந்தார்.
”நீரஜா! மணி
இப்போதான் அஞ்சரை
ஆறது. ஆறு
மணிக்கு கிளம்பலாம்.
வில் யூ
ஹேவ் அனதர்
காஃபி?”
நீரஜா பதில் சொல்வதற்க்குள் அந்த ஆள் தட்டித்தடுமாறி அவர்கள் டேபிளுக்கு வந்து
கிட்டத்தட்ட நீரஜாவின்
மேல் இடிப்பது
போல நெருங்கினான்.
ஆறு
நாற்பது வயது சொல்லலாம்.
நிச்சயம் குடித்திருந்தான். சீப்பான விண்ட் சீட்டர்
என்னும் ஜிப்
வைத்த கோட்.
அழுக்கு முழுக்கை
சட்டை. தொப்பை
திமிற ஷர்ட்டுக்குள்
செருகி இருந்தான்.
புழுதி படிந்த
நைந்து போன
ஷூக்கள். கண்கள்
சிவந்து உள்ளே
போயிருந்த ப்ராந்தியின்
அளவைத்தெரிவித்தன.
கணேஷ் பதட்டத்துடன் எழுந்து யாருப்பா
நீ? என்ன
இது, மானெர்ஸ்
இல்லாம” என்று
அதட்ட அவன்,
“ச்சும்மாஇருய்யா! அந்த
பொண்ணு எங்க?
அவள நான்
சும்மா விடமாட்டேன்” சினிமா நடிகைன்ன பெரிய
கொம்பா?” நீங்க
அவ ஃப்ரெண்டுதானே? சொல்லு,
எங்க அவ?”
என்று உரத்த
குரலில் கத்தினான்.
அப்படியே போதையில் நாற்காலியில்
உட்கார்ந்தான்.
“கொல்லாம விட
மாட்டேன். எங்கிட்டயேவா?“ முணுமுணுத்தான்.
கணேஷ் அவனை நெருங்கி
தோளைத்தொட்டு நகர்த்த,
அவன் தள்ளாடி
எழுந்தான்.
”இங்கதானே இருந்தா!
எங்க போய்டுவா,
வரேன் இதோ
வரேன்” சத்தம்
போட்டவாறே வெளியே
போனான்.
மறுபடி கர்னல் அருகில்
வந்தார்.
“என்ன ஆச்சு
கணேஷ்? ஒண்ணும்
ப்ராப்ளம் இல்லியே?
யாரு அவன்?”
தெரியல கர்னல்! குடிகாரன்!
சாயாவைத்தான் கொன்னுடுவேன்னு உளறிண்டு போறான்!”
“இந்த சாயா
தராதரம் இல்லாம
பழகிடறா? இந்த
ஊர் ஆட்களும்
சாராயத்த போட்டாச்சுன்னா எல்லாமெ ஈஸியா கெடச்சுடும்னு
ஒரு அர்ரகன்ஸ்!
சாரிம்மா நீரஜா!
கணேஷ் ஈஸ்
அன் எக்செப்ஷன்!”
“நம்புகிறேன்!” நீரஜா
சிரித்தவாரெ சொல்ல.
கணேஷ் கர்னலைப்பாத்து சிடுசிடுத்தான்!
கணேஷ்!
கேள்விப்பட்டியா? ரத்னகுமார்
சாயாவைக்கல்யாணம் பண்ணிக்கப்
போறான்னு பேச்சு
அடிபடறது”
ஏழு
”அன்னிக்கு காஸ்மபாலிடன்ல
இதான் ஈவினிங்
டாபிக்!”
“அது நெஜம்தான்
கணேஷ்! எனக்கு
ரத்னகுமார் பெஸ்ட்
ஃப்ரெண்ட். ரெண்டு
மாசம் முந்திதான்
அவனோட டைவர்ஸ்
க்ளியர் ஆச்சு.
அடுத்த சண்டே
பூம்பாறை செகண்ட்
ஹெவன் மான்ஷன்ல
நிச்சயதார்த்தம்! அதுக்குத்தான்
இன்னிக்கு ரத்னகுமார்
வீட்டுல விருந்து,
இன் ஹானர்
ஆஃப் சாயா
தேவி!!”
”ஹலோ! நான்
ஒருத்தி இங்க
இருக்கறது தெரியாம
யாரோ ரத்னகுமார்
பத்தி பேசினா
நான் என்னன்னு
புரிஞ்சுக்கறது?” பட்
இட் லுக்ஸ்
ஹி ஈஸ்
தி லோகல்
ப்ளேபாய்!”
“ஒரளவுக்கு சரி.
ஹி ஈஸ்
நோ லாங்கர்
அ பாய்!
சாயா சினிமாவில்
நடித்த காலத்தில்
சில சினிமாப்படங்கள் எடுத்த குடும்பம். எதிரணி,
அதாவது ரவிச்சந்திரனை
வைத்துப்படம் எடுத்தவர்
இவரோட அப்பா.
அதெல்லாம் ரெண்டு
மூணு வருஷத்துலேயே
ஊத்தி மூடி
இருக்கற சொத்தைப்பாதுகாக்க பிள்ளையை கோடைக்கு அழைத்துக்
கொண்டுவந்துவிட்டார்!”. பிள்ளைக்கு அன்றைய
மோகம் இன்றைய
காதல்! இந்தக்கல்யாணம் வரை வந்துவிட்ட்து, என்ன
ஒரு பத்துப்பதினைந்து வருஷம் லேட், அவ்வளவுதான்!! நடுவுல ஒரு அவசர
கல்யாணம், டைவர்ஸ்.
”தட்ஸ் இண்டெரெஸ்டிங்!”
ஓகே!
எனக்கும் டைம்
ஆறது! வீட்டுக்குப்போய் மாமிய அழச்சிண்டு ரத்னகுமார்
பார்ட்டிக்கு போகணும்.
வரேன் நீரஜா!
சாப்லிஸ் க்ராண்ட்
வால்மர், மறக்காத
கணேஷ்!”
”கணேஷ்! நாமளும்
கெளம்பலாம். மெதுவா
நடக்கலாம்”
வெளியே இருட்ட ஆரம்பித்திருந்த்து. பனி
மூட்டம் இறங்கி
அடுத்த பத்தடிக்கு
மேல் ஒன்றுமே
தெரியாத மிஸ்ட்.
எங்கிருந்தோ அழுக்குக்குப்பையும் யூகலிப்டஸும் எரியும் வாசனை.
காற்றில்லாத, இலைகள்
அசையாத, புழுதி
பறக்காத, நடமாட்டமில்லாத சாலை.
இயல்பாக கணேஷ்
கொஞ்சம் நெருங்கி
நீரஜாவின் கைகளைக்கோர்த்துக்கொண்டபோது சற்றே
தலயைத்தூக்கி நீரஜா
கொடையளித்த செண்டிமீட்டர்
புன்னகையில் துல்லியமான
வாத்சல்யம் கலந்திருந்தது.
கர்னல் கிழத்துக்கு சாப்லிஸ்
க்ராண்ட் வால்மராம்!
ராணுவத்தில் எதிலுமே அவசரமாகக்கழித்த கர்னலுக்கு,
இந்த கைகள்
கோர்த்த காதலின்
மற்றும் அந்தப்புன்னகையின் அருமை எங்கே தெரியப்
போகிறது!
அந்தத்தெரு திருப்பத்தில் கொஞ்சம்
மேடேறியது. நீரஜா
சிறிது ஸ்ரமப்பட,
கணேஷ் முன்னே
போய் ”ம்”
என்று கை
நீட்டி அவளைத்தன்
பக்கம் இழுக்க,
நீரஜா, ”இப்போ
அடுத்து என்ன?
இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது”ன்னு பாடுவீங்களா. என்னொட லைன்ஸ் என்ன?”
”நெனச்சாலே பயமா
இருக்கு?”
”எது கணேஷ்?”
”இந்த மொக்க
ஹ்யூமரை வாழ்நாள்
முழுக்க கேக்கணுமே!”
“ஓகே மிஸ்டர்
கணேஷ்! ஐ
வில் சீ
யூ லேட்டர்”
நீரஜா விடுவிடுவென முன்னே
போக, ”சாரி
நீரஜா தட்
வாஸ் ஜஸ்ட்
ஃபன்”
சொல்லி முடிப்பதற்க்குள் அந்தப்பனி
மூட்டத்திலிருந்து யூனிஃபார்ம்
அணிந்த ஆஜானுபாக
போலீஸ்காரர் ஒருவர்
வெளிப்பட்டார்.
போலீஸ்காரன் ஆவி தெரு!
எட்டு
கணேஷும் நீரஜாவும் அப்படியே
நின்றுவிட, அந்தப்போலீஸ்காரர் விறு விறுவென இவர்களைக்கடந்து போகும்போது ஒரு புன்னகை
செய்துவிட்டு ஒன்றும்
பேசாமல் போய்விட்டார்.
கணேஷுக்கு ஒன்றும் புரியவில்லை.
கணேஷ்!
என்ன இது?
ஆர் வீ
சீயிங் வாட்
வி ஆர்
சீயிங்?”
நீரஜாவின் உடல் ஒரு
முறை சிலிர்த்த்து.
சற்று தூரத்தில் அந்தப்போலீஸ்காரரின் பூட்ஸ் சத்தம் காற்றில்லாத
சலனமில்லாத அமைதியில்
கொஞ்சம் கொஞ்சமாக
ஒலித்துத்தேய்ந்த்து.
“அடச்சே! ஏதோ
நிஜ போலீஸ்காரர்! ஷூ சத்தம்!
இருவரும் லேசான வெட்கத்தோடு
சிரித்தபோது இருவருக்குமான
காதலின் புரிதலில்
இன்னுமோர் அத்தியாயம்
எழுதப்பட்டது. அவர்களின்
வாழ்க்கையில் ஏற்படப்போகும்
இன்பத்தின் முன்னுரை
தெரிந்தது.
நீரஜா இன்னும் இறுக்கமாக
கணேஷின் கைகளைப்பற்றிக்கொண்டாள்.
மறுபடி தெரு திரும்ப
கணேஷ், “இதுதான்”
என்று நடந்தான்.
விஸ்ஃபெரிங் ஹைட்ஸ் என்னும்
அந்த காட்டேஜ்
விஸ்தாரமான தோட்டத்துக்குள் இருந்தது.
வாசலில் வெள்ளை
பெயிண்ட் அடித்த
விக்கெட் கேட்
என்னும் மரக்கதவு.
அதனுள் வளைந்து
சென்ற ஒரு
நடைபாதை. போய்
நின்ற இடம்
ஒரு மாபெரும்
மஹோகனி கதவு.
கதவின் மேற்புரத்தில் 1940என்று மேஸ்திரி சில்லரை
வெள்ளைக்கார துரைக்கு
மரியாதையுடன் பொறித்திருந்தான்.
1852இல் முதன்
முதலாக மேஜர்
பார்ட்ரிட்ஜ் கோடைக்கனலுக்கு வந்து பங்களா கட்டினார்.
அவரைத்தொடர்ந்து ஜட்ஜ்
எலியட் மற்றும்
அன்றைய மதுரை
கலெக்டர் ப்ளக்பர்ன்
பங்களாக்கள் கட்டிக்கொண்டு
குடியேற, மெதுவாக
ஆங்கிலெயர்களும் டச்சுக்காரர்களும் மத போதகர்களும் குடிபுக
ஆரம்பித்தனர். மிக
நேர்த்தியாக, யூரோப்பிய
சாயலில் வசதியாகக்கட்டப்பட்ட ஒரு பங்களாதான் விஸ்ஃபெரிங்
ஹைட்ஸ். பெரிய
துரைகளுக்கு சேவகம்
பண்ண வந்த
ஒரு சின்ன
துரை அவர்களுக்கு
குழாய் அடித்து
அனுமதி வாங்கி
கட்டிக்கொண்ட இந்த
விஸ்ஃபெரிங் ஹைட்ஸ்
கடந்த வருஷங்களில்
ஒரு சில
கைகள் மாறி
கோயமுத்தூரில் ஒரு
துணி வியாபாரியிடம்
போய்ச்சேர்ந்த்து.
அவருக்கு துணி ஏலத்தில்
மானாவாரியாக லாபம்
வர, கூடவே
இருந்த ஒரு
அள்ளக்கை சினிமா
ஆசையைக்கிளப்பிவிட்டான். இவரும் சினிமா
மற்றும் சுலபமாக
கிடைக்கும் இளம்
பெண்களின் உடல்வாசம்
என்கிற ஜோரில்
தன் மில்லின்
துணியிலேயே பல
லட்சங்களைக்கட்டிக்கொண்டு சென்னை வந்து
சினிமாப்படம் எடுக்க
முனைந்தார். மங்கையின்
கண்ணீர், மாலை
மல்லிகை என்று
இரண்டு படங்கள்
எடுத்து அவை
சுமாராப்போய்விட, ”மூன்றாவதாக
ஜெயசங்கரை வைத்துப்படம்
பண்ணுங்க” என்ற
ஆலோசனையின் பேரில்
ஒரு படத்தை
ஆரம்பித்தார். அதில்
அறிமுகமான சாயாதேவியைக்கண்டு மோகித்து,
கோயமுத்தூரில் தன்
பாரியான உடல்வாகு
மனைவியை நினைத்து
மருகாமல், பொன்னாய்
மினுமினுத்த சாயாதேவியின்
வதன எழிலில்
தன்னை மறந்து
கொஞ்ச நாள்
கிடந்த போது
சாயா சாமர்த்தியமாக
இந்த விஸ்ஃபெரிங்
ஹைட்ஸை எழுதி
வாங்கிக்கொண்டுவிட்டாள். மேலும் நஷடமாகிப்
போவதற்க்குள் மாமனார்
ஆள் வைத்து
இவரை உதைத்து,
தன் பெண்ணைக்கூட
சந்தோஷப்படுத்த முடியாத
நிலமைக்கு ஆளாக்கி,
“இனிமே சினிமா
கினிமானு அலஞ்சே”
என்ற பன்ச்
டைலாக்குடன் கோயமுத்தூருக்கு ஓட்டிக்கொண்டு போய்விட்டார். தமிழ்
சினிமா இதற்குள்
“அட்த்த படம்
கல்கு, அதக்குஅட்த்தது உள்ளாசப்ர்வை”
என்று கொஞ்சும்
வடக்கிந்திய நடிகைகளின்பால் ரசிகர் மன்றம் வைக்க
ஓடிவிட, சாயா
இருக்கும் பணத்தை
வைத்து நிம்மதியாக
வாழலாம் என்கிற
முடிவில் கோடைக்கானலில்
செட்டில் ஆனாள்.
அரையிருட்டு மாலை, பனி.
குளிர், அதோடு
காதல் என்ற
காம்பினேஷனில் கிறக்கமாக
மெல்ல நடந்து
நீரஜாவும் கணேஷும்
விஸ்ஃபெரிங் ஹைட்ஸின்
விக்கெட் கேட்டை
நெருங்கும்போது, உள்ளிருந்து
அவன் ஓடி
வந்தான்.
மூச்சு இரைக்க பதட்டத்தோடு
வந்தவன் முரட்டுத்தனமாக அந்த கேட்டை உலுக்கித்திறந்து சுற்று முற்றும் பார்த்தான்.
வாயில் எச்சல்
ஒழுகினது அந்த
அரையிருட்டிலும் தெரிந்தது.
இவர்களைப்பார்த்த அதிர்ச்சியில்
எதிர்ப்புறம் ஓடி
தெருவில் இருட்டில்
மறைந்தான்.
சந்தேகத்துக்கு இடம் வைக்காத
அந்த விண்ட்
சீட்டர் அழுக்கு
ஆசாமி!
”நீரஜா! இவன்
எங்கே இங்க?”
”கணேஷ்! வா!
ரெஸ்டாரண்ட்டில் கொலை
கிலைன்னு உளறிண்டு
இருந்தான். சீக்கிரம்
வா போய்ப்பார்க்கலாம்”
இருவரும் திறந்து கிடந்த
விக்கெட் கேட்
வழியாக போகும்போது
அந்த வெள்ளை
பெயிண்ட் அடித்த
கேட்டில் ரத்தக்கறை!
ஒன்பது
நீரஜா கணேஷை ஒரு
கணம் பார்த்தாள்!
வேகமாக அந்தப்பாதையில் ஓட்டமும்
நடையுமாய் பெரிய
வாசல் கதவை
அடைந்தனர்.
”பே’ வெனத்திறந்து
கிடந்த கதவின்
உள்ளே மஹா
ஹால் வலது
பக்கம் ஒரு
மாடிப்படி அரை
வட்டத்தில் ஏறி
எங்கோ மறைந்தது.
ஹாலை விவரிக்கலாம் என்றால்
சந்தர்ப்பம் சரியில்லை.
”யாரு, என்ன
சத்தம்! அய்யோ!
கதவ எப்படி
திறந்தீங்க, யாரு
நீங்க?”
வந்தவள் வேலைக்காரியாகத்தான் இருக்க
வேண்டும்.
”நீ யாரும்மா?”
”நல்லாக்குதே! எங்கூட்ல
வந்து நான்
யரா?”
”இப்பத்தான் ஒரு
ஆள் கதவத்தொறந்துட்டு ஓடறான்.
நீ என்ன
பண்ணிகிட்டு இருந்தே?
எஜமானியம்மா எங்க?”
”அய்யோ! என்ன
சொல்றீங்க? நா
கிச்சன்ல வேலயா
இருந்தேங்க. சித்த
நேரம் முன்னாடி
கதவு டமார்னு
தொறந்து மூடற
சத்தம் ஒண்ணு
ரெண்டு தபா
கேட்டுது. சாயாம்மாதான்
வந்துட்டாங்களாட்டியும்னு நான் உள்ர
இருந்தேன். தெனிக்கும்
இப்படித்தானே வருவாங்க,
போவாங்க!”
“நீ இங்கயே
இரும்மா, கதவச்சாத்து. கணேஷ்!
வாங்க! மாடிக்கு
போகலாம்!”
வளைந்த மாடிப்படியிலேறும்போதும் கவனித்தார்கள். கைப்பிடிச்சுவற்றில் ஆங்காங்கே ரத்தத்திட்டுக்கள்!
மாடிப்படி முடிந்து நீள
காரிடார் கடந்து
இடப்பக்கம் சரேலென்று
திரும்பின அந்த
அறையின் கதவும்
திறந்து கிடக்க,
உள்ளே கிங்
சைஸ் படுக்கையில்
இசைகேடாய் பாதி
குப்புறக்கிடந்த சாயாவின்
முதுகில் அந்த
கத்தி ஆழமாய்
இறங்கி எப்போதோ
உயிர் போய்விட்டிருக்க வேண்டும்.
ஒரு மணி நேரம்
முன்னால் சிரித்துப்பேசிய முன்னாள் நடிகை, இப்போது
உயிரின்றி!
”இன்னும்பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது”
சம்மந்தமே இல்லாமல் நீரஜாவின்
மனசுக்குள் அந்தஜெயசங்கர்
படப்பாடல் ஓடியது.
பத்து
ஷூக்கள் கழட்டப்பட்டு கீழே
கிடக்க, ஸ்டாக்கிங்ஸ்
அணிந்திருந்தாள். கைப்பை
ட்ரெஸ்ஸிங் டேபிள்
மேல். பீரோ
திறந்து கிடக்க
பாதி ஹாங்கரில்
துணி தொங்கியது.
பார்ட்டிக்கு போட்டுக்கொள்வதற்க்காக எடுக்கும்போது
கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.
கணேஷ் ஃபோன் பண்ண
ஓடினான்.
கர்னல் ஹரிஹரன் வெட்கமின்றி
அழுதார். அவர்
மனைவி கர்ச்சீப்பால்
கண்களைக்கசக்கினாள்.
“சாயாதேவி ரொம்ப
நல்லவ, நீரஜா!”
ஹரிஹரன் துக்கத்திலிருந்து விடுபடமுடியாமல் தத்தளித்தார்.
இந்தக் கல்யாணத்தில்தான் எனக்கு மன நிம்மதி
இருக்கு கர்னல்,
என்பாள். அய்யோ!
ரத்னகுமாருக்குச்சொல்லவேண்டுமே!
போலீஸ் படை வந்துவிட்டது.
நீரஜா குழம்பினாள். யார்
அந்த விண்ட்
சீட்டர் ஆசாமி?
சாயாவின் தரத்துக்கு
சம்மந்தமே இல்லியே!
இன்ஸ்பெக்டருக்கு கணேஷை தெரிந்திருந்தது. போன வருஷம் எஸ்டேட்டில்
நடந்த தொழிலாளர்
தகராறின்போது உதவினார்
என்று தீபாவளி,
பொங்கல் என்று
”கவனித்து” இருந்தான்.
டிசம்பர் மாதம்
மற்றும் நியூ
இயருக்கு ப்ளாக்
லேபிளும் அனுப்ப்பட்டிருந்த விசுவாசத்தோடு பேசினார்.
“நீங்க இருங்க
சார்! நான்
உங்க கிட்ட
வரேன்”
”கதிரவன்! இது
நீரஜா!
மேடம்!
கல்யாணமே வேணாம்னு
இருந்தார். நீங்க
மனச மாத்திட்டீங்க
போல!
பின்னாளின் எஜமானிக்கு இப்போதே
குழையடித்தார்
ராமனாதன் சிபிஐ எல்லாம்
சொன்னவுடன் இன்னும்
மரியாதையுடன் ”உங்க
உதவி இருந்தால்
நல்லது மேடம்”
என்று பம்மினார்.
அடுத்த மாசம் கமிஷனர்
வருகிறார். ஸ்போர்ட்ஸ்
டே ஏற்பாடு
பண்ணனும். கணேஷ்
தயவு நிச்சயம்
தேவைப்படும்!
கணேஷும் நீரஜாவும் நடந்த்து
எல்லாம் சொன்னார்கள்.
“அதெல்லாம் ஒண்ணும்
கவலை இல்லை.
நாளைக்குள்ள பிடிச்சிடறேன்
பாருங்க! எங்க
போய்டப்போறான்?” இங்கதான்
வில்பட்டி, பெருமாள்
மலை, அடுக்கம்,
பள்ளங்கின்னு எங்கியானும்
கிராமத்துல ஒளிஞ்சிருப்பான். மடக்கிடலாம்!”
”அவன் யாருன்னு
விஜாரிக்கணூம் கதிரவன்!”
”அதெல்லாம் துப்புரவா
செஞ்சுடலாங்க! நீங்களே
பாத்துட்டீங்க! அது
போதும் எனக்கு.”
”மோடிவ் என்னன்னு
தெரியணுமே?”
”கையில ஆம்ப்ட்ட்டும்
சார்! ஆசனவாயில
லத்தியக்கொடுத்து…….. மன்னிக்கணும்மா!”
”அவனப்பாத்தா உங்களுக்கே
புரியும்! சாயாதேவிக்கு
கிட்டவே வரமுடியாது,
அந்த ரேஞ்சே
இல்ல, ஆனா
அவளக்கொல்ற அளவுக்கு
என்ன விரோதம்
இருக்க முடியும்?”
”கணேஷ்! நீங்க
கெளம்புங்க! எனக்கு
ராப்பூரா ஆய்டும்போலருக்கு. ஆள் கெடச்சவுடனே சொல்லிவுடறேன்!”
பதினொன்று
நீரஜாவை ஹாலிடே இன்னில்
விட்டுவிட்டு ஏக்கத்துடன்
கணேஷ் கிளம்பினபோது
இரக்கப்பட்டு நீரஜா
ஒரே ஒரு
முத்தம் தர
அனுமதித்தாள், தன்
புறங்கையில். பதட்டத்தில்
கணேஷ் அதைச்சொதப்பி
ஒரு வழியாக
அவள் முழங்கையில்
எச்சல் பண்ணிவிட்டு
ஒன்பதாம் மேகத்தில்
புறப்பட்டுப்போனான்.
“என்னமா, என்னசொல்றான்
உன் ஆள்?”
ராமனாதன் காலை ஃபோனில்
கிண்டல் பண்ணினார்.
”ஒரு முத்தம்
கூடத்தரத்தெரியவில்லை, என்ன மாப்பிள்ளை
பாத்து வெச்சிருக்கீங்க!”
”அம்மா! நீ
மிராண்டா காலெஜ்
ரௌடி! அவன்
சாதும்மா! அவனுக்கு
ஃபோன் பண்ணி
ஜாக்கிரதையா இருக்கச்சொல்லணும்!”
”டாட்! ஒரு
கொலைக்கு நடுவுல
இருக்கேன், இட்ஸ்
எக்சைட்டிங்!”
”என்னது?”
சொன்னாள்.
”வாட் டூ
யூ திங்க்
டாட்?”
”ரொம்ப சொல்ப
விவரங்கள்தான் இருக்கும்மா. ஆனா ஒண்ணு, உன்
லாயர் ஃப்ரெண்ட்
சொல்லுவானே அதேதான்!”
’Mistrust
the obvious தானே!”
பல வருஷங்களுக்கு முன்னால்
அந்த ட்ராஃபிக்
ஆக்ஸிடெண்ட் கேசில்
லாயர் கணேஷின்
கூர்மையான அலசலை
நினைத்து ஒரு
கணம், ஒரே
ஒரு கணம்………..
ஏக்கமா, என்ன
அது?
“நான் ஏன்
கணேஷோடு மெட்ராஸ்
வர மறுத்தேன்?”
மொபைல் ரிங்.
”அப்பா! உங்க
அருமை மாப்பிள்ளை
என்னோட காலை
நேரத்தை ப்ரகாசிக்க
கூப்டறார்”
”ரொம்ப டீஸ்
பண்ணாதம்மா, சரி,
நா அப்பறமா
பேசறேன். கீப்
மி போஸ்டட்”
நேற்றைய மாலை எப்பேர்ப்பட்ட
இனிமயான ஒன்றாக
இருந்தது, அந்த
முதல் ஸ்பரிசத்தின்
மேன்மை, முத்தத்தின்
மகிமை, ராத்திரி
பொட்டுக்கூட தூங்க
முடியாமை, விடியற்காலையில் வந்த கனவு, எழுந்தவுடனே
இன்னும் பல்
கூடத்தேய்க்காமல் பண்ணின
இந்த ஃபோன்…………
வாசகரே!
எல்லாமே நீங்கள்
செய்த அதே
விஷயங்கள்தான், அதைப்போய்
இங்கே விவரிப்பானேன்!
“இப்பத்தான் எழுந்தேன்
நீரஜா! அதனால
உன்னை வந்து
நேர்ல மீட்
பண்ணறதுக்கு மூணு
நிமிஷம் ஆய்டும்,
பரவாயில்லையா?”
நீரஜா வாய் விட்டுச்சிரிதாள்.
பஃபே என்றபெயரில் உலகத்தில்
உள்ள அத்தனை
சமாச்சாரங்களையும் வைத்திருந்தார்கள். நீரஜா
ஒரே ஒரு
க்ளாஸ் ஆரஞ்ச்
ஜூஸையும் ஆம்லெட்டையும்
ரெண்டு ஸ்லைஸ்
ப்ரெட்டையும் எடுத்து
சாப்பிட்டாள். கணேஷ்
இட்லி முடிந்து
பூரி அடுக்கி
அதில் சன்னாவைத்தெளித்து, கூடவே
ஒரு மசால்
தோசை ஆர்டர்
பண்ணியிருந்தான்.
“அவன் ஏன்
சாயாவைக்கொலை பண்ணனும்?
என்ன தொடர்பு
இருக்க முடியும்?
பன்னிரெண்டு
எனக்கும் புரியல நீரஜா,
கணேஷ் இந்த கொலை
பற்றி யோசிக்கவேயில்லை என்பது துல்லியமாகத் தெரிந்தது.
அவன் நீரஜாவின்
கை வாசனையிலேயே
லயித்துப்போயிருந்தான்.
கதிரவன் ஃபோன் பண்ணினார்.
“சார்! மேடத்தை
அழச்சிண்டு உடனே
ஸ்டேஷன் வர்ரீங்களா?
ஆளப்பிடிச்சிட்டோம்!”
ரெண்டாவது மசால் தோசையை
கணேஷ் தியாகம்
செய்ய வேண்டியதாகிவிட்டது.
மலை வாசஸ்தலத்துக்கு என
போலீஸ் ஸ்டேஷனுக்கும்
சில ப்ரத்யோக
அடையாளங்கள் உண்டு.
எல்லா போலீஸ்காரர்களும் போட்டிருந்த காக்கி ஸ்வெட்டர்
தண்ணி காணாமல்
நாறியது. ரூம்
முழுக்க சிகரெட்
துண்டங்கள். ஓரமாக
ஒன்றிரண்டு க்வார்ட்டர்
பாட்டில்களும். நாற்காலிகள்
தாறுமாராக கலைந்து
இருந்தன. எல்லா
டேபிள்களிலும் காலி
டீ, காபி
க்ளாஸ், அதில்
மேயும் சில
ஈக்கள்.
சினிமாவில் வருவது போல
அவனை கம்பிக்குப்பின்னாலெல்லாம் வைக்க
வில்லை. ஓர
பெஞ்ச்சில் தலை
குனிந்து உட்கார்ந்திருந்தான். அதே
விண்ட் சீட்டர்.
ஷூக்களைக்கழட்டிவிட்டிருந்தான். கன்னத்தில் லேசாக
ரத்தத்தீற்று. கண்களில்
இன்னும் சிவப்பு,
பயம்.
கதிரவன் கணேஷ், நீரஜாவைப்பார்த்த்தும், “டேய்!
உள்ள போ!
கான்ஸ்டபிள் அவனை
உள்ளே அழைத்துக்கொண்டு போக,
“இவன் இல்லை
சார்”!
”இவன் இல்லியா?
ஏன் கதிரவன்?”
”நீங்களே பேசிப்பாருங்க. பைத்தியக்காரன்!”
”வாடா இங்க”
அமைதியாக வந்து உட்கார்ந்தான்.
”டீ சாப்புடு”
சத்தம் போட்டு உறிஞ்சிக்குடித்தான்.
”சிகரெட்?”
வாங்கிப்பற்ற வைத்து இழுத்தான்.
மேலே பார்த்து
புகை விட்டான்
“சாயாவை ஏன்
கொலை பண்ணினே?”
வெறித்துப்பார்த்தான்.
”அதான் நான்
கொல்றதுக்கு முன்னாலேயெ
கொன்னு போட்டாங்களே! நல்லா வேணும்அவளுக்கு!”
பதிமூன்று
”அவ மேல
உனக்கு என்னய்யா
கோவம், கொல்ற
அளவுக்கு?”
”துரோகிக்கெல்லாம் மன்னிப்பே
கிடையாது”
எதோ சினிமா டைலாக்
போல பேசினான்.
முகத்தில் எக்ஸ்ப்ரெஷன்
எல்லாம் காட்டினான்.
”என்ன துரோகம்
பண்ணிட்டாங்க அவங்க?”
”ரத்னகுமார கல்யாணம்
பண்ணிக்கறதுக்கு என்ன
பேரு?”
”உன் வரைக்கும்
ந்யூஸ் வந்துடுத்தா?”
”காஸ்மபாலிடன் க்ளப்பாண்ட
பேசிக்கினாங்களே!”
”அதுல உனக்கென்ன
கஷ்டம்? உன்னையா
எமாத்தினாங்க?’
என்னை மட்டுமில்லை. என்ன
மாதிரி எத்தனை
ரசிகருங்கள எமாத்த
பாத்தாங்க?’
”என்னது ரசிகர்ங்களா?”
”ஆமாம். தலைவர்
ஜெயசங்கரோட ரசிகருங்க.
அவர் போய்ச்சேர்ந்துட்டாரு. இவங்க
விதவையா அமைதியா
இருக்க வேணாம்.இன்னொரு கல்யாணம்
பண்ணிக்குவாங்களா?
”நீரஜ்! ஹீ
ஈஸ் அஸ்
நட்டி அஸ்
அ ஃப்ரூட்கேக்!”
”யோவ்! என்னயா
சொல்றே?”
”ஆமாங்க! ரத்னகுமார்
யாரு? ரவிச்சந்திரனை
வெச்சு படம்
எடுத்தவரு! இவங்க
சிஐடி, வல்லவன்னு
தலைவர் ஜெய்யோட
நடிச்சுட்டு, இப்ப
அவர் உயிரோட
இல்லேன்னு இப்படி
பண்ணலாமா? அதான்
போட்டுத்தள்ளிடணும்னு பூம்பாறையிலேர்ந்து வரேன்.
அதுக்குள்ள என்
தலைவனோட ரசிகன்
யாரோ குத்திப்போட்டுட்டான். துரோகம்
பண்ணினா மேலேருந்து
ஜெய் சும்மா
இருப்பாரா?”
”நா சொல்லலை?”
”கதிரவன்! அட்
பெஸ்ட் இவன்
ஒரு விட்னெஸ்!
அவ்வளவுதான்! ஏதானும்
க்ளூ கெடச்சிதா?”
”இல்ல மேடம்!
யாரையும் பாக்கலைங்கறான்”
”ரத்னகுமாரை விஜாரிச்சீங்களா கதிரவன்?”
”இதோ கெளம்பிண்டே
இருக்கெம்மா, நீங்களூம்
வர்ரீங்களா?”
இல்ல கதிரவன், நானும்
கணேஷும் கொஞ்சம்
ஜாலியா ஊர்
சுத்தப்போறோம்னு சொல்லுவாள்
என்று கணேஷ்
எதிர்பார்க்க, நீரஜா
ஸ்பஷ்டமாக, “நாங்க
இல்லாமயா? என்ன
கணேஷ்” என்று
கேட்க, ”அஃப்
கோர்ஸ்” என்றது
கணேஷின் வாய்.
பதிநாலு
செகண்ட் ஹெவன் என்ற
பெயர் கொண்ட
அந்த எஸ்டேட்
பங்களா அமைதியாக
இருந்தது. வேலைக்காரர்
நடமாட்டம் கூட
அவ்வளவாக இல்லை.
40க்கு 30 என்ற
அந்த வரவேற்பறையில்
உட்கார்ந்தார்கள். அந்த
மூலையில் இருந்த
ஃபையர் ப்ளேஸில்
எரிந்து கனன்ற
கங்குகளோடு சில
விறகுகள். அந்த
சுவற்றின் மேல்
ஒரு க்ளாஸ்.
நேற்றைய சோக
சாரயம்! மிகப்பெரிய
புத்தக அலமாரி.
கடைசியாக யாராவது
அதில் புத்தகம்
எடுத்து பத்து
பன்னிரண்டு வருஷம்
ஆகியிருக்க வேண்டும்.
அலங்காரப்பொருட்கள் சென்ற
நூற்றாண்டைச்சேர்ந்தவை போல இருந்த்தை
கவனிக்காமல் இருக்க
முடியாது. மேலே
இரண்டே ஃபொட்டோக்கள். ஒன்று ஜிப்பா போட்ட
கிழவர், இன்னொன்று
அதே கண்கள்
படத்தில் சைக்கிளில்
உட்கார்ந்திருக்கும் ரவிச்சந்திரன். ஃபோட்டொவில் இல்லாத, பூம்
பூம் பூம்
மாட்டுக்காரன் பாடும்
காஞ்சனாவைப்பார்த்த கிலேசம்
அவர் முகத்தில்
தெரியும்படியான அவஸ்தைப்புன்னகையுடன் இருந்தார்.
கலைந்த பைஜாமா, இன்னும்
கலைந்த ஜிப்பா
அதன் மேல்
கம்பளி ஷால்
என கோடை
வாஸஸ்தல பணக்காரர்கள்
உடையில் ரத்னகுமார்
இறங்கி வந்தான்.
சிவந்த கண்கள்….. சோகமா
சாராயமா?
”உங்க வருத்தம்
புரியுது, இருந்தாலும்
சில கேள்விகள்”
”ம்”
”இது கணேஷ்,
ஸ்டேன்ஸ் எஸ்டேட்,
இது நீரஜா.
சாயாவின் கொலயை
முதலில் பார்த்தவர்கள்”
ரத்னகுமாரின் கண்கள் கூச்சமே
இல்லாமல் நீரஜாவின்
உடல் மேல்
ஒரு முறை
மேய்ந்த்தை கதிரவனே
ரசிக்கவில்லை.
”போன வாரமெல்லாம்
சாயா எப்படி
இருந்தாங்க? அவங்க
ஏதானும் கவலை,
பயம் சொன்னார்களா?”
”பயமா? எதுக்கு?”
”இல்ல, உங்களுக்குத்தெரியாம சாயாவுக்கு ஏதானும் கவலைகள்,
பயங்கள்..?”
”சாயா ரொம்ப
தைரியசாலி இன்ஸ்பெக்டர். அந்தக்காலத்துலேயே.சினிமாவுல தனியா
சமாளிச்சவ அவ”!
”அவங்களுக்கு எதிரின்னு
யாராவது…?”
”எனக்குத்தெரிஞ்சு அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல”
”அவங்களோட தனிப்பட்ட
வாழ்க்கை பத்தி
ஏதானும் சொல்லமுடியுமா?”
”சில வருஷங்களாவே
விஸ்ஃபெரிங் ஹைட்ஸில்
தனியாத்தானே இருந்தா.
ஒரே ஒரு
நம்பிக்கையான வேலைக்காரி.
கோடை, மதுரை
ன்னு பார்ட்டி,
ஃபங்க்ஷன்னு
கலந்துப்பா. முன்னாள்
நடிகைன்னு சில
பேர் இன்னும்
கெஸ்டா, தலைமை
தாங்க, ப்யூட்டி
சலூன், நகைக்கடை
திறப்பு விழான்னு
கூப்பிடுவாங்க. போய்ட்டு
வருவா. அவ்வளவுதான்”
இன்னும் கேள்விகள், புதிதாக
உபயோகம் இல்லாத
பதில்கள்.
”அவசியம் இருந்தா
மறுபடி வர்ரேன்
சார்”
திரும்பி ஜீப்பில் போகும்போது
நீரஜா, “ கதிரவன்!
என்னை விஸ்ஃபெரிங்
ஹைட்ஸில் இறக்கி
விடறீங்களா?
”என்ன மேடம்,
நானும் வேணா
வரேனே!”
”இல்லை கதிரவன்.
நான் கொஞ்சம்
அந்த வேலைக்காரியோட
தனியா பேசிப்பாக்கறேன். எதானும் புதுசா தெரியலாம்.”
”நான் நல்லா
மிரட்டி விஜாரிச்சுட்டேங்க. உருப்படியா
ஒண்ணும் இல்ல”
”இல்ல! அஸ்
ய லேடி,
என்னால ஏதானும்
வெளியே கொண்டுவர
முடியுமான்னு பாக்கறேன்.”
பதினைந்து
”கணேஷ்! நீங்க
கூட வரவேணாம்!”
அப்பட்டமாக கணேஷ் முகத்தில்
ஏமாற்றம்.
’நீரஜா! உனக்கு
ஏதானும் ஆபத்து..?””
”பட்டப்பகல்ல என்ன
ஆபத்து கணேஷ்!
டோண்ட் பி
சில்லி!”
”நீங்க போய்
அந்த Valley’s Kitchenல வெய்ட் பண்ணுங்க. ஒன்
அவர், மே
வாபஸ் ஆவூங்கா!”
கணேஷ் ஒவ்வொரு நிமிடத்தையும்
கணக்குப்பண்ணிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். ஒரு மணி
நேரம் தாண்டி
இன்னும் முப்பது
நிமிஷம் ஓடியது.
நீரஜாவுக்கு ஃபோன்
பண்ணலாம் என்றால்
அவளிடம் மொபைல்
இல்லை.
நான் என்ன குழந்தையா,
அப்படி என்ன
அவசரம் என்று
கோபித்துக் கொண்டுவிடுவாள்.
இன்னொரு காஃபி ஆர்டர்
பண்ணி ஆறவைத்துக்குடித்தான்.
சே என்ன பொண்ணு
இவ? சொன்னா
சொன்ன நேரத்துக்கு
வர்ரதில்லையா? ஏதானும்
ஆபத்துல மாட்டிண்டு
இருப்பாளோ?
பொறுக்க முடியாமல் கிளம்பி
விஸ்ஃபெரிங் ஹைட்ஸை
நோக்கி நடந்தான்.
நேற்று கொலை நடந்த
அடையாளம் மிச்சம்
இருந்தது ஒரே
ஒரு சோம்பேறி
கான்ஸ்டபிள் வாசலில்.
”மேடமா? அவங்க
அப்பவே போய்ட்டாங்களே?”
கணேஷுக்கு அட்ரினாலின் எகிறியது!
எங்கே போயிருப்பாள்?
மறுபடி
Valley’s Kitchen ஓடினான்.
இல்லை.
பதினாறு
கதிரவன்!
காரை எடுத்துக்கொண்டு போலீஸ்
ஸ்டேஷனுக்குப்போனால் கதிரவன்
ட்யூட்டியில் இல்லை.,
அவர் வீடு
இருக்கும் இட்த்தை
கேட்டுத் தெரிந்துகொண்டு விரைந்தான்.
மேடும் பள்ளமுமான அந்த
காலனியில் வீட்டுக்கு
வீடு வாசலில்
துணிமணிகள் காய்ந்துகொண்டிருந்தன. சின்னப்பையன்கள் சமீபத்திய கிரிக்கெட்டின் மிச்சம்
மீதியை தங்கள்
ஆட்டத்தில் காட்டிக்கொண்டிருக்க, கணேஷ்
கதிரவன் வீட்டைத்தேடியவாறு நடக்க,
எதிரில் கதிரவன்,
கூடவே நீரஜா!
”நீரஜா, என்ன
ஆச்சு? எங்கிட்ட
சொல்லாம இங்க
எங்க வந்தே?”
”சாரி கணேஷ்!
அவசரம், சாரி!”
”எவ்வளவு பயந்துட்டேன்
தெரியுமா?”
நீரஜா கணேஷின் அக்கறை
மீதான படபடப்பையும்
கோபத்தையும் ரசித்தாளோ?
”சார்!மேடம்
ரொம்ப ஷார்ப்!
கேஸ் முடிஞ்சு
போச்சு!”
பதினேழு
”என்னது, கொலைகாரனைக்கண்டு பிடிச்சுட்டீங்களா?”
”ஆள் தெரிஞ்சு
போச்சு! பிடிக்க
வேண்டியதுதான்.”
”எப்படி நீரஜா?”
”சிம்பிள் கணேஷ்!”
”சாயாவுக்கு சினிமாவுல
சேர்ரதுக்கு முன்னமே
ஒரு கல்யாணம்
ஆகிவிட்டது. அவள்
அப்பவே பிரிஞ்சு
வந்துவிட்டாள். அதுக்கு
இன்னும் டைவர்ஸும்
கிடைக்கவில்லை. அந்தக்கணவனுக்கு மாசாமாசம் இவள் பணம்
கொடுத்துண்டிருந்திருக்கிறாள். இவளுடைய சினிமா
வாழ்க்கை, அப்புறம்
இந்த சொகுசு
வாழ்க்கைக்கு அவனுக்கு
ரான்சம்! இப்போ
ரத்னகுமாரோட கல்யாணம்னவுடனே அவன் பெரிசா ஏதோ
கேட்டிருக்கணும். பேரம்
படியாமல் தீர்த்துவிட்டான்.”
”பட் நீரஜா!
அன்னிக்கு நாம
சாயாவை ஒரு
மணி நேரம்
முன்னால பாத்திருக்கோம். அவ வீட்டிற்கு போனாள்.
உடனே நாமளும்
அங்க போய்ட்டோம்.
அதுக்குள்ள இந்த
ஜெய் ரசிகனும்
போயிருக்கான். அப்ப
நடுவுல வந்தது
யாரு?”
”கணேஷ்! அப்பா
சொல்லுவார், க்ரைம்
டிடெக்ஷன்ல
மிக முக்கியம்
சின்ன விவரம்னு.
நானே அத
மிஸ் பண்ணிட்டேன்.”
”புரியல நீரஜா!”
”கணேஷ்! நீரஜாவின்
முன்னாள் கணவன்
ஒரு போலீஸ்காரன்!”
”மை காட்!
நீரஜா? அந்த
ஆவின்னு நாம
நெனச்சு சிரிச்ச……..”
”கொல பண்ணிட்டு
ஃப்ரெஷா போன
கொலைகாரனைப்பார்த்தும் விட்டுவிட்ட நானெல்லாம்
ஒரு க்ரைம்
இன்வெஸ்டிகேடர்! ஐயாம்
அஷேம்ட்!”
அன்று மாலை நீரஜா
டெல்லி கிளம்பினாள்.
முதல் நாள் ஸ்கூல்
போகும் பையன்
போல கணேஷ்
முகத்தை வைத்துக்கொண்டிருந்தான்.
”கணேஏஏஷ்! அடுத்த
மாசம் வி
ஆர் மீட்டிங்
அகைன்”.
”ஒரு மாசம்
நீரஜ்! முப்பது
நாள்!”
”ஹௌ ரொமாண்டிக்!”
கதவு தட்டப்படும் சத்தம்.
”சார்! லக்கேஜ்
எடுத்துக்கலாமா?”
அவன் போன பின்
கணேஷ் நீரஜாவை
நெருங்கினான்.
”ஒரு மாசம்
தாங்கறாமாதிரி ஏதானும்…?”
நீரஜா நேர்த்தியாக அவனை
ஒரு கையால்
அணைத்து, இன்னொரு
கையால் அவன்
தலையைக்கீழே இறக்கி……
இந்த முறை ஸ்ருதி
சுத்தமான முத்தம்!
மொபைல் ஃபோன் அடித்தது
ராமனாதன்!
நீரஜா விவரம் சொன்னாள்.
”நீரஜ! !என்னுடைய கடமை பாதி முடிந்துவிட்டது.
இனிமேல் அடுத்த கேஸை நீயே ஹாண்டில் பண்ணணும்மா. ன்இனிமேத்தான் உதவிக்கு கணேஷ் வந்தாச்சே”
நீரஜா லேசான வெட்கம், பெருமிதம் கூடவே துளியூண்டு கர்வம் சேர கணேஷைப்பார்த்த பார்வையில் இருந்தது காதலா இல்லை வெறும் சந்தோஷமா?
நீரஜா லேசான வெட்கம், பெருமிதம் கூடவே துளியூண்டு கர்வம் சேர கணேஷைப்பார்த்த பார்வையில் இருந்தது காதலா இல்லை வெறும் சந்தோஷமா?
முடிந்தது
அருமையான crime கதை! போலீஸ் ஆவின்னு முதலில் திசை திருப்பி பின் போலீஸ் ரூபத்தில் கொலைகாரன்.மீண்டும் 'சுஜாதா' JR எழுத்து மூலம் என்று தாராளமாக சொல்லலாம். Great! தொடர்ந்து இப்படி வாசிக்கும் வாய்ப்பு தாருங்கள் JR ஜீ!
ReplyDeleteநறுக்கென்று மர்மம் விலகிவிட்டதே!
ReplyDelete