டாக்டர் வைகுண்டம்
ஒரு மகள் தன்னை உடையேன்….….
“யாரு இந்த சந்தியா?”
“ரெண்டு நாளைக்கு மிந்தி அட்மிட் ஆனாங்க புரொஃபசர்!
இன் ஃபாக்ட், நம்ம டாக்டர் சீனுவாசன் தான் அனுப்பியிருக்காரு. கார்டியன்னு கூட
அவரோட பேருதான் இந்தப்பொண்ணு குடுத்திருக்கா!”
“ஓ சீனுவா? அப்ப ஆவ்ரில்லுக்கும் தெரிஞ்சிருக்கும்!
ரிபோர்ட்ஸ் ஆர் நாட் குட், நிர்மலா?”
“யெஸ் புரொஃபசர்! டர்போ ஓவேரியன் ஆப்ஸெஸ்! “
“சிவியர் பெல்விக் இன்ஃப்ளமேஷன்! இந்த இருவத்தேழு
வயசுல!”
ப்யூலா ரிப்போர்ட்டை வாங்கியபடி “என்ன அழகா
இருக்காங்க அந்த சந்தியா! சினிமாக்காரங்க பார்த்தா அளிக்கினு போய்டுவாங்க!”என்றாள்
“கரெக்ட்! ஷி ஈஸ் ய ஸ்டன்னர்! லுக்ஸ் அண்ட் பாடி!”
“ஷட் அப் யூ லேடீஸ்! இது ஹாஸ்பிடல்! யூ ரிமம்பர்?
கெட் பேக் டு யுவர் ட்யூட்டி! அண்ட் என்ன ட்ரீட்மெண்ட் பிளான் பண்ணியிருக்கே?”
”ஆண்டி பையாடிக்ஸ்! கண்டினுவஸ் ஐ வி!”
“காம்பினேஷன்?”
“ஆம்ப்பிஸில்லின், சல்பாக்டம்!”
”டாக்ஸி ஸைக்ளீனா இல்ல கிளிண்டா மைஸினா?”
“டாக்ஸி தான் புரொஃபசர் அண்ட் ஜெண்ட்டாமைஸின் டூ!”
”குட்! ஒயிட் பிளட் ஸெல்லும் ஸி ரியாக்டிவ்
ப்ரோடீனும் விடாம பாரு! கூடவே ட்ரான்ஸ் வஜைனல் அல்ட்ரா சவுண்ட் பாக்கணூம்!”
”ஷ்யூர் புரொஃபசர்! அண்ட் சீனுவாசன் ரெகமண்டேஷங்கறதால,
ஆவ்ரில்லையே கவனிக்கச்சொல்லு!”
வார்டில் ஆவ்ரில் விட்டத்தைப்பார்த்தபடி இருந்தாள்.
“என்ன ஆவ்ரிலம்மா! எந்த கோட்டைய பிடிக்கப்போறீங்க!
இந்த டீயக்குட்ச்சுட்டு பிடிங்க!”
பதிலுக்கு பட்டென எப்போதும் பேசும் ஆவ்ரில் அன்று
மௌனமாக டீயை வாங்கிக்கொண்டதை சவரி ஆச்சரியத்துடன் பார்த்தபடி போனான்.
”ஆவ்ரில்! கம்! யூஹேவ் ய பேஷண்ட்!”
“சொல்லு நிம்மி?”
“பெட் நம்பர் 27. உங்காளோட அட்மிஷன் தான்! சந்தியா!”
ஆவ்ரில் பரபரப்பாக எழுந்தாள்.
“யாரு நானா? நோ நிம்மி! கெட் சம்படி எல்ஸ்!”
”வாட்? ஆவ்ரில் என்ன ஆச்சு உனக்கு? பெரியவரே
உன்னைத்தான் போடணும்னு கண்டிப்பா சொல்லிட்டார்! கெட் கோயிங், மை டியர் ஆவ்ரில்!”
”பெரியவரே சொல்லிட்டாரா! ஓ!”
ஆவ்ரில் சோர்வுடன் எழுந்து போனாள்.
இரண்டாம் நாள்…
“நிம்மி! அந்த பொண்ணு எப்படி இருக்கா?”
“ஒண்ணும் இம்ப்ரூவ்மெண்ட் இல்ல புரொஃபசர்!”
”நாளை வரைக்கும் பாரு! இம்ப்ரூவ்மெண்ட் இல்லேன்னா நாம
சும்மா இருக்க முடியாது.இமேஜ்-கைடட் ட்ரெய்னேஜுக்கு ஏற்பாடு பண்ணணும்!”
”யெஸ் புரொஃபசர்! லாப்ரோஸ்கோபிக் சர்ஜரிதானே?”
“அண்ட் பெல்விஸ் அண்ட் ட்யூப்ஸ் ஜாக்கிரதையா ப்ரொடெக்ட்
செய்யணும் நிம்மி!”
அடுத்து ரெண்டு நாட்களுக்கும் அப்படியே இருந்த சந்தியாவின்
உடல் நிலை மூன்றாம் நாள் லேசாக முன்னேற்றம் கண்டது. ஆவ்ரில் கூடவே இருந்தாள். ஐ வி
மானிட்டரிங், அவ்வப்போது பெல்விக் எக்ஸாமினேஷன் என்று சுழன்றாள்.
நான்காம் நாள் சந்தியா தேறினாள்.
“ஆவ்ரில்! யு டிட் ய கிரேட் ஜாப்! பத்து பன்னண்டு மணி
நேர ட்யூட்டி பாத்திருக்க! ஆமா என்ன ரெண்டு நாளா சீனி கதை ஒண்ணுமே இல்லியா?”
“ப்ஸ!”
ஆவ்ரில் நகர, நிர்மலா அவளைப்பிடித்து நிறுத்தினாள்.
“வாட் ஈஸ் ராங் வித் யூ!”
“நத்திங் நிம்மி! ஜஸ்ட் டையர்ட்!”
அன்று மாலை பெரியவர் அறையில் ரிவ்யூ. ஒவொரு
பேஷண்ட்டாக டிஸ்கஸ் பண்ணினார்கள்.
“ஐயாம் கிளாட் சந்தியா ஈஸ் பெட்டர்! குட் ஜாப்
நிம்மி!”
“தாங்க் யூ புரொஃபசர்!”
“நிம்மி ஒண்ணு முக்கியமா கவனிக்கணும்!”
”யெஸ் புரொஃபசர்?”
“அந்தப்பொண்ணு கல்யாணம் ஆனவளா?”
“தெரியல!கழுத்துல தாலி இல்ல!”
“சில்லி! கார்டியன் யாரு? அப்பாவா இல்ல ஹஸ்பண்டா?”
“ரெண்டு பேரும் இல்ல! டாக்டர் சீனுவாசன்!”
“யூ மீன் நம்ம ஆவ்ரில்லோட…….?”
”ஓ! அவனோட பேஷண்ட்டா? அவங்க ஹாஸ்பிட்டல்ல என்ன
பிராப்ளம்? இங்க வந்து அட்மிட் பண்ணியிருக்கான்! எனி வே, அவளுக்கு கல்யாணம் ஆச்சோ
இல்லியோ, ஐ டோன்’ட் கேர். பட் ஷி ஈஸ் நாட் ய வெர்ஜின்! அண்ட் நிம்மி! இந்த பி ஐ டி
எப்போதுமே ட்ரிக்கர் ஆகறது க்ளமைடியா ஆர் கொனோரியாவுனாலதான்!”
“யெஸ் புரொஃபசர்!”
”ஸோ சந்தியாவோட செக்ஷுவல் பார்ட்னருக்கும் டெஸ்ட்
பண்ணியாகணும்!”
ஆவ்ரில் லேசாக விதிர்த்தாள்.
“நிம்மி! நீ அந்தப்பொண்ணுகிட்ட பேசு! புரிய வை!
அவளுக்கு ஒண்ணும் ஆபத்தில்லைன்னு சொல்லு. ஷி ஈஸ் பெட்டர்! யூ டிட் ய கிரேட் ஒர்க்
நிம்மி!”
“புரொஃபசர்! ஆவ்ரில்தான் முக்கியம்! என்னமா
பாத்துக்கிட்டாள்!”
”அஃப் கோர்ஸ்! ஆவ்ரில்லுக்கு இது புதுசா என்ன!”
ஆவ்ரில் லேசான கூச்சத்துடன் தலை குனிந்துகொண்டாள்.
“ஒய் ஆவ்ரில்! யூ சீம் டுபி டல்! சீனி ஏதாவது ட்ரபிள்
பண்றானா?”
“ஓ நோ புரொஃபசர்!”
ஆவ்ரில்லின் வழக்கமான உற்சாகம் இல்லாதிருப்பதை
பெரியவரும் கவனித்தார். அப்போது அறைக்கதவு சன்னமாக தட்டப்பட்டது. உடனேயே
தயக்கத்துடன் திறக்க முற்பட்டது.
“ப்யூலா! யாரு அது ரிவ்யூவும்போது டிஸ்டர்ப் பண்றது?
செண்ட் தெம் அவுட்!”
அதற்குள் கதவு திறந்து உள்ளே நுழைய முற்பட்ட
பெரியவர், குழுமியிருந்தவர்களைக்கண்டதும்
தயங்கினார்.
எழுபதுக்கு மேல் வயது இருக்கும். நெற்றியில்
அழுத்தமாக ஒய் வடிவ நாமம். முகத்தில்
இரண்டு நாள் முள்ளு தாடி. குடுமி சிதைந்து அந்தஸ்தை இழந்திருந்தது. ஒட்டின கன்னங்கள்.
பஞ்சகச்சம் வெள்ளையைத்தொலைத்து மஞ்சள் படிந்திருக்க, மேலே கட்டம் போட்ட சட்டை கோணா
மாணாவென பட்டன் போட்டிருந்தார். முகத்தில் ஆழ்ந்த வருத்தம் தெரிந்தது.
”ஹு ஆர் யூ ஓல்ட் மேன்! இங்கல்லாம் வரக்கூடாது!”
“புரொஃபசர்! அது என் மாமனார்! சீனுவோட அப்பா!”
“ஓ! அவர் எதுக்கு இங்க……வாங்க பெரியவரே! உடம்புக்கு என்ன
ஆச்சு? தனியாவா வந்தீங்க? உட்காருங்க! ப்யூலா கெட் ஹிம் சம் வாட்டர்!”
முதியவர் மெல்ல வந்தார். ஆவ்ரில்லை நெருங்கி அவளின்
கையைப்பிடித்துக்கொண்டார். கண்ணில் லேசாக கண்ணீர்.
“டாடி! இங்க எதுக்கு வந்தீங்க? எனக்கோ சீனிக்கோ ஃபோன்
பண்ணியிருக்கக்கூடாதா?”
பெரியவரின் உதடு துடித்தது. ஒரு முறை இருமினார்.
ப்யூலா கொடுத்த தண்ணீரை ஒரு மிடறு குடித்தார். சட்டையில் சிதறிய துளிகளை
துடைத்துக்கொள்ள முற்படாமல் பேச முனைந்தார்.
“அலர்! நீ……!”
“அலரா? யாரு அது?”
“புரொஃபசர்! என்னைத்தான் அலரும்பார்! ஹிஸ் மதர்ஸ்
நேம்! எனக்கு வெச்சிருக்கார்!”
இப்போது பெரியவர் லேசான திக்கலுடன் தொடர்ந்தார்.
“அலர்! நேத்து ராத்திரி நீ அழுதுண்டே சொன்னது எனக்கு
தாங்கல! எனக்கு அந்த வீட்டுல இருக்கவே பிடிக்கல!”
இப்போது ஆவ்ரிலும் குலுங்கினாள். வைகுண்டம்
குழப்பத்துடன் பார்க்க, நிர்மலா ஆவ்ரிலை அணைத்துக்கொண்டாள்.
பெரியவர் பேச்சு தொடர்ந்தது.
“சீனு உனக்கு இப்படி ஒரு துரோகம் பண்றானே! அவன்
எனக்கு புள்ளையே இல்ல! அந்தப்பொண்ணு இந்த ஆஸ்பத்திரிய்லதான் இருக்கான்னு சொன்னியே?
அதான் நானே அவள்ட்ட பேசறேன்! எம்புள்ளைய விட்டுடும்மான்னு கேக்கறேன்! நீ ஒண்ணும்
கவலைப்படாதே அலர்!”
ஆவ்ரில் அடக்க மாட்டாமல் அழுதாள்.
அந்த முதியவர் அவளை வாத்சல்யத்துடன் தோளை
அணைத்துக்கொண்டார்.
“எனக்கும் அந்த வீட்ல இருக்கப்பிடிக்கல அலர்! நீ
என்னையும் வெப்பேரிக்கு உங்க அம்மா வீட்டுக் அழைச்சிண்டு போய்டறியா? ஒரு ஓரமா
தொந்தரவு தராம இருந்துப்பேன். எனக்கு ஒரு வா சாத்துமதுஞ்சாதம் போட்டா போறும்!
உங்கம்மாட்ட சொல்லு, நா பெருமாள் படமெல்லாம் கூட வெச்சுக்க்கல. சத்தமில்லாம
சஹஸ்ரநாமம் சொல்லிக்கறேன்!”
ஆவ்ரில் உடைந்து போய் கதறினாள்.
டாக்டர் வைகுண்டம் நெகிழ்ந்தார்.
“ஆவ்ரில்! நீ கிளம்பு! டேக் ஹிம் ஹோம். ரெண்டு
நாளைக்கு லீவு எடுத்துக்கோ! இத பாருங்க சார்! அதெல்லாம் நீங்க எங்கியும் போக
வாண்டாம். சீனுவாசண்ட்ட நா பேசறேன்!”
அறையில் இடி இடித்த து.
“ப்யூலா! கெட் தட் பிளகாட், டாக்டர் சீனுவாசன் ஆன் மை
மொபைல். ஆஸ்க் ஹிம் டு மீட் மி நவ்! ரைட் நவ்! அண்ட் நிம்மி எல்லா டெஸ்டுக்கும்
ரெடி பண்ணு! முதல்ல அவன டெஸ்ட் பண்ணி இன்ஃபெக்ஷன் இருக்கானு பாக்கணூம். அண்ட்
தென், அவன உண்டு இல்லேன்னு பண்றேன்.”
மாடியின் நீள வெராண்டாவில் ஆவ்ரில் முதியவரின்
கையைப்பிடித்து மெல்ல நடக்க, அந்த முதிய அய்யங்கார் சுவாமி, அவளின்
தோளைப்பிடித்தபடி அசைந்து அசைந்து நடந்து போனார்.
ஒரு மகள் தன்னை உடையேன், உலகம்
நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்; செங்கண்மால்
தான் கொண்டு போனான்……..
-
பெரியாழ்வார் திருமொழி

Our Seenu!
ReplyDeleteNo way!
Something fishy…..
Sir please... Seenu will definitely have some explanation. Waiting for the next part...
ReplyDeleteஐயோ
ReplyDeleteமிக மிக பொருத்தமான பாசுரம். எப்டி சரியா?
DeleteThere will be a twist when Seenu meet Dr. Vaikundam…. Waiting sir
ReplyDeleteGOOD EVENING SIR. WAITING FOR THE NEXT PART EAGERLY. GOD BLESS YOU AND YOUR FAMILY FOREVER 🙏🏿🙏🏿🙏🏿♾️♾️♾️♾️♾️
ReplyDeleteThe finishing touch and note is excellent. How about this Sir, "ஆவ்ரில் மாமனார் கையைப்பிடித்து மெல்ல நடக்க"
ReplyDeleteGood one Raghu. But the twist will come in a sequel if I know you right!
ReplyDeleteVery interesting ! "தொடரும்" தானே ?
ReplyDeleteJ. Raghu brilliantly translates Periyazhwar’s ancient verses into a deeply moving, modern-day family drama. The clever parallels between the modern medical twist and classical literature are exceptionally well written. Mrs.Ramanathan.
ReplyDeleteFocusing my concentration on conversations, I missed the end and enable to guess any probability. Waiting for the next part. As usual Medical terminologies are value additions to the story.
ReplyDeleteபாடலின் அர்த்தம் இந்தப் பாகத்தில் பொருந்தவில்லை. அடுத்த பாகமும் படித்தால் தெரிந்து விடும். இதுவரை ஆவ்ரில் சீனிபற்றி ஒரு குறையும் சொன்னதில்லை. ஆனால் சீனி இந்த பேஷன்டிற்கு கார்டியன் என்றதும் பெண்புத்தி வந்துவிட்டது!
ReplyDelete-- R. Jagannathan.
Waiting for the twist. Excellent medical homework. Very superb narrative style as usual.
ReplyDelete