Sunday, 14 January 2018

இந்த வாரம் கொஞ்சம் லேட்டாகக்கதையரங்கம்....(15 ஜனவரி 2018)

வீடு வரை ………

இளங்கார்வண்ணனுக்கு வயிற்றில் என்னமோ எரிந்தது. முகத்திலும் வார்த்தைகளிலுமாய் அது கொட்டியது.

“எங்கடா அந்தத்…….? இன்னிக்கு மொதக்காரியமா அங்க போய் சூட்கேச எடுத்தாரச்சொன்னேனா இல்லியா? இருவது லட்ச ரூவாய்டா தாயோளிங்களா?”

“தோ வர்ரேன்னிட்டுப்பின் பக்கம் போயிருக்காருங்க!”

“அத்தச்சொல்லு! நானே நாலு பரோட்டாதான் தின்றேன்! இவுரு எட்டு பரோட்டாவும் ஒரு பக்கெட் சால்னாவும் துன்றாரு! என் புடுங்கிக்காது!”

இப்போது இளங்கார்வண்ணனுக்கு வயிற்றின் ஓரத்தில் வலி தொடங்கி ”பளிச் பளிச்”சென்று மேலே பரவியது. வயிறு குழைந்து ஒரு டஜன் முள் குத்தினாற்போல் வலித்த்து. வலியில் அலறினார்.

டேய்! இன்னாவோ செய்யுதுடா! டாக்டர இட்டா, போ! ஒடனே இட்டா?

அந்தப்பெண்ணுக்கு ஐம்பதுக்கு மேல் வயது இருக்கலாம். நடையில் ஒரு தள்ளாட்டம். புஸ் புஸென்று மேல் மூச்சு வாங்கிய பாரியான உடல் வாகு.

”இங்க உக்காருங்க!”

உட்கார்ந்தவுடன் உடல் விதிர்த்த்து. மேலும் கீழும் வாங்கின மூச்சு ஓரிரு நிமிடங்களில் சீரானாலும் அவளின் படபடப்பு குறையவில்லை.

”ரிப்போர்ட்ட குடுங்கம்மா?”

வாங்கிப்பார்த்தார். போஸ்ட் பராண்டியாலே 400க்கு மேல். போன மூன்று மாத ரிப்போர்ர்ட்டிலும் அப்படி ஒன்றும் சிலாக்கியமில்லை. ஃபாஸ்டிங்கில் இருநூறுக்குக்குறையாமல் இருந்தது.

காலக்காமிங்க!

கால் விரல் நுனி, பாதங்களீல் சோகை படிந்திருந்த்து. ரத்த ஓட்ட்த்தின் சாயலே இல்லை. வலது கால் மேல் பாத்த்தில் அடிபட்டு சீழ் பிடித்து ரத்தமின்றி திசுக்கள் இறம்துபோய்…

டையபெடிக் வெட் காங்கரீன்!

“என்னம்மா வேல செய்யறீங்க?”

“எங்கங்க, வேலைக்கிப்போக முடியலையே!”

”இல்ல எங்க வேல செஞ்சுண்டிருந்தீங்க?”

”அந்த கம்ப்யூட்டர் ஆஃபீசுல பெருக்கி துடைப்பேன், காபி டீ போட்டுத்தருவேன்! ஒரு மாசமா போக முடியலீங்க!”

”வீடு எங்க?”

”தோ இங்கதான், கெனாலண்ட! அரிசி மண்டிக்கு பக்கமா கட்சீ குடிசங்க!”

”புருஷன் என்ன பண்றாரு?”

”இல்லீங்க! பத்து வருஷம் மின்னடியே போய்ட்டாரு! கொல்த்து வேல! மொத மாடிலேர்ந்து உழுந்துட்டாரு! பெரிய ஆஸ்பத்ரிலியில பத்து நாள் வெச்சுப்பாத்தாங்க! தங்கல! போய்ட்டாரு!”

ஏதோ இன்று செவ்வாய்க்கிழமை போலச்சொன்னாள்

”பசங்க?”

”பொறக்கவே இல்லீங்க!”

”சரி இப்ப அந்தக்காலக்காட்டுங்க!”

“டாக்டர் அழகேசன்! தலைவரு வலியில துடிக்கிறாரு! உடனே வாங்க!”

”என்ன ஆச்சுய்யா? தோ வரேன்!”

”எங்கய்யா இருக்காரு?”

”இப்பத்தான் படுத்தாரு! வலி தாங்கலின்றாரு!”

”ஆமா இப்ப வந்து கேளுங்க! சொன்னா கேக்கறதே இல்ல! அவரோட வயித்து நெலமைக்கு சோடா கூட குடிக்கக்கூடாது! இவரு என்னடான்னா பிராந்தி இல்லாம படுக்கப்போறதே இல்ல! என்னவோ போ! ஏதோ நாந்தான் காரணம் போல கத்துவாரு!”

”வாய்யா! வலி தாங்கல! சீக்கிரம் பாரு! எதுனா மருந்து குடு!”

”தலைவரே! நா சொல்றதக்கேட்கவே மாட்றீங்க! வயித்துல புண் முத்திக்கினு வருது! ஆஸ்பத்ரி போனாத்தான் சரிப்படும்!”

அதெல்லாம் முடியாதுய்யா! அவனாரு அந்த ஜென்லாஸ்பத்ரி பெரிய டாக்டர், அவன வரச்சொல்லு. தனியா ஃபீஸ் குடுத்துர்ரேன்னு சொல்லி கூட்டிட்டு வாய்யா! என்னால நகர முடியாது! டேய்! பெரம்பலூர் ஆள் வந்தானா? டெண்டர் விடற வரைக்கும் இங்கவே சுத்திக்கினு இருந்தான்.இப்ப பாரு, ஆளையே காங்கல! ஃபோனப்போட்டு இன்னி ராவுக்குள்ள பொட்டி வரணும்னு சொல்லு! அய்யோ! வலி குத்துதுய்யா! டேய் டாகடா! எதுனா ஊசி கீசி போட்டுப்பாருய்யா!”

”வாங்க அழகேசன்! போலாமா?”

”எங்கய்யா?”

”ஜென்லாஸ்பத்ரிக்கித்தான்! போய் அந்தப்பெரிய டாக்டர் வண்டியில போட்டுக்கொணாந்திடலாம்!”

”ஆமா நீ பெரிய இவன்! கூப்ட்டா உடனே வந்துடுவாரா?”

”என்னா டாக்டரே! தலைவர் இளங்கார்வண்ணன்னு சொன்னா எந்திரிச்சி நிக்க மாட்டான் அந்தப்பெரிய டாக்டர்?”

”போய்ப்பாரு! நான் வரமட்டேன்! போன வருஷம் என்ன்யப்போட்டுக்காச்சிட்டாரு!”

”த பாரு நீயி இங்கவே இரு! தலைவருக்கு எதுனா ஊசி போட்டு வலியக்குறைக்கப்பாரு! அடுத்த ஒரு மணி நேரத்துல அவர இஸ்துக்கினு வரெனா இல்லியா பர்ரு!”

அந்தப்பெண்ணின் காலில் வீக்கம் தெரிந்த்து. உணர்ச்சியே இல்லை என்றாள் அந்தப்பெண்.

இங்க உக்காருங்க! ப்யூலா! கிவ் ஹர் சம் டீ! ஸ்டிரிக்ட் நோ ஷுகர்! அனிதா! கெட் மி டாக்டர் நரசிம்மன்!”

“நரசிம்மா! உம்பேஷண்ட்டப்பார்த்தேன்! ஸ்வெல்லிங், பிளிஸ்டெரிங் அண்ட் வெட் காங்ரீன்ப்பா!” ஷுகர் எங்கியோன்னா இருக்கு!”

”அதான் டாக்டர் எனக்குமே கவலை. என்ன பண்ணட்டும்!”

”வேற வழியே இல்ல நரசிம்மா! ட்ரீட் பண்ணியே ஆகணும்! ரெஸ்டோரிங் ப்ளட் ஃப்ளோ! கூடவே ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் தெராபி! முதல்ல இன்ஃபெக்ஷன ட்ரீட் பண்ணனும். அதுக்கு நாளைலேர்ந்தே ஒரு முழு கோர்ஸ் க்ளோராம்ஃபெனிகால் இல்லேன்னா க்ளிண்டாமைசின்!”

”ஆனா புரொஃபசர்..?”

”என்ன இழுக்கறே?”

”டெய்லி அவங்கள வரச்சொல்றது, வித் ஹர் லெக் கண்டிஷன்…?”

”கரெக்ட்! யோசிக்கறேன்!”

ப்யூலா மடமடவென உள்ளே வருதல்

”டாக்டர்! தலைவர் இளங்கார் வண்ணன் வீட்லேர்ந்து வந்திருக்காங்க! எமர்ஜென்சியாம்! உங்கள கூட்டிட்டுப்போகணூம்னு சொல்றாரு!”

“இளங்கார்வண்ணன் உனக்குத்தலைவரா? எனக்கு இல்லியே!”

“டாக்டர்..?”

”எமர்ஜென்சியா இல்லியான்னு நாந்தான் டிசைட் பண்ணனும்! சரி செண்ட் ஹிம் இன்!”

”டாக்டர்! உடனே பொறப்படுங்க! தலைவருக்கு வயித்து வலி!”

“யாருய்யா நீயி! மொதல்ல என்னோட பையைக்கீழ வெய்யி! என்னாச்சு உங்க தலைவருக்கு?”

”நேத்து பிராந்தி கொஞ்சம் ஓவராயிடுச்சு! இன்னி காலையில வேற காரமா பரோட்டாவும் சால்னாவும் அடிச்சிட்டாரு! இப்பா வயித்து வலில துடிக்கறாரு!”

”அவரு டாக்டர் ஒருத்தர் இருப்பாரே?”

”டாக்டர் அழகேசன்! அவரும் அங்கதான் இருக்காரு!”

”அப்ப நா எதுக்கு?”

”சொம்மா பேசிக்கினே இருக்காதீங்க! கெளம்புங்க!”

”யோவ்! வேளில போய்யா! வர முடியாதுன்னு பெரிய டாக்டர் சொல்லிடாருன்னு சொல்லு, போ!”

”யோவ்! யாருன்னு நெனச்சீங்க! எங்க தலைவரு ஒரு வார்த்தை சொன்னா நீ இங்க டீனா இருக்க முடியாது, தெரியும்ல?”

”ஆனத பாத்துக்கோ ! ஆனா இப்ப நீ வெளில போறியா இல்லியா? அவினாஷ்! கால் தெ செக்யூரிட்டி! சக் திஸ் ஃபெல்லோ அவுட்!”

மறுபடி ஃபோனுக்குத்திரும்பினார்.

”சாரி நரசிம்மன்! இங்க சின்ன ஸ்கிர்மிஷ்! சொல்லு?”

”இல்ல புரொஃபசர்! அந்த லேடியால தினமும் நடந்து கிளினிக்குக்கு வந்து இஞ்சக்ஷன் போட்டுக்கறது…?”

”கரெக்டுதான்! கெனால்கிட்டதான் வீடுன்னு சொன்னா அந்த லேடி! ஓகே, நானே தெனமும் அவ வீட்டுக்குப்போய் இஞ்சக்ஷன் போட்டுடறேன்!”

”புரொஃபசர்! நீங்களா? வேணாம்! நான் போறேன்!”

”இல்ல நரசிம்மா! நீ எங்கியோ மைலாப்பூர்ல இருக்க, நா பெசண்ட் நகர்தானே! எனக்குப்பக்கம் தான்! ஹாஸ்பிடலுக்கு ஒரு பத்து நிமிஷம் முன்னால கெளம்பி நானே போய் இஞ்சக்ஷன் போட்டுர்ரேன்!”

ப்யூலா! கால் தட் லேடி! அண்ட் ஸ்டோர்லேர்ந்து ஒரு கோர்ஸ் க்ளிண்டாமைசின் வயால் எடுத்து என் பையில வெச்சுடு! டோண்ட் ஃபர்கெட்!”

டாக்டர் வைகுண்டம் தன் பேஷண்ட்டைக்கவனிக்கத் ்தயாரானார்.

No comments:

Post a Comment