Thursday, 30 July 2026

 டாக்டர் வைகுண்டம்

தந்தாய் இன்றும் தருகின்றாய்.. தருவாய் மேலும்”


சிகாகோ – இரவு 10:15

நார்த்வெஸ்டர்ன் மெமோரியல் ஹாஸ்பிடலின் ஆறாவது மாடி பிசிஷியன்ஸ் லவுஞ்ச் கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பால், மிச்சிகன் ஏரி ஒரு பெரும் கருப்புப் பெருங்கடலாக அடர்ந்து அலைபாய்ந்தது. சாரல் மழையையும் கடந்து, தூரத்தில் பாய்ந்து செல்லும் அவசர கார்களின் சிவப்பு விளக்குகள் மட்டுமே அந்த ருளைக் கிழித்துக் கொண்டிருந்தன.

டாக்டர் அனிருத் தனது கண்கள் இரண்டும் வலிக்கும் வரை விரல்களால் அழுத்திப் பிடித்துக்கொண்டார்.

அவருக்கு முன்னால் இருந்த மூன்று கம்ப்யூட்டர் மானிட்டர்களும் ஒரே ஒரு ஆசாமியின் மெதுவான மரணத்தை லேசர் துல்லியத்தோடு படம் பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தன.

ஜூலியன் வேன்ஸ். வயது முப்பத்து நான்கு. இண்டர்நேஷனல் கன்சல்டிங் கம்பெனியின் இள வயது பார்ட்னர். ஒரு மாதத்திற்கு முன்பு வரை அரை-மராத்தான் ஓடிக்கொண்டிருந்த ஒரு மனிதன். இப்போது, ஐ ஸி யூவில், விவரிக்க முடியாத மஸில் பலவீனம், வயிற்றில் கிராம்ப்ஸ்,, மற்றும் உடலெங்கும் சாம்பல் பூசியது போன்ற விசித்திரமான தோல் நிறமாற்றத்தோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறான்.

"ஆர் யூ ஸ்டில் அப்சர்விங் 'ஜெனோம் சீக்வென்சிங்', அனிருத்?"

பின்னால் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சீஃப் ந்யுராலஜிஸ்ட், டாக்டர் மார்கஸ் உள்ளே நுழைந்தார். இரண்டு ரிசர்ச் ரிப்போர்ட் அவர் கையில் இருந்தன.

"துல என்ன ஆர்க்யூமெண்ட், மார்கஸ்,"

அனிருத் திரையைக் சுட்டிக்காட்டினார்.

"எல்லா ஜினோம் பானல் டெஸ்டுகளிலும் எந்தவிதமான கோளாறும் இல்லை. லம்பார் பங்க்ச்சர் டெஸ்ட் பார்த்தாச்சு! 'கிலன்-பாரே சிம்ப்டம்ஸ்' இல்லை கன்ஃபர்ம் பண்ணிட்டோம். லூபஸ், வாஸ்குலிடிஸ் டெஸ்டும் 'நெகட்டிவ்'. ஆனா, அவனோட நர்வஸ் சிஸ்டம் ஈஸ் ஃபெய்லிங். ஐயாம் கன்ஃப்யூஸ்ட்!"

மார்கஸ் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

"நம்ம டையக்நோஸ்டிக் குரூப் இது ரேர் 'ஆட்டோ இம்யூன்' நர்வஸ் பாதிப்புன்னு அடிச்சு சொல்றாங்க. ஆனா நம்ம வழக்கமான டெஸ்டுகள்ள அது பிடிபடவில்லை. இன்னிக்குள்ள பேஷண்ட்டுக்கு 'ஸ்டீராய்டு' அண்ட் 'பிளாஸ்மாபெரெசிஸ்' ட்ரீட்மெண்ட் ஆரமிக்கணூம்னு டாக்டர் கெல்லர் ஆர்டரே போட்ருக்கார்!"

அனிருத்தின் நெற்றி சுருங்கியது. வலது கை விரல்கள் மேஜை மீது ஒரு குறிப்பிட்ட தாள நயத்தில் தட்டத் தொடங்கின—அப்பாவிடமிருந்து அறியாமல் கற்றுக்கொண்ட அதே பழக்கம்.

"பேஷண்ட்டுக்கு நாம குடுக்கப்போற இந்த ஸ்ட்ராங் மெடிசன்ஸ் அவனோட இம்யூன் சிஸ்டத்தை அழிக்கப்போறது, மார்கஸ். ஒருவேளை, நமக்குத் தெரியாத ஏதோவொரு அக்யூட் இன்ஃபெக்‌ஷன் அவனுக்குள் இருந்தா... யூ நோ, திஸ் ட்ரீட்மெண்ட் வில் கில் ஹிம்!”

"அநிருத்! நாம் இன்னும் இருபத்தி நாலு மணி நேரம் வேடிக்கை பார்த்தா, அவனது லங்ஸ் இம்பாக்ட் ஆகி, அவனை வெண்ட்டிலேட்டர்லதான் போடணூம், அண்ட் யூ நோ தட்!”

மார்கஸ் அமைதியாக, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்.

"நார்த் வெஸ்டெர்ன் மட்டுமில்லை, அமெரிக்காவோட பெஸ்ட் மெடிக்கல் டெக்னாலஜியை  யூஸ் பண்ணிட்டோம். பெட் ஸிட் ஸ்கேன் வரைக்கும் எல்லாம்  கிளியரா இருக்கு. சம்டைம்ஸ், நாம மாடர்ன் டெக்னாலஜியையும் அதோட நவீன சாத்தியக்கூறுகளை நம்பித்தானே ஆகவேண்டும்!"

"பட் மார்க்கஸ்! அந்த டெக்னாலஜி எதுவும் அவனது பாடில இருக்கற இந்த கலர் சேஞ்ச எக்ஸ்ப்ளெயின் பண்ண முடியலியே?”

அனிருத் திரையில் இருந்த ஹை ரிஸல்யூஷன் இமேஜைப் பெரிதாக்கினார்.

"அவன் உள்ளங்கையில இந்த சின்ன தடிமனான தழும்பு பத்தி என்ன சொல்றீங்க மார்க்கஸ்?"

"அநிருத்! இட் ஈஸ் வெரி சிம்பிள்! அவன் ரிகெட்டா சாம்பியன்! துடுப்புப் பிடிச்சதனால  உள்ளங்கையில் தழும்பு வர்ரது நார்மல்தானே!"

மார்கஸ் அதை எளிதாக நிராகரித்தார்.

“லுக் ஹியர் அநிருத்! ட்வெண்டி மினிட்ஸ் ரெஸ்ட் எடுத்துக்கோ. தலையைத் தெளிவுபடுத்திக்கொள். இன்னிக்கு நைட் 11 மணிக்கு டையக்நோஸ்டிக் குரூப் மறுபடி மீட் பண்ணி பிளாஸ்மாபெரெசிஸ் ட்ரீர்மெண்ட்டை கன்ஃபர்ம் பண்ணட்டும்!."

மார்கஸ் கதவைத் திறந்து வெளியே போனார்.

சென்னை ஜெனனரல் ஹாஸ்பிடல் 'டீன்' ஆஃபீஸ் அறை, வழக்கம் போல அன்று காலையும் பரபரப்பாக இருந்தது. ஏஸியின் ஹம்மிங்கை மீறி, வெளியே காத்திருக்கும் நோயாளிகளின் முணுமுணுப்பு அறைக்குள்ளும் கேட்டது.

டாக்டர் வைகுண்டம் தனது மேஜையில் இருந்த ஃபைல்களை ஒதுக்கிவிட்டு, பித்தளை டம்ளரில் இருந்து சூடான ஃபில்டர் காபியை ஒரு மடக்கு பருகிய கணத்தில், அவரது மேஜை மீது இருந்த தனிப்பட்ட மொபைல் போன் அதிர்ந்தது.

திரையில்: அநிருத் என ஒளிர்ந்தது.

"சொல்லு அனிருத். என்ன இந்த நேரத்தில்? அங்க இப்ப மிட்நைட் இல்ல?"

பெரியவரின் குரலில் வழக்கமான நிதானமும், கனிவும் கலந்திருந்தது.

மறுமுனையில் அனிருத்தின் பெருமூச்சு தெளிவாகக் கேட்டது.

"டாட்... ஒரு கேஸ். கைநழுவிப் போறது. பெஸ்ட் 'டயக்னாஸ்டிக் போர்டு' கூடி யோசித்தும் ஒரு க்ளாரிட்டி வரலை. இன்னிக்கு ராத்திரி தப்பான ட்ரீட்மெண்ட் தறப்போறோம்னு எனக்கு உள்ளுக்குள்ள ப்ரிமானிஷன்! ஐயாம் வெரி ட்ரபிள்ட், அப்பா!”

"அமைதியா இரு அனிருத்,"

வைகுண்டம் காபி டம்ளரை கீழே வைத்தார்.

"லேப் ரிப்போர்ட்ஸை இக்னோர் பண்ணு! மானிட்டர் ஸ்க்ரீனைக்கூட கொஞ்ச நேரம் தள்ளிவை. அந்த மனுஷனைப் பத்தி சொல்லு. அவனுக்கு என்ன உடம்பு?"

"34 வயசுப்பா! பெரிய கார்ப்பரேட் கன்சல்டண்ட்! அக்யூட் மஸில் வீக்னெஸ்! வயிற்றுப் பிடிப்பு, உடம்பு முழுக்க சாம்பல் பூசினா மாதிரி தோல் கலர் மாறிக்கிடக்கு. 'கிலன்-பாரே' இல்லை. லூபஸ், வாஸ்குலிடிஸ் ஆட்டோ இம்யூன் டெஸ்டெல்லாம் 'நெகட்டிவ்'. Whole-Genome Sequencing தெளிவா இருக்கு. போர்டு இதை ஒரு ரேர் ந்யூரலாஜிக்கல் டிஸீஸ்னு முடிவெடுத்து ஸ்டீராய்டும், பிளாஸ்மாபெரெசிஸும் கொடுக்கப் போறோம்."

வைகுண்டம் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தார்.

"அனிருத், ங்க சிகாகோ ஹாஸ்பிடல் அவனுடைய பிளட், டிஎன் ஏ எல்லாத்தையும் ஸ்டடி பண்ணியிருக்கீங்க! ஆனால், வாட் அபவுட் ஹிஸ் லைஃப் ஸ்டைல்?  அவனுடைய டெய்லி பழக்கவழக்கமெல்லாம் என்ன, தொழில் என்ன?"

"சொன்னேனே, கார்ப்பரேட் கன்சல்டண்ட், அப்பா. அடிக்கடி இண்டர்நேஷனல் டிராவல் பண்ணுவான்! சமீபத்தில் கூட டிரடிஷனல் ஹேண்ட்லூம் ரிசர்ச்சுக்காக  ண்டியா, பங்களாதேஷ் பக்கம் போயிருந்தான். ஆனா, மலேரியா, டெங்கு, டைபாய்டு, ட்யூபர்கொலோஸிஸ் மாதிர் எல்லா 'டிராபிகல்' டெஸ்டும் பண்ணியாச்சு, 'நெகட்டிவ்' தான்."

"ம்..."

வைகுண்டம் தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார்.

"அவன் உடம்பை நீ சொந்தக் கண்ணால முழுசாப் பார்த்தியா? கேமரா இமேஜஸ் மட்டும் பார்க்காம, தொட்டுப் பார்த்தியா?"

"அப்பா, நாங்கள் 'ஹை-டெஃப்' படங்களை..."

"படமெல்லாம் நிழல்தானே, அனிருத்," வைகுண்டம் குறுக்கிட்டார். "என்னோட  கேள்விக்கு பதில் சொல்லு. அவனோட உள்ளங்கை, உள்ளங்காலெல்லாம் கவனிச்சியா? வாட் டு தே ஸே?"

அனிருத் அவசர அவசரமாகத் தன் மானிட்டரில் உள்ளங்கையின் க்ளோஸ் அப் இமேஜைப்பார்த்தான்.

”ஆர் யூ தேர், அனி?”

" சின்னதா ஹார்டா தழும்புகள்! கொப்புளம் மாதிரி 'ஹைப்பர்கேரடோடிக்' புள்ளி தெரியறதுப்பா. அவன் ரெகெட்டா சாம்பியங்கறதால என்பதால், துடுப்புப் போட்டு போட்டு வந்த தழும்புன்னு இங்க சொல்றாங்க!”

"ஸ்ட்யுப்பிடிட்டி!"

வைகுண்டத்தின் குரல் சட்டென்று உறுதியானது.

"அநிருத்! போட் ரோ பண்ணினா, துடுப்பு தழும்பு உள்ளங்கையோட நடுவுல மட்டுந்தான் வரும். விரல் நுனி, உள்ளங்காலோட ஓரத்திலயும் வரலாம்! அனிருத்! லிஸன் டு மி, உன் பேஷண்ட்டுக்கு எந்த ரேர் ஜீன்ஸ் பிராப்ளமும் இல்லை... அண்ட் நோ'ஆட்டோ-இம்யூன்' டிஸ் ஆர்டர்!"

அனிருத் டென்ஷன் ஆனான்

"அப்பா! அப்படின்னா…..?"

"அது 'ஆர்சனிக்' டாக்ஸிஸிட்டி! அதுவும் க்ரானிக்கா இருக்கும்!

"வைகுண்டம் தீர்க்கமாகச் சொன்னார்.

மறுமுனையில் அனிருத் உறைந்தான்.

"ஆர்சனிக்கா? அப்பா, அவன் அமெரிக்காவுல இருக்கான்! அவனுக்கு எப்படி ஆர்ஸனிக் அண்ட் ...?"

"அநிருத்! நீ தானே சொன்னே, அவன் இந்தியா அண்ட் பங்களாதேஷுக்கெல்லாம் வந்திருக்கான்னு! வில்லேஜ், எஸ்டேட்டுக்கெல்லாம் போயிருந்தா அங்கல்லாம் கிணத்து தண்ணிரைக்குடிச்சிருப்பான்!

 வைகுந்தத்தின் குரலில் பல தசாப்த கால அனுபவம் எதிரொலித்தது.

"நைண்டீஸ்ல தஞ்சாவூர் சுத்து வட்டாரப் பகுதிகளில, டீப் போர்வெல் கிணத்து  தண்ணிர் குடிச்சவங்களுக்கு இதே சிம்ப்டம்ஸ் இருந்ததை நானே  பார்த்திருக்கேன். 'ஆர்சனிக்' பாய்சன் உடம்புக்குள் சேரும்போது, அது நர்வஸ் ஸிஸ்டத்தை அட்டாக் பண்ணி 'கிலன்-பாரே' போல நடிக்கும். வயித்து வலி கொடுக்கும். ஸ்கின்ல 'மழைத்துளி' மாதிரி கருப்புப் புள்ளி, உள்ளங்கையில் கடினமான தழும்பு உண்டாக்கும்!"

அநிருத் வாய் மூடாமல் கேட்டான்.

"உங்க சிகாகோ ஹாஸ்பிடல்ல வழக்கமான 'டாக்ஸிகாலஜி' டெஸ்டுல ஆர்சனிக் பிடிபடாது. யூ நோ, அது பிளட்ல தங்காம, ஸ்கின் மற்றும் நகத்தோட புரோட்டின்ல செட்டில் ஆயிடும். நீங்கள் ஒன் இன் ய மில்லியன் ஜெனெடிக் டிஃபெக்டை தேடிண்டு இருக்கீங்க; ஆனால்  இதுக்கு பதில் அவனோட நகக் கண்கள்ள இருக்கு, மை டியர் சன்!"

அனிருத்தின் இதயத் துடிப்பு வேகமானது. அப்பாவின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ஜிக்ஸா பஸில் பொருந்துவது போல உணர்ந்தான்.

"அப்பா... உடனே அவனோட ஹேர் அண்ட் நெயில் டிஷ்யூ பானல 'ஹெவி மெட்டல்' டெஸ்டுக்கு அனுப்பறேன்!"

அனிருத்தின் குரலில் புது நம்பிக்கை பிறந்தது.

"உடனே அனுப்பு,"

வைகுண்டம் கமாண்டிங்காக சொன்னார்

 "ஸ்டாப் தி ஸ்டீராய்டு ட்ரீட்மெண்ட். அவன் நர்வஸ் சிஸ்டத்தை காப்பாத்த  உனக்கு 'செலேஷன் தெரபி' தேவைப்படும். கெட் கோயிங் அனி! ஆல் தி பெஸ்ட்!”

“தாங்ஸ்ப்பா! உங்களுக்கு தெரியாத விஷயம்னு ஏதானும் இருக்கா?”

அநி! ஒரு சின்ன ஹெல்ப்?”

“சொல்லுங்கோப்பா?”

“துருவ் எப்படி இருக்கான்?”

“ஓ ஹி ஈஸ் வெரி ஃபைன்! டெக்னாலஜிய கைல வெச்சுண்டு என்னென்னமோ பண்ணிண்டு.. ஹி ஈஸ் பிஸி!”

“அதாண்டா! எனக்கு ஒரு, என்னது அது, வாட்ஸப் சானலாமே, அதை அனுப்பிச்சு உங்க ஃப்ரெண்ட்ஸ இதுக்கு சப்ஸ்கிரைப் பண்ணச்சொல்லுங்கன்னு கேட்டிருந்தான். அத எப்படி ஓபன் பண்றதுனே தெரியலைடா அநிருத். கொஞ்சம் கைட் பண்ணேன்?”

அநிருத் பலமாகச்சிரித்தது சென்னை வரை கேட்டிருக்கும்! 


29 comments:

  1. THERE'S ONLY ONE DOCTOR BY NAME DR VAIKUNDAM A VLASS OF HID OWN. THANKS FOR FANTASTIC WRITE UP SIR. CONGRATULATIONS AND GOF YOU AND YOUR ENTIRE FAMILY FOREVER. WITH REGARDS RANGRAJAN SRIDHAR 👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿

    ReplyDelete
  2. S. Jothilakshmi

    படிக்க படிக்க பிரமிக்க வைக்கும் அலுக்காத கதைகள் 🌹👏👏

    ReplyDelete
  3. Oh what a lovely story and the end..,so cute!

    ReplyDelete
  4. Guillen Barre Syndrome- Auto Immune Disorder- chronic Arsenic poisoningஆஹா என்ன ஒரு விவரிப்பு??? சந்தேகமில்லை; நீர்தான் முன்னமொரு பிறவியில், வேதாந்த தேசிகர்/ சுஷ்ருதர்!!!
    - சுதாகர், சென்னை91

    ReplyDelete
  5. கார்த்திக் சென்னை
    டாக்டர் ரகு?

    ReplyDelete
  6. கமெண்ட்டுகளுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  7. அழகான மிக ரசிப்பான கதை !! Dr.வைகுந்தத்தின் மேதமை மிரள வைக்கிறது !! அவர் போலொரு டாக்டரின்றி நாமும்தான் இங்கு அல்லாடுகிறோம் !!! இது போலக் கதை எழுத பேனா எங்கே கிடைக்கிறது, ரகு ?

    ReplyDelete
    Replies
    1. இத்தனை ரசனையாக என்னைப்பாராட்ட உங்களுக்கு பேனா கிடைக்கும் அதே இடத்தில் தான், ராம்கி!!

      Delete
    2. Brilliant… fabulous
      Sridhar Seethapathy

      Delete
    3. Thank you Sridhar

      Delete
  8. Brilliant as usual.. fabulous

    ReplyDelete
  9. Superb. எழுதுகோலின் வெண்பட்டு மை தீட்டிய கவிதை!

    பொய்கை நதியாய்ப் பாயும் எழுதுகோலின்,வெண்பட்டு வனிதையென மை தீட்டிய கவிதையிது!

    தங்களைப்போல் மற்றொருவரைக்
    காண இயலாது,
    தாங்கள் எங்கள் அமைதியான ஆற்றல் மற்றும் பெருமிதம்;
    தங்களின்
    தங்கமான எழுதுகோலின் கம்பீர நடையில்
    அது வெளிப்படுகிறதே!

    மலரும் நயவொயிலாகச்
    செல்ல,
    திங்கள் போல எழுத்துகள் ஒளிவீசும் பொலிவுடன் விளங்கிட,
    பலருக்கு மேலான குதூகலம் வாரி வழங்கிடும்!

    குளிர்காலத்துக்கு ஒளி கூட்ட,
    சக்திவாய்ந்த எழுதுகோலின்
    ராஜகம்பீர நடை தவழ,
    உயரிய வாசகர்
    வட்டத்தின் இதயத்துடிப்பை உணர்ந்திட,
    வார்த்தைகளால் வர்ணிக்க இயலா வண்ணம்
    எழுதுகோல் மின்னிட,

    வெண்பட்டு மை
    விண்ணின் வாசத்தை சிந்தி முத்திரை பதிக்க,
    கருத்துக்குவியல்கள்
    தூய தேனாகத் தித்திக்க,
    செல்வத்தைக்
    காட்டிலும் மதிப்பில் மேலான பொக்கிஷமாகிறது!

    ஏப்ரலில் புதிய திருப்புமுனையாகப் பல வண்ண எண்ணங்கள் புதிய இலையாக மனதில் துளிர்விட,
    ஜூன் மலர்களின் நறுமண வாசத்தைப்
    போல வாசகங்களை பக்கங்கள் நுகர,
    இனிய ஜூலையின் மாண்புமிகுந்த வரவு போல ஞான விழா ஞாலம் காணும் வைபவமாகிறது!

    ஆகஸ்டின் பொன்னொளியில் புதிய சிந்தனைகள் முதிர்ச்சி பெற,

    செப்டம்பரின் செழுமையில் கற்பனை ஊற்றுகள் சுரக்க,

    அக்டோபர் பசுமையான இலைகள் கிசுகிசுத்து எழுதுகோலை வரவேற்க,
    நவம்பர் முத்துளியாய் மழை பன்னீராய்ப் பொழிய,
    டிசம்பரின் பனிப்போர்வையில், எழுதுகோலின் செங்கோல் ஆட்சி சிறக்க!

    தங்கள் உழைப்பின் விதைகள் ஜனவரியில் முளைப்பயிராகச் செழிக்க,
    பிப்ரவரியில் மெல்ல தண்டு தளிர்விட,
    மார்ச்சில் விருட்சமாக வளர,
    வெற்றி எனும் சிகரம் தொட்டு,
    அம்சமாய் புகழ் மகுடம் சூடிடுமே!

    ReplyDelete
  10. Vasudevan Sethuraman1 August 2026 at 19:29

    Technology is only a tool or means and not the end. Every begining and end is by humans only. Raghu ji You have captured it well. The last few sentences are your trade mark humour dose / Vasu

    ReplyDelete
  11. அப்பப்பா..எப்படிதான் எழுத முடிகிறதோ இந்த மாதிரி. வைகுண்டம் டாக்டர் வைத்திய ஸாஸ்த்ர பரமாச்சாரியார். இவர அனுகினவர்க்கு எந்த குறையும் இல்லை.
    திரில்லிங் நடை.

    ReplyDelete
    Replies
    1. நன்றியும் நமஸ்காரமும்

      Delete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

      Delete
  14. Superb. Thank you.

    ReplyDelete
  15. வெகு அழகு. சின்னக் கண்ணன்

    ReplyDelete
  16. வழக்கம் போல டாக்டர் நோயை குணப்படுத்தி வாழ வைக்கிறார். எந்த ஊராக இருந்தாலும் .

    ReplyDelete
  17. F.B யில் இருந்து இங்கு வந்தும் லந்து வைத்தியம்
    ரசிக்கும்படி இருக்கு
    வாழ்த்துகள்

    ReplyDelete
  18. vatchala.gopinath@gmail.com5 August 2026 at 09:33

    Excellent as usual

    ReplyDelete
  19. அத்புதம். டாக்டர் வைகுண்டத்தின் டயக்னோஸ் பண்ணும் திறமையின் முன்பாக டெக்னாலஜி பணால்!

    ReplyDelete