Saturday, 14 July 2018

இன்றைய (15 ஜூலை 2018) கதையரங்கத்தில்....

சான்றாண்மை...

“கங்கிராஜுலேஷன்ஸ் புரொஃபசர்!

“ப்யூலா! என்ன இது? கூட்டமா எல்லோரும்? என்ன விசேஷம்? எனக்கு எதுக்கு கங்கிராசுலேஷன்ஸ்?”

“புரொஃபசர்! நீங்க இப்ப பி சி ராய் அவார்டு வின்னர்!”

”என்னது? பி சி ராய் அவார்டா?”

“ஆமா டாக்டர்! இப்பத்தான் ஈமெயில் வந்தது! எமினெண்ட் மெடிகல் பர்ஸன்ங்கற காடிகரியில!”

”எங்க கொண்டா?”

”இந்த மாசம் பதினெட்டாம் தேதி இந்திய ஜனாதிபதியே சென்னைக்கு வர்ரார். ராஜ்பவன்ல ஃபங்ஷன்! டாக்டர்! வி ஆர் ப்ரௌட்! இன்னிக்கு ட்ரீட்!”

”வாட் நான்சென்ஸ்! எல்லோரும் முதல்ல கெட் அவுட்! ப்யூலா! க்ளீயர் தெம் அவே! இர்ரெஸ்பான்ஸிபிள் டாக்டர்ஸ்! கோ பேக் டு யுவர் ட்யூட்டி!

சிரித்துக்கொண்டே அவர்களை வெளியேற்றினார்.

“முனுசாமியும் அவன் பொண்டாட்டியும் வந்திருக்கணுமே! அவங்க ரெண்டு பேரையும் வரச்சொல்லு!ப்யூலா! ஆஸ்பிட்டல்ல எல்லோருக்கும் கேக் ஆர்டர் பண்ணிடு. காசு என்கிட்ட வாங்கிக்கணூம். அண்ட், க்ளோஸ் தி டோர்! வாங்க முனுசாமி! வாங்கம்மா! உக்காருங்க!

”வணக்கமுங்க அய்யா!”

“ஆச்சா இன்னித்து டையாலிஸிஸ்?”

“ஆச்சு டாக்டர்! கேரா இருக்கு! ஜுரம் அடிக்கறாமாதிரி இருக்கு!”

“இன்னிக்கு ஒரு நாள் அப்படித்தான் இருக்கும். நாளைக்கு நல்லா ஆய்டுவ முனுசாமி!”

“இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி டாக்டர்?”

“த பாரு முனுசாமி! உன்கிட்ட பொய் சொல்ல மாட்டேன்! உன்னோட கிட்னி டாமேஜ் ஆயிருக்குப்பா! அதுவும் மோசமா!”

“அய்ய்ய்யோ!”

“சக்கரை வியாதிய கண்ட்ரோலே பண்ணல் நீ! பதினாறு வருஷமா 350க்கு மேலயே இருந்திருக்கு! போறாத்துக்கு நீ பாட்டுக்கு பிரியாணி இனிப்புன்னு வெளுத்து வாங்குவியாமே!”

“இது கோள் சொல்லிச்சா டாக்டர்? ஒரே முட்டா புளுகுது டாக்டர்!”

“அவங்க ஏன் புளுகணும்? சரி விடு! உன்னோட கிட்னி கண்டிஷன் ஆபத்துதான்! எண்ட் ஸ்டேட் ரீனல் டிஸீஸ்ம்போம் நாங்க!”

“டாக்டர்! எனக்கு இன்னும் நாலஞ்சு வருஷமாவது வாழணும்! மூணு பொண்ணுங்க இருக்குது. எல்லாம் பாஞ்சு வயசுக்கு மேல வயசுல! அவுங்கள காலேஜ் வரிக்கும் படிக்க வெச்சுட்டா கல்யாணம் காட்சிங்கள அதுங்களே பாத்துக்கும்!”

“அதெல்லாம் அமக்களமாப்பண்ணலாம் முனுசாமி! ஆனா சரியா ட்ரீட்மெண்ட் பண்ணினா இன்னும் பத்து வருஷம் கியாரன்டி உனக்கு!”

“என்ன ட்ரிட்மெண்ட் டாக்டர்?”

“கிட்னி டிரான்ஸ்ப்ளாண்ட்! அதாவது மாத்து கிட்னி பொருத்தணும்ப்பா! பண்ணிக்கிறியா?”

”அய்யோ கிட்னி மாத்து ஆபரேஷனா? டேஞ்சர் இல்லிங்களா அது?”

”அடப்போ முனுசாமி! முத கிட்னி டிரான்ஸ்ப்ளாண்ட் எப்ப பண்ண ஆரமிச்சாங்க தெரியுமா? 1950லயே ! அந்த பேஷண்ட் 5 வருஷம் இருந்தாரு!”

”அஞ்சு வருஷம்தானா?”

“அப்பல்லாம் இம்யூனோஸப்ரெஸிவ் தெராபியெல்லாம் இல்லாத காலத்துலயே அமக்களமா கிட்னி மாத்து பண்ணியிருக்காங்க. இப்பல்லாம் அது சர்வ சாதாரணம், நாங்க டாக்டர்ல்லாம் இருக்கோமில்ல, பாத்துப்போம்!”

“ரொம்பச்செலவாகுமே டாக்டர்?”

“அதான் உனக்கு கவர்மெண்ட் இன்ஷூரன்ஸ் இருக்கே! பணத்தப்பத்தி கவலையை விடு. நா ஏற்பாடு பண்றேன்?”

“அப்ப பண்ணிக்கலாம்ங்கறீங்களா?”

“பண்ணியாகணும் முனுசாமி! இல்லேன்னா உன் உயிருக்கு நா காரண்ட்டி தரமுடியாது!”

“டாக்டர்! இவுரு உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லியே?”

“ஒண்ணும் கவலைப்படாதீங்கம்மா! டிரான்ஸ்ப்ளாண்ட் டெக்னாலஜியெல்லாம் இப்ப நல்லா முன்னேறியிருக்கு. என்னோட ஸ்டூடண்ட் டாக்டர் சுனீல்னு. இந்த சப்ஜெக்ட்டுல எக்ஸ்பர்ட். அவனத்தான் பண்ணச்சொல்லப்போறேன்!”

டாக்டர்! நீங்க பண்ணமாட்டீங்களா? வேற யாரும் வாணாம் டாக்டர். நீங்க பண்ணினாத்தான் நா ஒத்துப்பேன். இல்லேன்னா இப்படியே இருந்துட்டு போறேன்!”

“விளையாடாத முனுசாமி! நான் டிரான்ஸ்ப்ளாண்ட்டெல்லாம் படிச்சதில்ல. எனக்கு இது பத்தி தெரியாது!”

“டாக்டர்! உங்களுக்குத்தெரியாத சமாச்சாரம் ஒண்ணு இருக்கா! அதெல்லாம் முடியாது. நீங்க கூட இருந்தாத்தான் எனக்கு ஆபரேஷன். இல்லேன்னா வாணாம்! அவ்வளவுதான்.

“என்ன முனுசாமி இது குழந்த மாதிரி பிடிவாதம்! சரி சுனீல்தான் ஆபரேஷன் பண்ணுவார். ஆனா நிச்சயமா நா ஆபரேஷன் தியேட்டர்ல கூடவே இருக்கேன் போறுமா?”

”அதுதான் எனக்கு வேணும் டாக்டர்!”

”சரி நா பேசிட்டு ரெண்டு நாள்ல சொல்றேன். உங்களுக்கு யார்னா கிட்னி குடுக்க சம்மதிப்பாங்களா உங்க வீட்டுல?”

“அப்படீன்னா?”

“உங்க ஒறவு மனுசங்க யாரானு ஒரு கிட்னி தானம் பண்ணுவாளா?”

“த பார்ரா! கிட்னி தானமா? எனுக்கு உடம்புக்குன்னாலே ஒரு பயபுள்ள கிட்ட நெருங்க மாட்டானுவ! எங்க மனுஷாளுங்க தாம்பரம் செங்கல்பட்டுன்னு ஒளிஞ்சுப்பாய்ங்க. இதோ இவ ஆசாமிங்க ஊர விட்டே ஓடிருவாங்க! அத்தனை அன்பு எம்பேர்ல!”

“ஆமாய்யா சொல்லு இப்ப! கண்ணாலம்போது நீ என்ன குடி குடிச்சு எங்கூட்டு ஆளுங்கள எப்படில்லாம் ஏசியிருப்ப. இப்ப நமக்குஅவசரம்னா வருவாங்களா?”

”உங்கண்ணன் ஒருத்தன் இருக்கானே அவஞ்செஞ்ச கூத்தை டாக்டராண்ட சொல்லவா?”

”சரி சரி இங்க வாண்டாம் உங்க அக்கப்போர்! கிளம்புங்க! நா ப்யூலாவ விட்டு ஃபோன் பண்ணச்சொல்றேன்!”

”ப்யூலா! கெட் மி டாக்டர் சுனீல் 1”

”ஹலோ புரொஃபசர்! என்ன ஒரு ஆச்சரியம்! சொல்லுங்க என்ன கேஸ்?”

”சுனீல்! உடனே கேஸ்னு எப்படி சொல்றே? நான் சும்மா ஃபோன் பண்ணியிருக்க்க்கூடாதா?”

”யாரு? நீங்களா? சும்மா ஃபோனா? கம் ஆன் புரொஃபசர்! கிவ் மி ய ப்ரேக்! சாரி! சொல்லுங்க!”

”நீ எப்ப ஃப்ரீ? ஒரு கிட்னி டிரான்ஸ்ப்ளாண்ட் பண்ணனும்! என்னோட பேஷண்ட்!”

”லைவ் டோனரா இல்ல ..?”

”லைவ் டோனர் கிடையாது சுனீல்! கார்டியக் டெத் டோனோர்தான் பாக்கறேன்.இப்ப எங்கிட்ட ரெண்டு கேஸ் க்ளோஸ் டு எண்ட் இருக்காங்க. நான் இன்னிக்கே முனுசாமியோட பானல் ரியாக்டிவ் ஆண்டிபாடி டெஸ்ட் பண்ணி ஹெச் எல் ஏ கம்பாடிபிலிட்டியைப்பாத்துடறேன். ஆமா நீ எப்ப ஃப்ரீயா இருக்கே?”

”டையரியப்பாத்து சொல்றேன் புரொஃபசர்!”

“ஒன் மோர் திங்!”

சொல்லுங்க புரொஃபசர்?”

“ உன்னோட டிர்ஸ்டுலேர்ந்து உதவி பண்ணனும் சுனீல்! முனுசாமி வெறும ஆட்டோ ஓட்டறவர்தான்! வசதி இல்லை. அஃப் கோர்ஸ்! பாதி செலவு என்னுது!”

“ புரொஃபசர்! யூ நெவர் சீஸ் டு அமேஸ் மி!”

மென்மையாகச்சிரித்த கையோடு ப்யூலாவின் குரல்.

“புரொஃபசர்! ராஜ்பவன்லேர்ந்து ஃபோன்!”

“எஸ்!”

“ஜனாதிபதி வரும் 18ஆம் தேதி காலை ராஜ் பவனில் உங்களுக்கு பி ஸி ராய் விருது வழங்குகிறார். நிகழ்ச்சி காலை 9 மணிக்கு. நீங்கள் எட்டு மணிக்கே வந்துவிட வேண்டும். சில செக்யூரிடி விஷயங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. உங்களுடைய கெஸ்டாக இரண்டே பேர் மட்டும் வரலாம். ஃபோட்டோ எடுக்க அனுமதி இல்லை. எங்களின் அஃபிஷியல் ஃபோட்டோகிராஃபர் எடுத்த படங்கள் உங்களுக்குக்கொடுக்கப்படும். நிகழ்ச்சிக்கு முன்பு பிரெஸ்ஸில் பேச வேண்டாம். வாழ்த்துக்கள்!”

” சுனீல்! எனி கிட்னி டோனர்?”

“டாக்டர்! உங்களுக்கு இன்னிலேர்ந்து நூறு வயசு! இப்பத்தான் நானே ஃபோன் பண்ணனும்னு நெனச்சேன்! இன்னிக்கு மத்தியானம் எங்க ஹாஸ்பிடல்ல ஒரு பிரெயின் டெட் பேஷண்ட்! ஆர்கன் ஹார்வெஸ்ட் பண்ணிக்கச்சொல்லிட்டார். நீங்க அனுப்பியிருந்த முனுசாமி சாம்பிளோட ஹெச் எல் ஏ கம்பாடிபிலிட்டி பாத்துட்டேன். பர்ஃபெக்ட் மாட்ச்! நாளைக்கு காலையிலேயே பண்ணிடலாம். எல்லா ஏற்பாடும் என் ஹாஸ்பிடல்லியே பண்ணிட்டேன்.!”

“நாளைக்கா? நாளைக்கு 18ஆம் தேதியில்ல?”

“ஆமா டாக்டர்! ஓ உங்களுக்கு அவார்ட் ஃபங்க்ஷன் இல்ல? ஐ ஹேவ் டு மிஸ் தட் டாக்டர்! கங்கிராட்ஸ் அகைன்!”

“இல்ல சுனீல்! நானும் உன்னோட ஆபரேஷன்ல இருக்கணும்!”

“ஓ நோ! நா பாத்துக்கறேன் புரொஃபசர்! நீங்க அவார்டு ஃபங்க்ஷன் மிஸ் பண்ன முடியாது!”

“இல்ல சுனீல்! இது ஒருவித வாக்குறுதி! கமிட்மெண்ட்! ஓகே! நான் நாளைக்கி கார்த்தால ஏழு மணிக்கு உங்க ஹாஸ்பிடல் வந்துர்ரேன்!”

”ப்யூலா! முனுசாமிய வரச்சொல்லு! கால் ராஜ் பவன்!”

டாக்டர் சுனீலின் ஆஸ்பத்திரியில் முனுசாமியின் ஆபரேஷன் முடியும்போது மணி பத்தை நெருங்கிவிட்டது.

“க்ரேட் ஜாப் சுனீல்! பக்கத்துல இருந்து பார்க்கும்போதுதான் உன்னோட ஸ்கில் லெவல் புரிஞ்சுது! எக்ஸ்டெர்னல் இலியாக் ஆர்டெரில கனெக்ட் பண்ணின பாரு, பிரில்லியண்ட்! ப்ரெட்னிஸோலோன் சமாச்சாராத்த நான் போஸ்ட் ஆபரேடிவ் கேர்ல கவனிச்சுக்கறேன்!”

“பட் புரொஃபசர் நீங்க உங்க பிஸி ராய் அவார்ட தவற விட்டுட்டீங்களே!”

சிரித்துக்கொண்டே ஜெனெரல் ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டார்.

ஆஸ்பத்திரி வாசலில் கூட்டம். போலீஸ் தலைகள் தென்பட்டன. டீ வீ ஆசாமிகளும் காமிராவும் மைக்குமாக அலைந்தார்கள். ஒரு மாதிரியாக கூட்டத்தை விலக்கி இரண்டாவது மாடியில் லிஃப்டிலிருந்து வெளியே வந்தபோது இன்னும் கூட்டம்.
ப்யூலா வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தாள்.

“ப்யூலா! என்ன நடக்கறது இங்க? ஒய் ஆல் திஸ்……?”

“டாக்டர்! உங்க ரூம்ல ஜனாதிபதி…..!”

“வாட்?”

இவரின் நாற்காலிக்கு எதிரே அரை நரையாக இருந்த தன் நீண்ட முடியைப்பின்னுக்குத் தள்ளிவிட்டுக்கொண்டு ஜனாதிபதி அமர்ந்திருக்க, சுற்றிலும் பதட்டத்துடன் அவரின் உதவியாளர்கள் மூன்றுபேர், இரண்டு ஏ டி ஸிக்கள், ஒரு இன்ஸ்பெக்டர்.

“வாங்க டாக்டர்!”

நாகர்கோவில் தமிழில் ஜனாதிபதி வரவேற்றார்

“யுவர் எக்ஸலென்ஸி! நீங்களே இங்க வந்துட்டீங்களா? ஐயாம் சாரி! வெரி சாரி!”

“இல்ல இல்ல. நீங்க ஏன் அவார்டு வாங்க நேரில வர முடியலைன்னு ராஜ் பவன்ல சொன்னாங்க! எனக்கு இப்படிப்பட்ட டாக்டர நேரில பாக்கணூம்னு ஆசை. அதான் அவார்டு ஃபங்கஷன உங்க ரூம்மிலயே வெச்சுக்கலாம்னு வந்துட்டோம். இப்ப என் கையால இந்த அவார்ட நா உங்களுக்குத்தரலாமா?”

கொஞ்சம் உள்ளுக்குள் நடுங்கியவாறே இந்திய ஜனாதிபதியிடம் அவார்டை வாங்கிக்கொண்டார். காமராக்கள் பளிச்சிட்டன. லேசான கைதட்டல்.

“உங்களைப்பார்க்க வருபவர்களுக்கு டீ, காபி குடுத்து உபசரிக்க மாட்டீர்களா டாக்டர் வைகுண்டம்?”

சிரித்துக்கொண்டே கேட்ட ஜனாதிபதி தொடர்ந்தார்.

“ எனக்கு சர்க்கரை இல்லாமல் அரை கப் டீ!”

“ப்யூலா!”

கூப்பிட்ட டாக்டர் வைகுண்டத்தின் குரல் லேசாகக்கம்மியிருந்ததை ப்யூலா மட்டுமே புரிந்து கொண்டாள்.

No comments:

Post a Comment