டாக்டர் வைகுண்டம்
நியூரான்களின் தீர்ப்புமொபைல் ஃபோன் விடாமல் அடித்துக்கொண்டிருந்தது.
“ப்யூலா! கட் தட் ஃபோன்!நா ரிப்போர்ட் பாத்துண்டு இருக்கேன்!”
“புரொஃபசர்! அட்வொகேட் வேதாந்தம் ஆன் தி லைன்!”
“அவனா? சரி ஆன் பண்ணித்தா!”
“சாரி டு டிஸ்டர்ப் அண்ணா!”
“அதான் பண்ணிட்டியே! சொல்லு!”
ஜட்ஜ் சண்முகவடிவேலனை நீங்க பாக்கணும்!”
”ஏன் என்ன ஆச்சு அவருக்கு?
”ஒரு வாரமா அவஸ்தைப்படறார்! பெராலிஸிஸ் மாதிரி இருக்கு. மெர்க்குரிக்கு கூட்டிண்டு போயிருக்கா.”
“லட்ச ரூவா பில் போட்ருக்கானா?
“சரியானா குடுக்கலாமே! குழப்பிண்டு இருக்கா! தலைக்கு தலை என்னென்னவோ சொல்லிண்டு.. ஜட்ஜ் ஈஸ் சஃபரிங்! நாந்தான் உங்க கிட்ட வரச்சொன்னேன்!”
“பெராலிஸிஸ்ங்கறியே! உடனே வரச்சொல்லு!”
தாங்க் யூண்ணா! நா கூட வினுதாவை அனுப்பறேன்!”
”யாரு அந்த சுட்டிப்பொண்ணா?
ஆமா!நாம தேரெழுந்தூர் ராமநாதனோட டாட்டர்!”
”ஓகே செண்ட் த ஜுட்ஜ்!”
மழை விட்ட பிறகு மரத்திலிருந்து சொட்டும் கடைசித் துளிகளைப் போல, அந்த ஏசி அறையில் கடிகாரம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தது.
சண்முகவடிவேலன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி. வயது அறுபத்தி இரண்டு.
ஜிஹெச்சின் ஸ்பெஷல் ரூமில், அரை வெளிச்சத்தில், பஞ்சு மெத்தையில் படுத்திருந்தார். கால் விரல்கள் சுருங்கிப் போய், முழங்கால் வளைந்து, அசைவற்று இருந்தன.
டாக்டர் வைகுண்டம் தனது 3M ஸ்டெதாஸ்கோப்பை மெதுவாகக் கழற்றி பாக்கெட்டில் போட்டார். அவரது விரல்கள் பிபி அப்பாரட்டஸின் கஃபை மிக நேர்த்தியாக மடித்தன.
பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஆவ்ரில் என்னவோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.
"ஹம்..." வைகுண்டம் சண்முகவடிவேலனை தீர்க்கமாகப் பார்த்தார்.
"நீதிபதி சார், உங்க ரிஃப்ளக்ஸெல்லாம் ரொம்ப நார்மலா இருக்கு. பாபின்ஸ்கி ஸைன் – நெகடிவ். ப்ளாண்டார் ரிஃப்ளெக்ஸும் நார்மல் தான். ஆனா ஏன் ரெண்டு காலும் பாராலைஸ் ஆனா மதிரி கிடக்கு?"
சண்முகவடிவேலன் சுவரில் தொங்கிய ஷுஸ்ருதர் ஓவியத்தைப் பார்த்தபடி முணுமுணுப்பாக பேசினார்.
"டாக்டர், தெரியல. காலையில எழும்பும்போது தொடை எலும்புல இருந்து பாதம் வரைக்கும் மரக்கட்டை மாதிரி ஆயிடுது. மரத்துப்போனா மாதிரி. தொட்டா தெரியல."
"சண்முகவடிவேலன் சார், நீங்க சட்டப் புலி. ஆனா உடம்பை ஏமாத்த முடியாது. உங்க லம்பார் எம் ஆர் ஐ - சுத்தம். L1-L5 டிஸ்க் - வெரி ஃபைன். நெர்வ் கண்டக்ஷன் வெலோஸிடி டெஸ்ட் - 58 மீட்டர்ஸ் பர் செகண்ட். அதாவது சூப்பர் ஸ்பீடு! அப்ப எங்க இருக்கு பிராப்ளம்?"
ஆவ்ரில் மெதுவாக குறுக்கிட்டாள். "புரொஃபசர், மே பி கன்வர்ஷன் டிஸ் ஆர்டர்! அந்த ஏடிஎஸ் குரூப் கிளவனாருக்கு வந்துச்சே ஹிஸ்டரிக்கல் பெராலிஸிஸ்!"
ஓ நோ ஆவ்ரில்! என்ன லாங்குவேஜ் இது!”
“சாரி புரொஃபசர்!”
“இல்லை ஆவ்ரில்," வைகுண்டம் கையை உயர்த்தினார்.
"ஹிஸ்டரிக்கல் பெராலிஸிஸ்-ல ரிஃப்ளெக்ஸஸ் மாறும். இவருக்கு பிரெயின்ல இருந்து சிக்னல் கரெக்ட்டா தான் வருது. ஆனா இவரோட வில் பவர் அதை ப்ளாக் பண்ணறது. இது ஸைக்கோஸோமாடிக் ஷட் டவுன்!"
சண்முகவடிவேலன் எரிச்சலுடன் வைகுண்டத்தைப் பார்த்தார்.
"என்ன டாக்டர், நான் வேணும்னே நடிக்கிறேன்னு சொல்றீங்களா? ஐ அம் ய ரிட்டயர்ட் ஜட்ஜ்!"
"ஜட்ஜ் சார்," வைகுண்டம் நாற்காலியை அவர் படுக்கைக்கு அருகில் இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.
"நீதிமன்றத்துல பொய் சாட்சியத்தை கண்டுபிடிக்க நீங்க கிராஸ் எக்ஸாமினேஷன் பண்ணுவீங்க. நான் நியூரான்களை வச்சு பண்ணுவேன்."
சட்டென எழுந்தார். யூ டேக் ரெஸ்ட்! நா நாளைக்கு வந்து பாக்கறேன்!கம் ஆவ்ரில்!”
வினுதா கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கேட்டாள்.
“என்ன சஸ்பெக்ட் பண்றீங்க அங்கிள்? ஜட்ஜ் ஃபேக் பண்றாரா? இஃப் யெஸ், ஒய்?”
“ஃபேக் ஆர் நாட், எனக்குத்தெரியாது. ஆனா இது ஜஸ்ட் ஃபிஸியலாஜிக்கல் இல்லை!”
நடந்து தன் ரூமுக்கு வந்தவுடன் வினுதாவைடம் சொன்னார்.
“வினுதா! உங்கப்பன் மாதிரி ஜேம்ஸ் பாண்ட் வேலையெல்லாம் பண்றியாமே! எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணறியா?”
“சொல்லுங்க அங்கிள்!”
“ஜஸ்ட் கோ ஓவர் சண்முகவடிவேலன் கேஸஸ் க்விக்லி! உன் லீகல் மைண்டுக்கு ஏதாவது அபெர்ரேஷன் இருந்தா எனக்கு சொல்லு! ஓகே?”
“அண்ட் வாட் டைம் டு ஐ ஹேவ்?”
“ஒன் வீக்!”
நா மூணு நாளுல முடிச்சுடுவேன்!”
வினுதா போனதும் வைகுண்டம் சிரித்துக்கொண்டார்.
“வேதாந்தத்துக்கு இவதான் சரியான வாரிசு!”
வினுதா சரியாக மூன்றாம் நாள் வந்துவிட்டாள்.
“ஐ ஹேவ் ய சர்ஜரி டு அட்டெண்ட். வெயிட் ஃபார் ஒன் ஹவர்!”
“ஒன்லி ஒன் ஹவர் அங்கிள்! அதுக்கு மேல எனக்கு டைம் இல்ல!
“பார்ரா! எனக்கு கெடுவா?”
எஸ்! நானும் வேலை செய்யறேனே! நீங்க மெடிக்கல்னா நா லீகல்!”
வைகுண்டம் சிரித்துக்கொண்டே “அம்மா பரதேவதே! வந்துர்ரேம்மா! பேஷண்ட் எக்கேடாவது கெட்டுப் போட்டும்னு ஓடி வந்துர்ரேன்!”
”சேச்சே நா அவ்ளோ மோசம் இல்லை அங்கிள்! கூட ரெண்டு நிமிஷம் எடுத்துக்கோங்க!”
வினுதா சிரித்தபடியே சொல்லிவிட்டு கையிலிருந்த குறிப்புகளைப்பார்க்கத்தொடங்கினாள்
வைகுண்டம் திரும்பியபோது வினுதா வைகுண்டத்தின் லெட்டர் பேடிலிருந்து கிழித்த பேப்பரில் குறிப்புகள் எழுதி வைத்திருந்தாள்.
“என்னதிது! என்னோட லெட்டர் பேடையா எடுத்தே?”
“சோ வாட்! அதுவும் எழுதற பேப்பர்தானே! அங்கிள்! இப்படியெல்லாம் டென்ஷன் ஆனா உங்களுக்கு பிரஷர் வந்துரும்!”
“லங்கிணி! ஓகே கொண்டா அதை?”
படித்துவிட்டு மேலே பார்த்தபடி யோசித்தார்.
“அங்கிள்…!”
வினுதா குறுக்கிட, அதட்டினார்.
“ஷட் அப்! லெட் மி திங்க்!”
“ஓகே வினுதா! இந்த கேஸஸ் பத்தி வேறென்ன டிடெயில்ஸ் உனக்கு தெரியும்?”
“ஜட்ஜ்மெண்ட் காண்ட்ரோவெர்ஷியல்! அப்ப கொஞ்சம்பொலிட்டிகல் ஸ்டார்ம் ஆச்சு. அவர் மேல் கொஞ்சம் காம்ப்ரொமைஸ் பண்ணினார்ன்னு சந்தேகமா பேச்சு உண்டு!”
அடுத்து அரை மணி நேரம் வைகுண்டமும் வினுதாவும் விவாதித்தார்கள்.
ப்யூலா! சாரநாதன் வந்திருக்காரா பாரு?”
“ஸைக்கியாட்ரி….?”
“சில்லி! வேற சாரநாதன் இருக்காரா நம்ம ஆஸ்பத்ரியில?
“ஃபோன் அடிக்க எடுத்துப்பேசினார்.
“சாரநாதன்! மேக் மி அண்டர்ஸ்டாண்ட்……………………………!”
வினுதா கண்கொட்டாமல் வைகுண்டத்தின் ஆளூமையை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அண்ட் சாரநாதன்! டோன்’ட் டாக் அபவுட் திஸ் டு எனிபடி! டோட்டல் சைலென்ஸ், ஓகே?”
வினுதா! வா! போலாம்!”
”எங்க?”
”ஜட்ஜ் சண்முகவடிவேலனைப்பார்க்க!”
ஆஸ்பத்திரி படுக்கையில் தலைகாணிகளை அடுக்கி சாய்மானமாக படுத்தபடி சண்முகவடிவேலன் ஏதோ படித்துக்கொண்டிருந்தார்.
“லுக் ஹியர் நீதிபதி! யுவர் பிராப்ளம் ஈஸ் சால்வ்ட்!”
ஜட்ஜ் முகம் மலர்ந்தார்.
“சர்ஜரியெல்லாம் தேவையில்லையே?”
“மருந்தே தேவையில்லை! ஆனா சாரி இதுவும் ஒரு மாதிரி சர்ஜரிதான்!”
”வாட்? என்ன சொல்றீங்க டாக்டர்? எப்ப?”
”இதோ இப்பவே உடனே இங்கியே!”
“டாக்டர்! ப்ளீஸ்! என் நெலம தெரிஞ்சும் நீங்க இப்படி வெளையாடறீங்களா?”
“அத விடுங்க! ஆகஸ்ட் 14, 2008. மதுரை செஷன்ஸ் கோர்ட். கேஸ் நம்பர் 412/99. கொலையாளி யார்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனா, போதிய சாட்சியம் இல்லைனு சொல்லி, அக்யூஸ்டை விடுதலை பண்ணிட்டீங்க. அடுத்த வாரம், அந்த கேஸ்ல சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய சாட்சி தற்கொலை பண்ணிக்கிட்டான். கரெக்ட்டா?"
சண்முகவடிவேலனின் முகத்தில் திடீரென ரத்த ஓட்டம் குறைந்தது. உதடுகள் லேசாக நடுங்கின.
"டாக்டர்... இதுக்கும் என் கால் வலிக்கும் என்ன சம்பந்தம்?"
"ரொம்ப சம்பந்தம் இருக்கு சார், இன்னும் கேளுங்க!"
”ஈரோடு 104/03 மெடிக்கல் நெக்ளிஜென்ஸ் கேஸ்! செயின் ஆஃப் கஸ்டடி சரியா பின்பற்றப்படலைன்னும், எக்ஸ்பெர்ட் மெடிக்கல் ஒபினியன் பலவீனமாக இருக்குன்னு சொல்லி ஃபார்மா கார்ப்பரேட் எம்டிய டிஸ்சார்ஜ் பண்னியிருக்கீங்க! லஞ்சம் கை மாறினதா பேச்சு இருந்ததே!.
ஜட்ஜ் பதட்டமானார்.
“டாக்டர்! என் ஹெல்த பாக்கச்சொன்னா நீங்க என்னோட லீகல் கேஸ் ஹிஸ்டரிய ஆராய்ச்சி பண்ணிட்டு வந்திருக்கீங்க! ஜஸ்ட் லெட் மி அவுட் ஆஃப் திஸ் ஹாஸ்பிடல்!”
“இருங்க நீதிபதி சார்! இதையும் கேட்டுட்டு போங்க! ஆஷா தேவிங்கற பணக்கார விடோவோட பங்களா தோட்டம் எல்லாத்தையும் அந்த பிளகாட் அரசியல்வாதிக்கு சாதகமா சொன்ன தீர்ப்பு. அது என்ன, ” பர்டன் ஆஃப் ப்ரூஃப் உஷாதேவி மீதுதான் உள்ளது அண்ட், கைரேகை எக்ஸ்பர்ட் ரிப்போர்ட் 100% அக்யூரேட் இல்லை” – இதெல்லாம் உங்க தீர்ப்போட வார்த்தைகள் ஜட்ஜ் – உங்க பொலிட்டிகல் பயத்தால ஆஷாதேவி தெருவுக்கு வந்தாங்களே?”
ஜட்ஜ் இப்போது அதிர்ச்சியில் மௌனமானார்.
“டாக்டர்! உங்க எயிம் தான் என்ன? ஏன் என் பழைய கதையை இங்க வந்து எக்ஸ்போஸ் பண்றீங்க? இதுவா ட்ரீட்மெண்ட்?”
வைகுண்டம் குரலைத் தாழ்த்தினார்.
"அன்னைக்கு நீங்க கொடுத்த இந்த மாதிரி ஜட்ஜ்மெண்ட்ஸ் உங்க மனசாட்சிக்கு எதிராக இருந்தது. அதை இத்தன வருஷமா பூட்டி வச்சிருந்தீங்க. ஆனா, போன பதினாலாம் தேதி அந்த தற்கொலை பண்ணிக்கிட்ட சாட்சியோட பையன் உங்களைப் பார்க்க வந்தான். அவனைக் பார்த்த அடுத்த நிமிஷம், உங்க பிரெயின்ல கார்ட்டிஸால் லெவல் அப் ஆச்சு. ஹிப்போகாம்பஸ்-ல இருந்த பழைய மெமரி தட்டி எழுப்பப்பட்டு, உங்க செண்ட்ரல் நர்வஸ் சிஸ்டத்தை லாக் பண்ணிடுச்சு."
"என்ன பேத்தல் இது? சயின்ஸா, கதையா?"
சண்முகவடிவேலன் குரலை உயர்த்திப் பேச முயன்றார்.
"சுத்தமான நியூரோ-பயாலஜி சார்," வைகுண்டம் புன்னகைத்தார். "மனசு தாங்க முடியாத குற்ற உணர்ச்சியை சுமக்கும் போது, உடம்பு தன்னைத்தானே தண்டிச்சுக்கும். 'நான் தப்பு பண்ணிட்டேன், அதனால் நான் நடக்கக் கூடாது' அப்படின்னு உங்க சப்கான்ஷியஸ் மைண்ட் முடிவு பண்ணி, பாதங்களுக்குப் போற மோட்டார் சிக்னலை சுவிட்ச் ஆஃப் பண்ணிடுச்சு."
ஜட்ஜ் அதிர்ந்தார்.
"டாக்டர்! திஸ் ஈஸ் அன்பிலீவபிள்!"
"அன்பிலீவபிள் இல்ல ஜட்ஜ் சார், சைக்ரியாட்ரிக் ஆட்டோ-இம்யூன் ரியாக்ஷன். தன் மனசே தன்னைத் தாக்கும் நோய்."
வைகுண்டம் சண்முகவடிவேலனின் கண்களை நேராகப் பார்த்தார்.
"சார்... நான் உங்களுக்கு பிரெட்னிசோலோன் தரப்போறதில்லை. பிசியோதெரப்பியும் வேலை செய்யாது. உங்க கால்கள் மறுபடியும் வேலை செய்யணும்னா, அது உங்க கயிலதான் இருக்கு!”
“என் கையிலயா? நான் என்ன செய்யணும்?”
“எனக்கு தெரியாது! பிராயச்சித்தம்னு ஒண்ணு இருக்கா? அதப்பண்ணி செஞ்ச பாவத்த போக்கிக்கலாமா? உடனே உடம்பு சரியாகிடுமா? ஆனா உங்க வியாதிக்கு காரணம் நான் சொன்ன மெடிக்கல் ரீசன் தான். க்யூர்? அன்ஃபார்ச்சுனேட்லி எங்க மெடிசன்ல இல்ல!”
சண்முகவடிவேலன் சில வினாடிகள் அமைதியாக இருந்தார். அறையில் அந்த ஏசியின் 'ஹம்' சத்தம் மட்டுமே கேட்டது. மெதுவாக அவர் கண்களிலிருந்து இரு துளி கண்ணீர் கன்னங்களில் இறங்கியது.
"எனக்கு... எனக்கு அன்னைக்கு பயம் டாக்டர். மேல் இடத்து அழுத்தம். என்னால வேற எதுவும் பண்ண முடியல..."
"பயம் இயல்புதான் சார். ஆனா பயத்தை விட பெரிய பொய் மனசாட்சியை ஏமாத்துறது,"
வைகுண்டம் எழுந்து நின்றார்.
"ஏதாவது பண்ணுங்க! உங்க பென்ஷன் பணத்துல ஒரு பகுதியை அந்தப் பையனோட டிரஸ்ட்டுக்கு எழுதி வைங்க. உண்மை என்னனு ஒரு கடிதம் எழுதி உங்க வக்கீல் கிட்ட குடுங்க. ஆஷாதேவியோட குடும்பத்துக்கு ஏதாவது செய்ங்க! இதெல்லாம் பண்ணினா உங்க கால் சரியாகுமா? ஆகலாம்! இந்த ஒரு வழியிலதான் உங்க பிரெயின் ஆக்டிவேட் ஆகி செண்ட்ரல் நர்வஸ் சிஸ்டத்தை வேல செய்ய வைக்க முடியும்! ."
"நிஜமாவா டாக்டர்?"
"மருத்துவமும் சட்டமும் ஒன்னுதான் சார். ஆதாரமும் உண்மையும் இருந்தா தண்டனையும் குறையும், வியாதியும் குணமாகும்னு நான் நம்பறேன்!"
வைகுண்டம் கோட்டை மாட்டிச் சரிசெய்தார். "வா வினுதா! உன்னோட ஒன் ஹவர் ஆயிடுத்து. யூ கெட் கோயிங்!
அடுத்து நாள் காலை 11 மணி.
வினுதாவின் ஃபோன்..
"அங்கிள்! ஜட்ஜ் நீங்க சொன்ன மாதிரி பண்ணத்தொடங்கிட்டாரு.நானே அஃப்ஃபிடவிட்டை எழுதி கையெழுத்தும் வாங்கிட்டேன்.!"
”ஹி ஷுட் பிகம் ஆல்ரைட்!”
"எப்படி அங்கிள் இத்தன கான்ஃபிடெண்டா சொல்றீங்க?"
வைகுண்டம் மேஜை மீது இருந்த பேனாவை சுழற்றினார். "வெரி சிம்பிள் வினுதா. மனுஷ உடம்புங்கிறது ஒரு விசித்திரமான மெஷின். அதுக்கு பொய் சொன்னா அலர்ஜி. உண்மையைப் பேசினா அதுவே தன்னை ஹீல் பண்ணிக்கும்! நம்ம பெரியவங்க இதத்தான் தர்மம்னு சொன்னாங்க!”
”தார்மிக்குன்னா ரிலிஜன் ஆகிடுமே அங்கிள்!”
”ஆகட்டுமே! தர்மமான வழியில வாழ்ந்தா மனசும் சிந்தனையும் க்ளியரா இருக்கும். உடம்புக்கும் எதுவும் வராது. யதோ தர்மஸ்ததோ ஜயஹ: ந்னுசொன்னா சனாதனம் ஒழிகன்னு போராட்டம் செய்வாங்க! ஆனா திருவள்ளுவரே ”உள்ளத்தால் பொய்யா ஒழுகி”---ன்ன்னு சொல்லியிருக்காரே!”
“அங்கிள்! யூ ஆர் ய ஜீனியஸ்!”
“ஏன் உனக்கு இன்னிக்கு வேற வேலையில்லையா? எனக்கு இருக்கு!டோன்’ட் வேஸ்ட் மை டைம்!”
சென்ட்ரல் ஸ்டேஷனின் கடிகாரம் சப்தமின்றி பன்னிரெண்டு மணி காட்ட சென்னையின் வெயில் உச்சத்தை தொட்டது.
Wow, wow, wow! வாத்யார் கதை படித்த அதே, அதே திருப்தி. வாழ்த்துக்கள். அவர் நிரந்தனமானவர், எந்த நிலையிலும் அவருக்கு மரணம் இல்லை.
ReplyDeleteIndira Gokulachandra
ReplyDelete