Tuesday, 14 July 2026

 டாக்டர் வைகுண்டம்

Sequel to ”ஒரு மகள் தன்னை உடையேன்”

..திருமகள் போல வளர்த்தேன்..….….”

அன்று

தொள்ளாயிரத்து எழுபதுகளில் சீரங்கத்து தி பாய்ஸ் ஹை ஸ்கூல் பையன்கள் கீழச்சித்திரை வீதியைத்தாண்டி முடுக்கு தெருவைத்தவிர்த்து ஒன்றிரண்டு தெருவை விட்டு கிழக்காக ஸ்கூல் நோக்கிப்போகும் ஒரு தெருவில் நுழைந்து பேசி ஆரவாரமாகச்சிரித்துக்கொண்டே நடந்து போவார்கள்.

அது ஏன் முடுக்குத்தெருவை தவிர்க்க வேண்டும் என்று கேட்டால் சுந்தர்ராஜ சித்தப்பாஅடேய்! அங்கல்லாம் போப்படாதும்பாடா! அதுல முழுக்க முழுக்க கோவில் தாசிகள்லாம் இருப்பாளாம்!” என்பார்.

அவா இருந்தா என்ன சித்தப்பா?”

போடா போக்கத்தவனே! என்று சொல்லிவிட்டு சொல்லிவிட்டு இடி இடி என்று சிரிப்பார்.

கோவிந்தன் அந்த முடுக்குத்தெருவில் இருந்த ரங்கநாயகியின் பேரன். ரங்கநாயகி ஒரு காலத்தில் ஸ்ரீரங்கம் கோவிலின் பிரதான நாட்டியக்காரி. மிராஸுதார் காலம் ஒழிந்து காங்கிரஸ் ஆட்சிக்குப்பிறகு அவர்களது மவுசு குறைந்து அவர்கள் பிழைப்புக்கு வழியின்றியும் உள்ளூர் பெருந்தனக்கார்களின் தொல்லையாலும் இழி தொழிலுக்கு தள்ளப்பட்டு ஜீவித்து வந்த சிறிய கூட்டம். ரங்கநாயகியின் மகள் தெய்வநாயகி காலத்தில் சில மிட்டா மிராசுகளின் போஷகத்தில் தொழில் நடத்தினாள். தாசிகள் வீட்டில் பெண் பிறந்தால் கொண்டாட்டம். பிள்ளையாகிப்போனாலோ துக்கம் தான். அப்படி தெய்வநாயகிக்குப்பிறந்தவன் கோவிந்தன். கோவிந்தனின் சின்ன வயசிலேயே தெய்வநாயகிக்கு மவுசெல்லாம் போய் மிட்டா பிராசுகள் வருவதை நிறுத்திவிட்டனர். கஷ்ட ஜீவனமாக இருந்தாலும் தெய்வநாயகி கோவிந்தனை ஆசையாக வளர்த்தாள். பள்ளிக்கூடமெல்லாம் அனுப்பினாள்.கோவிந்தனும் எஸ் எஸ் எல் இ முடித்து டைப்பிங் ஷார்ட் ஹேண்டெல்லாம் படித்து மணச்சநல்லூர் காங்கிரஸ்காரர் ஒருவர், தோற்றுப்போன அரசியல்வாதி, அவரிடம் கணக்கெழுதிப்பிழைக்கத்தொடங்கின போதுதான் அலமேலுவைச்சந்தித்தான்.

 இன்று

டாக்டர் வைகுண்டம் மும்முரமாக ரிப்போர்ட் படித்துக்கொண்டிருந்தார்.

A hemiplegic migraine is a rare type of migraine that happens….

ப்யூலா உள்ளே வந்தபோது சிடுசிடுப்புடன் நிமிர்ந்தார்.

“என்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொன்னேனே?”

“இல்ல புரொஃபசர்! டாக்டர் ஸ்ரீனிவாசன் வந்திருக்காரு!”

“யாரா இருந்தா….என்ன சொன்னே? சீனுவாசனா? நம்ம ஆவ்ரில்லோட….?”

“யெஸ்!”

“செண்ட் தட் பிளகாட் இன்!”

டாக்டர் சீனுவாசன் அமைதியாக உள்ளே வந்தான். பெரியவர் அவனை உட்காரச்சொல்லவில்லை. நிமிர்ந்து அவரைப்பார்த்தான்.

”ஸோ, சந்தியாவைப்பார்க்க வந்திருக்கியா?”

குரலில் நக்கல் மிளிர்ந்தது.

“ஆமாம். அப்படியே நீங்களும் வரச்சொன்னதா ஆவ்ரில்….!”

“அவ பேரைக்கூடச்சொல்லாத! யூ டோன்’ட் டிஸர்வ் ஹர்!”

சீனுவாசன் மௌனம்.

“ஓகே ஸே சம்திங்! ஆவ்ரில்ல லவ் பண்ணி அத்தனை எதிர்ப்புக்கு நடுவுலதானே கல்யாணம் பண்ணிண்டே? அப்புறம் என்ன சந்தியா வேண்டு கிடக்கு? அண்ட் உனக்கு என்ன வயசு இப்ப? அட் ஃபார்ட்டி ஃபைவ், உனக்கு ய ஸ்டன்னர் இன் லுக்ஸ் அண்ட் பாடி, தேவையா இருக்கா?”

சீனுவாசன் திடுக்கிட்டு நிமிர, பெரியவர் படபடத்தார்.

“நாட் மை வோர்ட்ஸ்! ப்யூலா அண்ட் நிர்மலா செட் சந்தியா ஈஸ் ய ஸ்டன்னர் அண்ட் ஆல் தட்!”

“எனக்கு ரெண்டு மூணு நாள் டைம் தருவீங்களா? ஐ கேன் எக்ஸ்ப்ளெயின்?”

“எதுக்கு டைம்?”

“சந்தியா கொஞ்சம் சரியாகட்டுமே!”

“ஓ அக்கறை! அவ மேல கன்சர்ன்! மை ஃபுட்! “

ஆனால் பெரியவரின் மனித நேயம் முன் வந்தது.

“ஓகே லெட் ஹர் கெட் வெல்! நவ் கெட் அவுட்!”

நாலாம் நாள் சந்தியா டிஸ்சார்ஜ் ஆக ரெடியாக இருந்தாள். சரியாக ஐந்து மணிக்கு டாக்டர் சீனுவாசன் பெரியவரின் அறைக்கு வந்தான். கூடவே தலை குனிந்தபடி சந்தியா. வைகுண்டம் முகத்தில் வெறுப்பு நிரம்ப இருந்தார்.

“டெல் மி!”

“புரொஃபசர்! இப்ப ஆவ்ரில்லும் அப்பாவும் வந்துரட்டுமே?”

“அவங்க எதுக்கு? ஒய் மேக் தி ஓல்ட் மேன் சஃபர்?”

“ப்ளீஸ் டாக்டர்! வந்துரட்டும்!”

பத்து நிமிடங்களில் ஆவ்ரில் கையைப்பிடித்துக்கொண்டு அந்த அய்யங்கார் சுவாமி வந்தார். சீனுவாசனைப்பார்த்த போது கோபம்.

“எங்கடா நாலு நாளா வீட்டுக்கே வரல! இந்தத்…….வோடவே இங்கியே சல்லாபம் பண்ணினியா?”

“டாடி!ப்ளீஸ்!”

ஆவ்ரில் அவரது கையை அழுத்தி சமாதானப்படுத்தினாள். பெரியவர் குரல் நடுங்க பேசினார்.

ஸ்ரீனிவாசா..." இன்னும் எத்தன நாளைக்கு இந்த நாடகம்? ஆவ்ரிலை அழ வச்சுட்டு, சந்தியாவுக்கு நீ கார்டியனா இருக்கிற ரகசியம் என்ன? உனக்கு மனசுல தர்மம் இருக்காடா? நீயெல்லாம் வைஷ்ணவனாடா?”

அங்கு ஒரு கணம் காற்று ஸ்தம்பித்தது. ஆவ்ரல் சீனுவாசனை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் கண்களில் இன்னும் குழப்பமான கேள்விகள். சந்தியா தலை குனிந்து அமைதியாக இருந்தாள்.

ஸ்ரீனிவாசன் மெல்லப் புன்னகைத்தான். அந்தப் புன்னகையில் வலி இருந்தது, ஆனால் தெளிவு இருந்தது. அவன் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல நிற ஃபைலை எடுத்து நீட்டினான்.

"இந்த ஃபைலைப் படிச்சுப் பாருங்க."

வைணவர் நடுங்கும் கைகளால் அந்த ஃபைலைத் திறந்தார். உள்ளே சில மெடிக்கல் டாகுமெண்டுகளும், மஞ்சள் படிந்த ஒரு பர்த் சர்ட்டிஃபிகேட்டும் இருந்தன.

"என்னது இது? சந்தியா? அவ அம்மா பேரு அலமேலு…..என்னது அலமேலுவா?"

பெரியவரின் கையில் இருந்த ஃபைல் தரையில் விழுந்தது. அவர் முகம் வெளுத்தது.

ஆமாம்பா. அலமேலுவே தான்! வீட்டை விட்டுத் துரத்தினீங்களே... நினைவிருக்கா? அவளோட பொண்ணுதான் சந்தியா."

ஆவ்ரில் அதிர்ச்சியில் பார்த்தாள்

"கோவிந்தன் மூணு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டான். அலமேலு போன மாசம் போய்ட்டா? வளுக்கு இந்தத் டர்போ ஓவரியன் ஆப்ஸெஸ் வந்தப்போ, என்கிட்ட வந்தா. அலமேலு நம்மளப்பத்தி நிறைய சொல்லியிருக்காளாம். இங்க ஜி ஹெச்சுலதான் பெஸ்ட் ட்ரீட்மெண்ட்டுன்னு தெரியும். அதனாலதான் கார்டியன் சிக்னேச்சர் வேணும்னு கையெழுத்துப் போட்டேன்."

"அப்போ... நீ ஏன் இதை எங்ககிட்டயோ ஆவ்ரில்ட்டயோ முன்னாடியே சொல்லலை? மறைச்சது ஏன்?"

"ஏன்னா, அவ அலமேலு பொண்ணுன்னு தெரிஞ்சா, அவளை ஏத்துக்க உங்க தீவிர வைஷ்ணவ மனசு டம் கொடுக்குமான்னு எனக்குத் தெரியாது. அண்ட் உங்களுக்கு இருக்கும் கார்டியாக் கண்டிஷன்ல அதிர்ச்சி வேணாம்னு நினைச்சேன். சந்தியா முழுசா குணமாகி, தன் சொந்தக் கால்ல நிற்கும்போது அவளை உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்தணும்னு நினைச்சேன்."

ஆவ்ரில் கண்கள் இப்போது குற்ற உணர்ச்சியிலும், அன்பிலும் பனித்திருந்தன.

”சாரி ஆவ்ரில்... உன்கிட்ட சொன்னா, நீ என்மேல இருக்கிற அன்பால உடனே அப்பாகிட்ட விஷயத்தைக் கொண்டு போயிருப்பேன்னு பயந்தேன்! சாரி!"

ஆவ்ரில் சீனுவாசனை நெருங்கி கிசுகிசுப்பான குரலில் பேசினாள்.

“அப்ப எப்படி ஓவரியன் ஆப்ஸெஸ் சீனு? ஷி ஈஸ் நாட் ய…..!”

“ஐ நோ ஆவ்ரில். அவளை போன வருஷம் கல்யாணம் பண்ணிண்ட அயோக்கியன் விட்டு ஓடியிருக்கான்!”

ஆவ்ரில் வைகுண்டத்திடம் கண்களைக்காட்ட, அவர் தலையசைத்தார்.

அந்த வைஷ்ணவர் தன் மகனின் கைகளைப் பற்றிக் கொண்டார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து, அவர் நெற்றித் திருமண்ணைக் கரைத்தது. மெல்ல நடந்து போய் சந்தியாவின் தலை மீது கை வைத்து ஆசிர்வாதம் போல நின்றார். அவர் வாய் முணுமுணுத்தது.

”….ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல வளர்த்தேன்: செங்கண்மால் …..

”சுவாமி!அலமேலுவை எங்க திருமகள் போல் வளர்த்தீர்! அதான் வீட்டை விட்டு துரத்தியிருக்கீறே!”

டாக்டர் வைகுண்டம் சொல்ல, அந்த இடம் கொஞ்சம் கலகலப்பாக, ஆவ்ரில் சட்டென சந்தியாவின் அருகில் போய் அவளின் தோளை அணைத்துக்கொண்டாள்.

“வாட் ஈஸ் திஸ் சந்தியா? எதுனா துன்னுவியா இல்ல காத்த குடிச்சு, உசுர் வாழ்வியா மேன்? நம்ம வூட்டுக்கு வந்துடு சொல்றேன். ஃபிஷ் சிக்கன்னு போட்டு உன்னை தேத்திடறேன்! சாரி டாடி! நீங்க கொஞ்ச நாள் வெப்பேரியில எங்கூட்ல போய் இருங்க! எங்க அம்மா நல்ல ரசம் சாதம் போடுவாங்க!”

பெரியவர் பரிதாபமாக சிரித்தார்.

 “இதென்ன ஹாஸ்பிடலா இல்ல உங்க வீடா? செண்டிமென்ட் அண்ட் ஆல் தட்! கிளியர் மை ரூம் ஐ ஸே!”

பெரியவரின் இடிக்குரல் வழக்கம் போல ஒலித்தது.

13 comments:

  1. "மகள் போல வளர்த்தேன்"- சூப்பர்ப்; முதன்முறையாக மரு. வைகுண்டத்தை ஆவ்ரில் மிரட்டிய கதை!- Sudhakar

    ReplyDelete
  2. மனத்தைத் தொட்ட அருமையான சிறுகதை.

    இது போன்ற சிறுகதைகளில் இழையோடும் மனிதாபிமானம், இன / மத நல்லிணக்கம் போன்றவைகளை மற்ற இன/ மத எழுத்தாளர்கள் எழுதுவார்களா? எழுத மாட்டார்கள்! இப்படிச் சொல்வதின் மூலம் நான் சங்கி அல்லது பார்ப்பான் என்று அழைக்கப்டுவேன். ஆனால், இதைச் சொல்ல எனக்கு முழு உரிமையும் உள்ளது. என்னுடைய மகன் / மகள் இருவருமே வேற்று இன ஜோடியுடன்தான் திருமணம் செய்து கொண்டார்கள்.

    நாம், நம் குழந்தைகள் நலம் / எதிர்காலம் / மகிழ்ச்சியே பெரிது என்று நினைத்து செய்து விடுகிறோம். பிறகு, நம் வாரிசுகளே நம்மை மதிக்காமல் போகும்போது நொந்து போகிறோம். பெர்ஷிய நாட்டுப்புற கதைகளில் (முதலில்) குறிப்பிட்டது போல "திஸ் டூ ஷல் பாஸ்" என்று (வழக்கம் போல) இருந்து விட வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. அசத்தலான முடிவு.
    வைஷ்ணவ பெரியவருக்கு புகாரில பத்திய சாப்பாடு, சந்தியாவுக்கு மடப்பள்ளியில் சிக்கன் சூப்
    ஃபிஷ் கரி. சரியான பரிவர்த்தனை யோகம்

    ReplyDelete
    Replies
    1. அப்படிபோடுங்க !

      Delete
  4. Lovely kutti kadai

    ReplyDelete
    Replies
    1. கமெண்ட்லயே தொடர்ந்து உங்க பேரையும் எழுதிடுங்க!!

      Delete
  5. கார்த்திக் சென்னை

    அருமையான ட்விஸ்ட். கோதாவரி காவிரி பெல்ட் ல கரைந்து போன கலைஞர்கள்

    /கோவிலின் பிரதான நாட்டியக்காரி. மிராஸுதார் காலம் ஒழிந்து காங்கிரஸ் ஆட்சிக்குப்பிறகு அவர்களது மவுசு குறைந்து அவர்கள் பிழைப்புக்கு வழியின்றியும் உள்ளூர் பெருந்தனக்கார்களின் தொல்லையாலும் இழி தொழிலுக்கு தள்ளப்பட்டு ஜீவித்து வந்த சிறிய கூட்டம். ரங்கநாயகியின் மகள் தெய்வநாயகி காலத்தில் சில மிட்டா மிராசுகளின் போஷகத்தில் தொழில் நடத்தினாள். தாசிகள் வீட்டில் பெண் பிறந்தால் கொண்டாட்டம். பிள்ளையாகிப்போனாலோ துக்கம் தான்/

    ReplyDelete
  6. VERY NICE WRITE UP. DR VAIKUNDAM AND MEDICAL TERMS SUPPPPPPPPPPER SIR. MY HEARTIEST CONGRATULATIONS 🎉🎉🎉🎉
    GOD BLESS YOU AND YOUR FAMILY FOREVER SIR 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    ReplyDelete
  7. Vasudevan Sethuraman15 July 2026 at 05:11

    A twist was definitely known. But the narration ensured to read through to know that twist. Excellent Raghu ji / Vasu

    ReplyDelete
  8. R. C. Natarajan19 July 2026 at 20:18

    அருமையான நடை. முடிவு எப்படி இருக்கும் என்பது கதை நடுவில் தோன்றியது. எனினும் படித்து முடித்தவுடன் ஒரு நெகிழ்ச்சியான உணர்வு. சபாஷ்!

    ReplyDelete