புத்தம் புதிய வசுந்தரா கதை
“…அழகான உளவுத்துறை…”
போன வாரம்
”அவர்களை யாரும் பார்க்கவில்லை. யாரும்
எதுவும் கேட்கவும் இல்லை!”
கூடாது!
அதுதான் அவர்களுக்கு
விதிக்கப்பட்ட கட்டளை. ரகசியமாக, அபார ரகசியமாகச் செய்ய வேண்டிய அசைன்மெண்ட். கறுப்பு
உடை அணிந்து மையிருட்டுத்தெருவில் அடையாளம் சொல்லப்பட்ட அந்த வீட்டுக்குள் நுழைந்தார்கள்….
இல்லை இல்லை, நழுவினார்கள்.
எல்லா நகரங்களிலும்
எங்காவது ஒரு துளி வெளிச்சம் இருக்கும், இல்லை, வெளிச்சச்சிதறலாவது இருக்கும். ஆனால்
சண்டிகருக்கு வெளியே இருக்கும் இந்த சிறிய ஆனால் பணக்கார லொகாலிட்டியில் ஒரு துகள்
வெளிச்சம் கூட இல்லை. எல்லா முனிசிபாலிட்டி விளக்குகளும் அணைக்கப்பட்டுவிட்ட நள்ளிரவு
ஒரு மணி. அடுத்து அறுபது நிமிடம் காத்திருந்து அவர்கள் நகர்ந்திருக்கின்றார்கள்.
கும்மிருட்டு. எதிரே பரந்து கிடந்த கோதுமை வயற்காட்டின் நுனியில் ஒரு நரி இவர்களை வேடிக்கை பார்த்தாலும்
சப்தமெழுப்பவில்லை.
நழுவிக்கொண்டிருந்த
அந்த ஆசாமிகள் சட்டென தெருவோரப்புதருக்குள் இருட்டில் இருட்டாய் மறைந்த காரணம், எதிரே
சலனம். எங்கோ போய் பாரில் மொடாக்குடி குடித்துவிட்டு வீடு திரும்பத்தாள்ளாடியபடி வந்து
கொண்டிருந்த குடிமகன்களுக்கு மரியாதையுடன் புதரின் மறைவில் அமைதி காத்து குடிமகன்கள்
அகன்றவுடன் மீண்டும் தெருவில் நழுவி அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டை அடைந்தார்கள்.
டெல்லியின் அஜ்மல்கான்
ரோடில் ஒரு சாதாரண லாட்ஜில் பல மணி நேரங்கள் வரைபடத்தில் பார்த்துப்பார்த்து ஆராய்ந்த
தெருவும் வீடும் அங்கிருக்கும் ஒவ்வொரு செடிகொடிகூட அவர்களுக்கு அத்துப்படியாகிவிட்ட
அந்த வீட்டை அடைவதில் துல்லியமாகச் செயல்பட்டார்கள்.
அவர்கள் மொத்தம் நாலு
பேர், இரண்டு ரிடயர்ட் ஆர்மி மெடிக்கல் ஆசாமிகளையும் சேர்த்து. முக்கிய இருவர், டெல்லியில்
ஸ்பெஷல் ரெகான்னசன்ஸ் ரெஜிமெண்ட்டிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன மாஜி கமாண்டோக்கள். ஒரு இடத்துக்குள்
சர்வ ரகசியமாக நுழைவதில் விற்பன்னர்கள் என்பதாலேயே அவர்களை
ஏற்பாடு செய்திருந்தார்கள்!
இந்த அசைன்மெண்ட்
படு ரகசியமானது. வீட்டினுள் நுழைந்து அங்கிருப்பவரை சேதம் ஏதுமில்லாமல் வளைத்துப்பிடிப்பது,
அதே சமயம் ஒரு புழு பூச்சிக்குக்கூட இப்படிப்பட்ட சம்பவம் நடப்பது தெரியக்கூடாது. எனவே
அவர்கள் நாலு பேரும் வாசல் தவிர்த்து பக்கவாட்டில், தோட்டத்திலிருந்து, மாடியிலிருந்து
என்று ஒரே சமயத்தில் வீட்டைச்சூழ்ந்தார்கள். சுற்றுப்பட்ட வீட்டுக்காரர்களுக்கு ஒரு
சலனம் கூடத்தெரியவில்லை. வைர நுனி கொண்ட கட்டிங் மெஷின் மிகச்சின்ன விர்ர்ர்ருடன் செயல்பட்டு
அரை அடி நீள அகலக்கண்ணாடியை சில்லாகப்பெயர்க்க, அந்த கமாண்டோ வீரர் கையை உள்ளே விட்டு
தாழ்ப்பாளை நீக்கி உள் நுழைந்து பின்புற வாசலைத்திறக்க, மற்ற மூன்று பேரும் வீட்டுக்குள்
புகுந்தாயிற்று.
நைட் விஷன் எனப்படும்
கண்ணாடி அணிந்து முதலில் கிரவுண்ட் ஃப்ளோரை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தார்கள். எந்த
அறையிலும் யாரும் தூங்கிக்கொண்டிருக்கவில்லை. எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இருக்கவில்லை.
மறைவாக எந்த அலாரமும் இல்லை. அலர்ட் செய்யும் விஷயங்களும் இல்லாமல் ஒரு சாதாரண குடும்பத்தின்
வீடு போல இருந்தது. குழுத்தலைவன் கட்டை விரல் உயர்த்தி தம்ஸ்-அப் காண்பிக்க, இரண்டு
மெடிக்கல் ஆசாமிகளும் கீழேயே தங்கிவிட, இரண்டு பேரும் மாடிப்படி ஏறினர்.
இருவரும் ஆவலுடன்
மாடியைப்பார்த்துக்கொண்டிருக்க, யாரோ யாரையோ அடக்கின சப்தமும் சின்ன முனகலும் பெருமூச்சும்
கேட்டு அமைதியாகிற்று. சில நிமிடங்களில் கீழிறங்கி வந்த ஒருவன் தன் மொபைல் ஃபோனில்
ரிப்போர்ட் செய்த வார்த்தைகள்:
“டார்கெட் செக்யூர்ட். ஒத்துழைத்தார்.
இன்னும் சரியாக 45 நிமிடங்களில் ஏர்போர்ட்!”
மெயின் ஏர்போர்ட்டை
தாண்டி ரன் வே நீண்டிருக்க, தூரத்தில் தனியாக ஒரு பிரைவேட் விமானம் ஃப்ளைட் பிளான் எல்லம்
முடித்து எஞ்சின் உறுமலுடன் தயாராய் இருக்க, கவரப்பட்ட ஆசாமி இப்போது அந்த கறுப்பு
வேனிலிருந்து தன்னிச்சையாக இறங்கி தன்னைக்கடத்திய நான்கு பேருக்கு ”தாங்க்ஸ்” சொல்லிவிட்டு
ஓடிப்போய் ஏறிக்கொள்ள கதவு மூடி, விமானத்தின் டர்போ ஃபான் எஞ்சின்களும் சுழன்று ஒரு
மைல் நீள ரன்வேயில் முழு வீச்சுடன் 125 நாட்டில் ஓடி, நிமிடத்துக்கு எண்ணூறு அடி உயர்ந்து அண்டர் காரியேஜ் தூக்கி, ஃப்ளாப் அமைத்து ஆஃப்டர் பேர்ன்
எஞ்சின்களை விலக்கி பதினெட்டாயிரம் அடி போய் ஸ்டெடி ஆகி சண்டிகரைப்பின்னுக்குத்தள்ளி
காணாமல் போனது.
போன மாதம்
”வசுந்தரா! உடனே வா!
மிஷ்ராஜிக்கு ………..இடத்தில் தேனி கொட்டியிருக்கிறது!”
மெஹர் ரகசியக்குரலில்
சிரிப்பை அடக்கியபடி இண்டர்காமில் சொன்னாள்.
“கமிங் ரைட் அவே!”
ஏழாம் மாடி சேர்மன்
அறையின் முன் பக்க பிஏக்கள் காபினில் மெஹர் வசுந்தராவைப்பார்த்ததும் “பி கேர்ஃபுல்!
பாஸ் ரொம்ப கடுப்பில் இருக்கிறார்” என்று கிசுகிசுத்தாள்.
வசுந்தரா புன்னகைத்தபடி
தன் மார்பில் கை வைத்து “மெ ஹுன் நா” என்றபடி உள்ளே நுழைந்தாள்.
”வசுந்தரா! இப்பத்தான்
தூங்கி எழுந்தியோ?”
குரலில் நக்கலடித்தார்
மிஷ்ராஜி.
“என்ன, பஞ்சாப் கெமிக்கல்ஸின்
புது சோப் லாஞ்ச் தானே?”
“ஹ! ஸோ, யூ நோ! நாம
என்ன பண்ணப்போறோம்? வேடிக்கை பார்க்கப்போறோமா?”
“ஸ்டெப் எடுக்கத்தொடங்கியாச்சு
மிஷ்ராஜி!”
டேபிளிலிருந்து ஒரு
பேப்பரை எடுத்துப்போட்டார்.
“லுக் ஹியர்! நம்ம
டூயட் சோப்போட மார்க்கெட் ஷேர் 2.5% டவுன், ஆல்ரெடி! இன் ஜஸ்ட் ஒன் மந்த்!”
“மிஷ்ராஜி……!”
”அண்ட் அடுத்து மாசம் புதுசா
ஷாம்பூ கொண்டு வரப்போறாங்களாம்! நம்ம ஷைன் ஷாம்பூ அடி வாங்கறதையும் பாக்கப்போறோமா?”
“கூல் மிஷ்ராஜி! ஷைன்
ஷாம்புவுக்கு ஒண்ணூம் ஆகாது! அது நம்மோட வெரி ஹை மார்ஜின் பிராடக்ட். அதைத் தொட விடமாட்டேன்!”
”அப்ப டூயட் சோப்
வாங்கின அடிக்கு என்ன பதில் வெச்சிருக்க வசு?”
”மிஷ்ராஜி! ஐயாம்
அட் இட்! டிரஸ்ட் மி! எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க!”
“என்னதான் பண்ணப்போறேன்னு
எனக்கு சொல்லிட்டு செய்! லண்டன்லேர்ந்து அந்த குள்ள நரி, சர் வில்லியம்ஸ் கூப்பிடுவார்!”
“மிஷ்ராஜி! வி ஆர்
ப்ரிபேரிங் ஃபார் தி வார்ன்னு சொல்லுங்க. வசுந்தரா ஈஸ் லீடிங்குன்னு சொல்லுங்க!”
“உம்பேரச்சொன்னா லண்டன்
கிழம் கொஞ்சம் சாந்தமாகும், பட் நீ என்ன பண்ணப்போறே?”
“ப்ரீத்தியோட வெற்றிக்கு
முக்கிய காரணம் அந்த ரிஸர்ச் ஸ்டால்வார்ட் கௌதம் சக்கரவர்த்தி. அவர்தான் புதுசு புதுசா
என்னென்னவோ பிளான் பண்ணி இன்னொவேட்டிவா முயற்சி எடுக்கறார்.!”
“வசு! நீ சொன்னியேன்னு
நா போன வருஷமே டெல்லியில கான்ஃபிடென்ஷியலா அவர்ட்ட பேசிப்பார்த்துட்டேன். அவர் இன்னும்
லாயல்ட்டி, அது இதுன்னு ஸ்திரமா பஞ்சாப் கெமிக்கல்சை விட்டு வெளியே வர மாட்டேங்கறாரே?”
“ஐ நோ மிஷ்ராஜி! அவர
வெளியே எடுத்தா தான் ப்ரீத்தியின் புதுமைகளுக்கு தடை போட முடியும்.!”
“அந்த வழியத்தான்
அவரே மூடிட்டாரே! ப்ரீத்தி குடுக்கற சம்பளத்துக்கே இவர் லாயலா இருக்காருன்னா..மை ஃபுட்!
மை லெஃப்ட் பிளடி ஃபுட்!”
“மிஷ்ராஜி! லாயல்
மட்டுமில்ல, பயமும் கூட!”
“வாட்? பயமா? எதுக்கு
பயம், யாரு கிட்ட பயம்?”
“வேற யாரு? ப்ரீத்தி
தான்! அவ ஒரு டெர்ரர் சமஸ்தானத்த நடத்திட்டு இருக்கா பஞ்சாப் கெமிக்கல்ஸுல! கொஞ்சம்
அவுட் ஆஃப் டேர்னா யாராவது நடந்துகிட்டா, மிரட்டல் விடறாளாம். ஒருத்தர் ரெண்டு பேருக்கு
சின்ன சின்ன ஆக்ஸிடெண்ட்டெல்லாம் ஆகறதாம்!”
“ஓ மை காட்! அடிதடியா?”
“அவ எதுக்கும் அஞ்சறவ
இல்லியே! அங்க அவ ஃபாமிலிக்கு பொலிட்டிக்கல் பவர் வேற உண்டு!”
”இந்தியாவோட கார்ப்பரேட்
சூழலே மாறித்தான் போச்சு! நாமளும் இப்படியெல்லாம் எறங்கினாத்தான் முடியும் போலருக்கே!”
“மிஷ்ராஜி! காம்பெடிஷனை
எதிர்க்க நம்ம பிராடக்டை இன்னும் பெட்டரா செய்யணுமே தவிர ஆசாமிகளை அகற்றுவது சரிதானா?”
“வசு! நாமளும் ஒரு
வருஷமா டிரை பண்ணிட்டு இருக்கோம்! இந்த ஒரு ரிசர்ச் ஆசாமியோட திறமையால மட்டுமே ப்ரீத்தி
புதுசு புதுசா என்னென்னவோ பெர்ஃப்யூமெல்லாம் கொண்டு வந்து கன்ஸ்யூமர்களை இழுத்துட்டு
போய்டறா! ”
“ட்ரூ மிஷ்ராஜி! அவங்களோட
“கர்னால் ஷாம்பூவ நானே யூஸ் பண்ணிப்பார்த்தேன்! மை காட்! என்ன வாசனை, என்ன வாசனை! கிவ்
தி டெவில் இட்ஸ் ட்யூ!”
“உன்னோட பிளான் என்னன்னு
ஒரு அவுட்லைனாவது சொல்லிட்டு போ வசுந்தரா?”
”சொல்றேன் மிஷ்ராஜி!
ரிசர்ச் செண்ட்டர்ல பேசியிருக்கேன். அவங்க ரெண்டு மூணு வேரியேஷன் டிரை பண்றாங்க. லிண்டாஸ்
கிட்ட புதுமையா ஒரு காம்பெயின் ரெடி பண்ணச்சொல்லியிருக்கேன். நாம பிராடக்ட், அட்வர்ட்டைஸ்மெண்ட்,
புரோமோஷன்னு எல்லா டைரக்ஷன்லயும் முயற்சி எடுத்தாகணூம் சர்!”
“ஐ அக்ரி. டு சம்திங்
வசு/! டு சம் மிராக்கிள்! கெட் மி மை மார்க்கெட் ஷேர் பேக்!”
“மெ ஹூன் நா! ச்சிந்தா
மத் கரியே பாஸ்!”
இன்று
வசுந்தரா தன் அறையில்
உட்கார்ந்து அவளது ஃபஸ்ஸார்ட் கண்ணாடி வழியே வெளியே அடித்துப்பெய்து கொண்டிருக்கும்
மழையை ரசித்துக்கொண்டிருக்க, கதவு வெடித்துத்திறந்து சேர்மன் மிஷ்ரா உள்ளே நுழைந்தார்.
”வசுந்தரா! வாட் ஈஸ்
ஹேப்பெனிங்? நா கேள்விப்படறது நெஜமா?”
“என்ன மிஷ்ராஜி! என்ன
கேள்விப்பட்டீங்க?”
“அந்த கௌதம் சக்கரவர்த்தி
வெளியே போய்ட்டாராமே?”
“எங்க போய்ட்டார்?
ப்ரீத்தி எப்படி சும்மா இருந்தா? அவர் எங்க ஜாயின் பண்ணினாலும் விடாம துரத்தி அடிப்பாளே?”
“அவர் ரகசியமா வெளி
நாட்டுக்கு போய்ட்டாராம்!”
“என்னது ரகசியமா வெளி
நாட்டுக்கா? அது எப்படி சாத்தியம் மிஷ்ராஜி?”
“வசு! என்னோட பிரதர்
இன் லா பஞ்சாப் கவர்ன்மெண்ட்டுல சீனியர் ஐ ஏ எஸ் அதிகாரி. அவனோட இன்ஃபர்மேஷன், கௌதம்
சக்கரவர்த்தி வெளி நாட்டுல யாரோடவோ சேர்ந்து பிளான் பண்ணி தன்னை கிட்னாப் பண்றா மாதிரி
ஒரு டிராமாவை ஸ்டேஜ் பண்ணி வெளியேறிட்……….!”
“வசு! வசு! டோன்’ட்
டெல் மி! நீயா? நீயா ஏற்பாடு பண்ணினே? டிட் யூ ஸ்டேஜ் இட்?”
தன் பிளாட்டினம் செயினை
வாயால் நிரடியபடி வசுந்தரா கீழ்ப்பார்வை பார்த்துப்புன்னகைத்தாள்.
“இப்ப நமக்கும் கௌதம்
இல்லைனு ஆயிடுச்சே!”
வசுந்தரா தன் மொபைல்
ஃபோனை நிரடி அதை மிஷ்ராவுக்கு காட்டினாள்.
யூனிகார்ன் அண்ட்
டோவர் கொலம்பியாவுலேர்ந்து வந்த ஈமெயில்.
“ஹல்லோ வசுந்தரா,
இன்னும் ஒரு வாரத்தில் நான் வேலையைத்தொடங்கிவிடுவேன். தாங்க்ஸ் ஃபார் ஆல் யுவர் ஹெல்ப்.
கௌதம்!”
“எப்படி? லாயல் அது
இதுன்னு பேசினவர நீ எப்படி ஒத்துக்கொள்ள வெச்சே?”
“நா அவரோட பேசவே இல்லியே?”
“அப்ப எப்படி அவர்
பஞ்சாப் கெமிக்கல்சை விட தீர்மானிச்சார்?”
“அவருக்கு அந்தக்கம்பெனி
மேல, ப்ரீத்தி மேல நம்பிக்கை போய்டுத்தோ என்னமோ?”
“அதெப்படி திடீர்னு
நம்பிக்கை போகும்?”
“உங்களுக்கு நினைவு
இருக்கா மிஷ்ராஜி? போன வருஷம் அவங்களோட வைஸ் பிரெசிடெண்ட் அத்துல் சின்ஹாவை வெளியே
அனுப்பினாங்களே?”
”யெஸ் எல்லாத்தையும்
பிடுங்கிண்டு வெறுங்கையோட துரத்தினாங்க! பி எஃப் முதக்கொண்டு பிடுங்கிட்டாங்களாம்!
டிஸ்க்ரேஸ் பண்ணி அனுப்பினாங்க!”
”அது சரி அதுக்கும்
கௌதம் விட்டுட்டு போறதுக்கும் என்ன கனெக்ஷன்?”
“தன்னோட எதிர்காலத்துக்கும்
அது மாதிரி ஒரு த்ரெட் வரலாம்னு கௌதமுக்கு டவுட் வந்திருக்கலாம்!”
“என்ன காரணத்துக்காக
அப்படி ஒரு டவுட் வரும்?”
“ப்ரீதி கிட்டேர்ந்து
எம் டிக்கு போன ஈமெயில் அது விஷயமா இருந்திருக்கலாம்!”
“என்னது என்ன பேசறே
வசு? அந்த ரெண்டு பேரோட ஈமெயில்.. அது நிஜமாவான்னு கூட தெரியாத போது…..ஹவ்?”
“இப்பல்லாம் எத்திக்கல்
ஹேக்கிங்குன்னு ஒண்ணு இருக்கு. சம்டைம்ஸ் அன் எத்திக்கலா கூட நடக்குமாம்! அதுவும் நம்ம
ஐடி விங் சுஹாஸ் இருக்கும்போது நடக்காதா என்ன?”
“ஓ மை காட்! நீ நம்ம
சுஹாஸ வெச்சு ப்ரீதி தன்னோட எம் டிக்கு அனுப்பறா மாதிரி ஃபேக் ஈமெயில் கிரியேட் பண்ணி, அது கௌதம் கண்ணுக்கு
படறா மாதிரி அவரோட ஸிஸ்டத்துலயும் புகுந்து….”
வசுந்தரா மோகனமாக
சிரித்தாள்
“மை காட்!நீ என்ன
யூ அண்ட் டி யில சீஃப் ஆபரேடிங் ஆஃபீசரா இல்ல ஏதானும் ஸ்பை ஏஜன்ஸி நடத்தறியா? அண்ட்
கிட்னாப்பிங்…..?ஹவ் டிட் யூ மானேஜ் திஸ்?”
அப்போது வசுந்தராவின்
டேபிள் மேல் பாலிகார்பொனேட் மல்டி காலர் ஃபோன் அடிக்க, வசுந்தரா அதன் ஸ்பீக்கர் பட்டனை
அழுத்தினாள்.
“வசுந்தரா! ஆர் யூ
தேர்?”
“யெஸ் யெஸ்! டெல்
மி!”
“ஏதாவது ஃபால் அவுட்
உண்டா?”
“ம்ஹும் ஒண்ணுமில்லை!
ஆல் குட்!”
“கமாண்டோ டீம் ஈஸ்
டிஸ்மாண்ட்டில்ட்,. பேக் இன் தேர் ஹோம்ஸ்!”
“தாங்க் யூ!”
“அடுத்து முறை டெல்லிக்கு
வரும்போது செவன் கோர்ஸ் மீல் இன் ஆவர்த்தனா!”
”மௌர்யாவா? தட் வில்
காஸ்ட் ய பாம்?”
“ஷ்யூர்! பில் நீங்கதானே
குடுக்கப்போறீங்க!”
“அக்ரீட் அண்ட்….தாங்க்
யூ விஸ்மயா!”
அந்தப்பக்கம் ஃபோன்
துண்டிக்கப்பட்டது.
மிஷ்ராஜி வாயைப்பிளந்தபடி
கேட்டார்.
“அண்ட் ஹூ ஈஸ் திஸ்
விஸ்மயா?”
“காப்டன் அண்ட் ஹானரப்ளி
டிஸ்சார்ஜ்ட் ஸ்க்வாட்ரன் லீடர், இண்டியன் ஏர் ஃபோர்ஸ் அண்ட்….?”
“அண்ட்..?”
“மை பெஸ்ட் ஃப்ரெண்ட்!”
யூனிகார்ன் அண்ட்
டோவரின் சேர்மன் மிஷ்ராவுக்கு தன் நாற்காலி பற்றிய பயம் அன்று அதிகமாகியது.
முடிந்தது
ONCE AGAIN VASUNDRA ROCKS. MY HEARTIEST CONGRATULATIONS SIR 🙏🏿♾️🙏🏿♾️🙏🏿♾️🙏🏿♾️🙏🏿. GOD BLESS YOU AND YOUR FAMILY FOREVER 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿♾️🙏🏿🙏🏿,
ReplyDeleteB
Just finished reading and it was super
Deleteஅட்டகாசம் அஸ் யூஷுவல்
Deleteஅழகான எதிர்பாரா முடிவு எப்போதும் போல்! You are rocking!
ReplyDeleteஅழகான ராக்ஷஸி. திருமலை ஸ்டோர்ஸ் கேசரில ஆரம்பித்தது மௌர்யாவில் செவன் கோர்ஸ் மீல்ஸ் வர வந்திருக்கு. Operation Goutham.
ReplyDeletecc to Mishra
நன்றி சார்
DeleteJR பேனா ஐஸ் ஸ்கேட்டிங் இலியா மாலினின் மாதிரி சுழண்டு விளையாடுது.
ReplyDeleteஅய்! இலியா மாலினி!
Deleteஅபாரமான ட்விஸ்ட் 👏👏👏👏
ReplyDelete!!
DeleteWorth the wait. But quite a few typos. Correct them if you can.
ReplyDeleteமொஸாத் ரேஞ்சுக்கு கற்பனை போச்சு கடைசில நம்ப ப்ரீத்தி விஷயம். பசுமாட்டை தென்னை மரத்தில் கட்டின கதை மாதிரி
ReplyDeleteகார்த்திக் சென்னை
ReplyDeleteமொஸாத் ரேஞ்சுக்கு கற்பனை போச்சு கடைசில நம்ப ப்ரீத்தி விஷயம். பசுமாட்டை தென்னை மரத்தில் கட்டின கதை மாதிரி. செம
Deleteஅமெரிக்கா இரான் சண்டைய வசுந்தராதான் நிறுத்தினாள்ன்னு எழுதிப்பிடுவோமா?!!
DeleteIt's like a short form of a thriller movie.
ReplyDeleteஏதோ டெர்ரரிஸ்ட் கதை போல ஆரம்பித்து விட்டு, அதை ஒரு மார்க்கெட்டிங் சாகசம் என்று கொண்டு போய்.....படுசுவாரசியமான கதை. மிகவும் நன்றாக இருந்தது.
ReplyDeleteதாங்க் யூ ராம் ஸ்ரீதர்
Deleteபாசு(ஸ்) மிரளும் வ(வா)சு !
ReplyDeleteWow
Deleteஒரு நல்ல filter cofee குடிச்சுண்டே கதை கேட்ட என் மாமா வசுவை நம்ம கம்பெனிக்கு எப்படி கடத்தலாம்கிறார்... ??? நான் ங்கே ன்னு முழிச்சேன்....🤨😜
ReplyDeleteமாமா விவரமான மாமாதான்!!
DeleteNo, my darling Vasundara can't do unethical things.
ReplyDeleteVery nice sir..thanks for adding me to the Whatsapp group.. Waiting to read more interesting stories from you. thanks
ReplyDelete“And my best friend” semma 👌🌹
ReplyDeleteVery chilling. Detailings are perfect. The lesson untold is clear at the end.
ReplyDelete