Sunday, 28 June 2026

 

28 June 2026

Welcome to my Jay Raghu Blogspot!

ஒவ்வொருவருக்கும் அவர் தம் அனுபவம் ஒரு ஆல விழுதாகிப்போகிறது. அந்த விழுது நாளாக நாளாக உறுதிப்பட்டு விவேகமாகிப்பரந்துபட்டு நிழல் தரும் கொடையாகி வாழ்வைச்செம்மைப்படுத்துகிறது. ஒரு கதை எழுதும்போது இந்த விழுதுகளின் பங்கு அபரிமிதமானது. அவற்றின் தாக்கத்திலேதான் நம் கற்பனை செலுத்தப்பட்டு கதையாகி சுவாரஸ்யம் ஊட்டுகிறது என்று நான் நம்புகிறேன்.

என் ஒவ்வொரு கதையும் எங்கோ ஒரு விதத்தில் என் அனுபவத்தின் – பார்த்த, கேட்ட அல்லது வெறுமனே கேள்விப்பட்டதாகக்கூட இருக்கலாம் – தாக்கமே! எந்த கதையுமே முழுக்க முழுக்க கற்பனையாகவோ அல்லது முழுக்க முழுக்க நிஜமாகவோ இருக்க வாய்ப்பில்லை. ஒரு விதக்கலவையில்தான் கதைகள் பிறக்கின்றன. எவ்வளவு உண்மை எவ்வளவு கற்பனை என்பது எழுத்தாளனுக்கே உரிய பிரத்தியேக ரகசியம். அந்த ரகசியம் காக்கப்படுவதில்தான் கதையின் சுவாரஸ்யமும் அடங்கியிருக்கிறது.

இங்கே நீங்கள் படிக்கவிருக்கும் கதைகளும் அப்படியே!

உங்களிடையே நல்ல பேரைப்பெற்றுவிட்ட டாக்டர் வைகுண்டமும், ஆவ்ரில்லும் அவினாஷும், வசுந்தராவும், வினுதாவும் விபாவும் இங்கே ஊடாடப்போகிறார்கள். கதைகள் மட்டுமின்றி முகநூலில் எழுதியது போல எண்ணங்களையும் இங்கே பதிவு செய்யவிருக்கிறேன்.

அடுத்த சில நாட்களில் இந்த பிளாகில் வரும் பலப்பல கதைகளைப்படித்தால் கிட்டத்தட்ட என் வாழ்கையைப்படித்துவிட்டதாகவே இருக்கக்கூடும். கவனிக்க, இருக்கும் என்று சொல்லவில்லை, இருக்கக்கூடும் என்றுதான் சொல்கிறேன்.

எப்போதும் போல படித்து பின்னூட்டம் இட்டு விமரிசித்து உங்கள் கருத்துக்களைப்பதிவு செய்யுங்கள்

அடிக்கடி சந்திப்போம்!

ஜெயராமன் ரகுநாதன்

6 comments:

  1. Replies
    1. என்னத்தான் கற்பனை என்றாலும் பார்த்தது கேட்டதிலும் உள்ள பின்னணியில் தான் கற்பனையும் இருக்கும். இடங்கள், சம்பவங்கள் உண்மையாக இருக்கும். அதில் வரும் கதா பாத்திரங்கள் கற்பனையாக இருக்கலாம்.

      Delete
  2. Eagerly waiting to read your படைப்புகள்

    ReplyDelete
  3. Understood . Looking forward. .. ஸ்வாரஸ்யமான படைப்புகளை எதிர்நோக்கி…

    ReplyDelete
  4. ஓரளவு கற்பனைஇல்லாமல் அவ்வளுவு பழைய நினவுகளை கொண்டு வர முடியாது. Based on a true story மாதிரி 😀

    ReplyDelete