இன்றைய கதையரங்கத்தில் (4 செப்டம்பர், 2019)....
பிளாக் மாஜிஷியன் ஃப்ரம் இண்டியா
கனெக்டிகட், ந்யூ மில்ஃபோர்டில் ரெயில் ரோட் தெருவுக்குப்பின்புறம், அந்த சிமெட்ரி இருக்குமே அதன் தெற்குப்பகுதி கண்டாமினியத்தில் நான்கு பெஃப்ட்ரூம் நிறைந்த வில்லா டைப் வீட்டில் டெலிஃபோன் பேச்சு.
“மாகீ! இன்னிக்குமா?”
“ஆம் சுந்தராவெல்லி! அதே வலிதான் இன்னிக்கும்!”
“மாகி! ஐயாம் சுந்தர வல்லி அண்ட் நாட் வெல்லி! அண்ட் இன்னிக்கு மதியம் காலேஜுக்கு வருவியா? வி ஹேவ் ய மீட்டிங் வித் த டீன்!”
“நிச்சயம் வந்தாகணுமே! இதோ பத்து மணிக்கு அந்தக்கிராதக டாக்டரோட அப்பாயிண்ட்மெண்ட்! வில்லியம் ஃபிக்ஸ் பண்ணிக்கொடுத்துவிட்டுத்தான் ஹார்ட்ஃபோர்ட் கிளம்பினான்!”
“மாகி! ஐ பிட்டி யூ! எத்தனை வருஷம் இதோட?”
“பன்னிரெண்டு வருஷம்! வில்லியமை நான் தொடர்து ஏமாற்றி வருகிறேன்! உனக்குத்தான் தெரியுமே, மூணு மிஸ் காரியேஜ் டில் நௌ!”
“ஓகே! அதப்பத்தி இப்ப பேச வாண்டாம்! நீ டாக்டரைப்பார்த்துட்டு காலேஜுக்கு வா! யாரு டாக் காமில்லாதானே? ஐல் வெயிட் ஃபார் யூ!”
டாக்டர் காமில்லாவின் கிளினிக்.
“மார்க்கரெட்! டாக்டர் காமில்லா ஈஸ் ரெடி! நீங்கள் போகலாம்!”
“ஹை மாகி! ஹவ் ஈஸ் இட் டுடே?”
“வெரி பேட் டாக்டர்!”
“இதைப்பார் மாகி! பீரியட் வலி உலகத்தில் எல்ல பெண்களுக்கும் உண்டு! ஏன் எனக்கே உண்டு! நீ அதை மிகவும் பெரிது படுத்துகிறாய்! சரியான உணவு உண்பதில்லை! அதுவே பீரியடின்போது உன்னை வதைக்கிறது! இத்தனை வருடங்களில் நீ ஹைபோகாண்ட்ரியாக்காகி விட்டாய்!”
“இல்லை டாக்! எனக்கென்னவோ என் சிம்ப்டம்ஸை இன்னும் ஆழமாக யோசித்துப்பார்த்து சரியான படி டையக்னோஸ் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது!”
“மாகி! ஐயாம் தி டாக்டர்! யூ ஆர் நாட்!”
“பட் டாக்…?”
“மாகி! உன் சிம்ப்டம்ஸ் பாரு! நாசியா, இட்சிங், அண்ட் யூ ஆர் அனீமிக்! பெயின் ட்யூரிங் மென்ஸ்ட்ரூவல் டேஸ்! எப்போதும் நோய் சொல்லிக்கொண்டு சரியான சாப்பாடு சாப்பிடுவதில்லை. உனக்கு புரோட்டீன் மிக மிகக்கம்மி! எங்கேர்ந்து சக்தி வரும்? அதும் பீரியடின் போது பிளட் லாஸ்! ஐயார்ன் லாஸ்! கூடவே வியாதி என்னும் எண்ணம் உன் மனதுக்குள் புகுந்து பேயாட்டம் ஆட வைத்துக்கொண்டிருக்கிறாய்!”
“ஆனால் டாக்டர் என் வலி உண்மையானது! எனக்கு மூன்று மிஸ் காரியேஜ்! அண்ட் யூ நோ தட்!”
“எஸ் எஸ்! ஐ நோ! உன் மனதை நீ ஹெல்தியாக வைத்துக்கொண்டாலே பாதி வியாதி போய்விடும்! அடுத்து நல்ல உணவாக சாப்பிட வேண்டும்! சரியான பவல்ஸ் இல்லையென்று நீ புரோட்டினே சாப்பிடுவதில்லை. ஈட் ய லாட் ஆஃப் ப்ரெட் அண்ட் மீட்!”
டாக்! நான் சொல்வதை ஒரு தரம்….!”
“லுக் மாகி! நான் உன்னை ஏழு வருடங்களாகப்பார்த்து வருகிறேன்! உன் பழைய ரிப்போர்ட்டுகள் கூட என்னிடம் இருக்கின்றன. உன்னைவிட உன் உடல் பற்றி எனக்கு அதிகமாகத்தெரியும்! ஒன்று செய்யேன்! ஒரு முறை ஹாலிடேக்கு எங்காவது போயேன்! ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம்! மாறுதல் உன்னை நிச்சயம் சரிப்படுத்தும்!”
“என் பிராப்ளம் அது இல்லையே டாக்டர்?”
“சரி மாகி! ஐ கிவ் அப்! டிரை வாட் ஐ செட்! பாரேன்! உன் நல்லதுக்குதானே சொல்கிறேன்! ஓகே? போய்விட்டு வந்தவுடன் என்னை வந்து பார்!” மிட்செல்! கிவ் அவர் டியர் மாகி அப்பாயிண்ட்மெண்ட் இன் நவம்பர், காட் இட்? மிட்செல்! நெக்ஸ்ட்?”
மிடில் டவுன் அருகே இருக்கும் வெஸ்லியன் யூனிவர்சிடி கஃபேடீரியாவில் மார்க்கரெட்டும் சுந்தரவல்லியும் பேச்சு.
“மாகி! நீ டாக்டரை மாற்ற வேண்டும்! நீ சொல்வதைக்கேட்பதே இலையென்கிறாயே?”
”இவரே ஆறாவது டாக்டர் சுந்தரா!”
“மாசாமாசம் வலிக்கிறது என்கிறேன்! இந்தக்கிராதகி ஹாலிடேவுக்குப்போய் வா என்கிறாள்! ப்ரூட்!”
“கம் டு திங்க் ஆஃப் இட்! என்னோட தீஸிஸுக்கு நான் இந்தியா போகப்போறேன்! ஏன்ஷியண்ட் இண்டியன் ஹிஸ்டரி அண்ட் ஆர்கியாலஜி! நீயும் ஒரு ஃபோர் வீக்ஸ் வெகேஷன் எடுத்து என்னோட இந்தியாவுக்கு வாயேன்! சென்னை! மெட்ராஸ்! ஹாட் கர்ரி! இட்லி டோசா!”
“டோண்ட் பி சில்லி! சாப்பாடே எனக்கு எமன்!”
“இல்லை மாகி! யோசித்துப்பாரேன்! இந்த மாறுதல் உனக்கு நல்லது செய்யலாம்! என் அக்கா சென்னையில் பெரிய வீட்டில் இருக்கிறாள்! போய் வரலாம் வா! நானே வில்லியம்ஸிடம் பேசுகிறேன்!”
“த பாரும்மா மாகி! சுந்தரா சிதம்பரத்துக்கு போட்டும்! நா இருக்கேன்! வேளா வேளைக்கு பத்தியமா சமைச்சுப்போடறேன்! சாப்பிடு! ரெஸ்ட் எடு! ஒரே வாரம்!சுந்தரா வந்தவுடனே நாம ஊர் சுத்தலாம்!”
‘ஓ தட்ஸ் வெரி ஸ்வீட் ஆஃப் யூ!”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல! இவர் எட்டு மணிக்குப்போனா அப்பூரம் ராத்திரி வந்தாத்தான் உண்டு! நாம சேர்ந்து சென்னையை சுத்தலாம்! அப்புறம் இந்த சண்டே என் ஹஸ்பண்ட் வீட்லதான் இருப்பார். நீ அவரோடயும் உட்கார்ந்து பேசேன்!”
ஞாயிற்றுக்கிழமை அக்காவின் புருஷனும் மாகியும் ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினார்கள்.
”வேதம்! இன்னிலேர்ந்து மார்க்கரெட்டுக்கு தினமும் சப்பாத்தி சப்ஜி பண்ணிப்போடு! காரம் கொஞ்சம் கம்மியா இருக்கட்டும்!”
“சப்பாத்தியா? அவோ அரிசிச்சாதமே குழைஞ்சு குழைஞ்சுன்னா கேக்கறா? ஜீரணம் ஆகாதுன்னு ஒரே பயமா இருக்காளே?”
“தெல்லாம் நா பேசிட்டேன்! நீ பண்ணிப்போடு! அவ சாப்பிடுவா!”
“ண்ட் மார்க்கரெட்! டேக் க்ளூட்டன் ஃபார் ய வீக்! அப்புறம் டெஸ்ட் எடுக்கலாம்!”
“என்ன ப்யூலா! பெரியவர் வாந்தாச்சா?”
“காலைய்ல ஏழு மணிக்கே வண்ட்டாரு! கூட ஒரு வெள்ளைக்கார பொம்பளை!”
“என்னது வெள்ளைக்கார பொம்பளையா? அப்ப வேதம் மாமியை டைவர்ஸா?”
“அடச்சீ! வாயைக்கழுவு! பேஷண்ட்டுப்பா!”
“ப்யூலா!”
“இதோ புரொஃபசர்!”
“அங்க என்ன வம்பு பேச்சா? சரி, நீ போய் அவினாஷ வரச்சொல்லு!”
“அவினாஷ்! யூ ஆர் லேட் டுடே!”
“இல்லை புரொஃபசர்! யூ வேர் ஏர்லி!”
“ய டெர்ரிபிள் ஜோக்! சரி இவங்கள லாபுக்கு கூட்டிண்டு போ! ஐ வாண்ட் ப்ளட், சலைவா, ஸ்வாப் இன்ஸைட் ச்சீக்ஸ் அண்ட் டெஸ்ட் ஃபார் ஹெச் எல் ஏ டி க்யூ 2 அண்ட் டி க்யூ 8 ஜீன்ஸ் பாரு! ப்ராண்டோ!”
”யெஸ் புரொஃபசர்!”
”அண்ட் எண்டோஸ்கோபி டூ!”
“வில் டூ புரொஃபசர்!”
“ஆஸ்க் நிர்மலா டு ஜாயின் யூ! வந்தாச்சா?”
“இன் ய ஃப்யூ மினிட்ஸ்!”
“ஆல் ஆஃப் யூ ஆர் ய லேஸி லாட்!”
மார்க்கரெட் பிரமித்துப்பார்த்துக்கொண்டிருக்க அவினாஷ் அவளை அழைத்துக்கொண்டு போனான்.
”இவர் இத்தனை பயங்கரமான ஆசாமியா? வீட்டில் பசுவாக இருக்கிறாரே?”
ஆறு வாரங்கள் உருண்டோடின.
பிராட்லி இண்டர்னேஷனல் ஏர்போர்ட்டில் இறங்கினபோதே வில்லியம்ஸ் வந்துவிட்டார். காரில் ஏறும்போது சுந்தரா மாகியிடம் படித்துப்படித்துச் சொன்னாள்.
“மாகி! என் பிரதர் இன் லா சொன்னது எதையும் மறக்காதே! அவர் கொடுத்த நம்பர் இருக்கா? அவர் சன்! அநிருத் ஈஸ் தி நேம்! சிக்காகோ நார்த் வெஸ்டெர்ன் மெமோரியல் ஹாஸ்பிடல்?”
“ஷுர் சுந்தரா! ஐயாம் டெஸ்பெரேட்! நிச்சயம் ஃபோன் செய்யறேன்!”
இன்னும் நாலு வாரங்கள் உருளாமல் ஓடின.
”மிட்செல்! நான் மாகி, மார்க்கரெட் பேசறேன்!டக்டர் காமில்லா ப்ளீஸ்!”
“ஓ மாகி! உங்கள் அப்பாயிண்ட்ம்ண்ட் நவம்பரில்தானே?”
“எனக்குடாக்டர் காமில்லாவுடன் பத்து நிமிஷம் பேச வேண்டும், அவ்வளவுதான்!”
“கிம்மீ ய செகண்ட்!”
“ஓ ஹை மாகி! ஹவ் ஆழ் யூ? எப்படி இருந்தது உன் இண்டிய டிரிப்? ஃபீலிங் த பெயின் நௌ? ”
“நோ காமில்லா! எனக்கு சரியான வழி கிடைத்துவிட்டது!”
“வாட் டு யூ மீன்?”
“எனக்கு இருப்பது சீலியாக் வியாதி! ஆனால் நீங்கள் இது நாள் வரை சொல்லி வந்தது எனக்கு ப்ரோட்டீன் போதவில்லை! மை ஃபுட்! ஐயம் க்ளூட்டன் அலர்ஜிக்! அண்ட் இன்னும் என்ன சொன்னீர்கள்? ஹைப்போகாண்ட்ரியாக்! யாரு நானா? மை அதர் ஃபுட்!
”மாகி! வாட்ச் யுவர் வோர்ட்ஸ்! இதெல்லாம் எந்த புத்திசாலி கண்டு பிடித்துச்சொன்னான் உனக்கு?”
”ஓ நோ டாக்! பிளட் சலைவா ஸ்வாப் எண்டோஸ்கோபி எடுத்ததுல தெளிவாகத் தெரிந்து விட்டது!”
“வேஸ்ட் ஆஃப் டைம்!”
“எனக்கு ஹெச் எல் ஏ டி க்யூ 2 அண்ட் டி க்யூ 8 ஜீன்ஸ் இல்லை! யூ மஸ்ட் பி சர்ப்ரைஸ்ட்!
“இதெல்லாம் உனக்கு யார் சொன்னது? சம் இண்டியன் பிளாக் மாஜிஷியன்!”
”இல்லை காமில்லா! என் ஸ்னேகிதியின் பிரதர் இன் லா!”
” சோ ஹீ ஈஸ் தி இண்டியன் க்வாக்?”
”நோ! அவர்தான் உண்மையான வைத்தியர்!”
”அண்ட் ஹூ ஈஸ் தட் கிரேட் டாக்டர்?”
“அவர் பெயரை உன்னால் உச்சரிக்கக்கூட முடியாது! ஹிஸ் நேம் ஈஸ் வைகுண்டம்! கீப் டிரையிங் தி ஹோல் டே!”
டாக்டர் காமில்லாவின் முகம் ரத்தச்சிவப்பாய் மாறுவதை மிட்செல் பயத்துடன் கவனித்தாள்.
No comments:
Post a Comment