டாக்டர் வைகுண்டம்
பெங்களூர்……..
.. வழி அரக்கோணம்
பெங்களூர் ஷதாப்தி எப்போதும் போல ஒரு குலுக்கலுடன் கிளம்பினபோது கம்பார்ட்மெண்ட் EC பதினெட்டாம் நம்பர் சீட் ராமசாமி நன்றாகத்தான் இருந்தார்.
மேலே சொன்ன ராமசாமி ஹிந்து எஸ்பிரஸ் டைம்ஸ் என்று
வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல் எல்லா பேப்பரையும் படித்தார். பக்கத்தில் பாரியான மனைவி, ரமணி
சந்திரன் நாவல் மற்றும்
குமுதம் சினேகிதியும் படித்துக்கொண்டு வந்தார். காபி குடித்த ராமசாமி கம்பார்ட்மெண்ட்
முழுவதும் கேட்கும்படி இரண்டு மூன்று முறை அபான வாயுவை வெளிவிட்டபோது பலர் முகம் சுளிக்க
ஒரு எட்டு வயதுப்பெண் குழந்தை மட்டும் சத்தமாகச்சிரித்தது.
ராமசாமி ஒருக்களித்து சீட்டில் சாய்ந்தவாறே தூங்கிக்கொண்டிருந்த
போசிலிருந்து விலுக்கென்று உதறினார். அந்த திடீர் விலுக்கில் முழித்துக்கொண்டவர் கொஞ்சம்
பேந்த பேந்த அலமந்தார். இப்போது அவர் தலை சாய்ந்து மனைவி தோளில் இடித்தது. கண் திறந்த
மனைவிக்கு முதலில் தெரிந்தது ராமசாமியின் சொருகின கண்கள். கூடவே சட்டை முழுவதும் நனைந்திருந்த
ஈரம்! வாய் லேசாகக்கோணினபடி இழுத்துக்கொண்டிருக்க, கணமே மனைவி அலறினாள்.
அரைத்தூக்கத்தில் இருந்தவர்களும் லேப்டாப்பில் சினிமா பார்த்தவர்களும் பின்னாலிலிருந்து இரண்டு சீட்டுக்களின் நடுவில் பார்க்க முடியும் என்னும் விசனம் இல்லாமல் கொஞ்சிக்கொண்டிருந்த இளஞ்சோடியும் சிக்கு நாத்த யூனிஃபார்ம் அணிந்த கேபின் அட்டெண்டரும் பரபரத்து பதினெட்டாம் நம்பர் சீட்டுக்கு ஓடினார்கள்.
மனைவியின் அலறல் இப்போது விசும்பலாகிற்று.
அட்டெண்டர் ஓடி செயினை இழுக்க, எங்கோ நாராச விசில்
சத்தம் ஒலிக்க வண்டி குலுங்கியது, வேகம் குறைந்தது,
நழுவியது. எல்லா உபரி நட்டும் போல்டும் கூட்டம் கூடி முனகியவாறே வண்டியின் வேகம் குறைக்க
உதவின அஞ்சாம் நிமிஷம் வண்டி நின்றது.
டாக்டர் பல்ஸ் பார்த்துக்கொண்டே மார்பைத்தடவி விட்டுக்கொண்டு இருந்தார். மனைவியிடம் பேச்சுக்கொடுத்தார்.
“இதுக்கு முன்ன ஹார்ட் பிராப்ளம் இருக்காம்மா இவருக்கு?”
“ஷட் அப்! மருந்து ஏதாவது?”
”எங்க காமிங்க!”
ஆம்புலன்ஸின் சைரன் ஒலித்தது.
”கூட யார்னா வரணுமுங்க!”
”யாராவது ஒதவிக்கு வாங்களேன். எனக்கு ஒண்ணுமே தெரியாது. இங்லீஷு கூட தெரியாதுங்க! இவுரு எழுந்ததும் நானே காசு கொடுத்து உங்கள கார்ல பெங்களூர் அனுப்பிச்சேர்ருனுங்க!”
டாக்டர் நிமிர்ந்தார்.
”நான் வரேன்! சீட் முப்பத்தாறுலேர்ந்து என்னோட பிரவுன் பெட்டிய எடுத்துக்கொடுங்களேன்!”
ஆஸ்பத்திரி சின்னதுதான். பெரிய வசதிகள் அதிகமில்லை. இருந்தாலும் டாக்டர் கூடவே இருந்தார்.
“ஆஞ்சியோ இருக்கா உங்க ஹாஸ்பிடல்ல?”
“இல்ல டாக்டர்! பட் ஈ சி ஜி எடுத்துர்ரேன்!”
“போறாது! பிளட் டெஸ்ட்! புரோட்டீன் லீக் இன் டு த பிளட் செக் பண்ணனும்! எக்ஸ் ரேவும் ! ஹார்ட் சைஸ் பாக்கணும்!”
“ஓகே டாக்டர்!”
“யெஸ்! கெட் கோயிங்! க்விக்!”
“லுக் அட் தி அபெர்ரேஷன்! ஹார்ட் மஸில் இஞ்சுரி போல இருக்கே!”
“மெட்ராசுக்கு மூவ் பண்ணிடலாமா?”
”வாட் ஆர் யூ சேயிங்? ஹீ ஈஸ் நாட் ஃபிட்! போற வழியிலேயே போய்டுவாருய்யா?”
“அப்ப..?”
“செடேட் ஹிம்! ஆல்டெப்ளேஸ் குடுக்கணும்! கூடவே குளோபிடோக்ரெல் அண்ட் ஹெபாரின்! ப்ளட் கிளாட் இருந்தா டிஸால்வ் ஆகணூம்! பீட்டா ப்ளாக்கர்ஸ் ஏதானும் ஹாஸ்பிடல்ல இருக்கா?
” செக் பண்றேன் டாக்டர்!”
”க்விக்! ப்ராண்டோ!”
”கார்வெடிலால், ப்ரொப்ரனோலால் டாக்டர்!”
”குட்! கார்வெடிலால் பெட்டர். உடனே அட்மினிஸ்டர் பண்ணுங்க!”
“எஸ் டாக்டர்!”
”மானிட்டர் ஹிஸ் பீட்ஸ்!”
“ஆனா நா ஒருத்தந்தான் இங்க கார்டியாக் தெரிஞ்சவன் டாக்டர்! எனக்கு வேற பேஷண்ட் இருக்காங்களே!”
”நான் இருக்கேன்! ஐ வில் ஸ்டே வித் ஹிம்! இந்தாம்மா! நீங்க பண்ண ஒண்ணும் இல்ல. அங்க போய் உக்காருங்க! அமைதியா இருங்க! அவரு நெலம மோசம் தான். ஆனா பாத்துருவோம்! நம்மள மீறி என்ன ஆகும்!”
”அய்யா ரொம்ப நன்றிங்க! உங்க வேல கெடுதுன்னு பாக்காம எனக்கு ஒதவி..!”
”அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்! டாக்டர்! கவலைப்படாதீங்க, உங்க ஹாஸ்பிடல் பேமெண்ட் நானே பண்றேன்!”
“அக்கா! மணி என்ன ஆச்சு? ஷதாப்தி பதினோரு மணிக்கு வந்தாச்சு! சார்ட்டுல இவர் பேரு இருக்கு. ஆனா ஆசாமி எறங்கல!”
“ஏதாவது எமர்ஜென்ஸியா இருக்குண்டா! மெஸேஜ் பண்ணுவாரு!”
“என்ன எமர்ஜென்ஸியோ? நான் உனக்கு ஒரே தம்பி! என் ஒரே பொண்ணோட கல்யாணம். மூணு நாள் முன்னமே வரணும். இவருதான் கல்யாணத்தன்னிக்கு வரேன்னுட்டு அதுவும் அம்பேல்!ஏங்க்கா! இவர் இல்லேன்னா உலகமே வியாதிலேர்ந்து விடு படாதா?”
“தெரியலையேடா! எனக்கும் ஒண்ணும் மெசேஜ் இல்லியே?”
“இன்னும் எத்தனை வருஷம் இப்படி அவரோட நீ சகிச்சுக்கப்போறே? நம்ம வீட்டு ஃபங்க்ஷன் ஒண்ணுத்துக்குக்கூட அவர் ஒழுங்கா வந்ததில்ல!”
”இந்த தாரம் வரட்டும்! நான் விடப்போறதில்ல! மனுஷன நிக்க வெச்சு கேள்வி கேட்கறேன்!”
செய்க்கா! செய்! அவர அப்படி கேட்டாதான் உறைக்கும்! நா போறேன்! சம்மந்தி வீட்டுல கூப்டாளாம்!”
”போ போ! அவா மனசு சுணக்கம் ஆப்படாது!”
அவனை அனுப்பி விட்டு மொபைலை எடுத்து நம்பர் அழுத்தினாள்.
“என்ன ஆசாமி பொழச்சுப்பானா? பொண்டாட்டி வெகுளியா இருக்கான்னீங்களே! நீங்க கூடவே இருந்துடுங்கோ! எந்தம்பிய நான் சமாளிச்சுக்கறேன்!”
”ஹி ஈஸ் இம்ப்ரூவிங்! தாங்க் யூ அண்ட் வேதவல்லி?”
Dr வைகுண்டமும் வேதவல்லியும்
ReplyDeleteஆஹா என்ன பொருத்தம்!
S. Jothilakshmi
ReplyDeleteஐ லவ் யூ ….போதுமே - JR touch 👌😍
Beautiful
ReplyDelete#Lakshmi Stiram
Wonderful read. Great ending...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்ட் வேதவல்லி...
ReplyDeleteசொல்லுங்கோ
ஐ லவ் யூ
போறுமே....
Nice finishing touch.
வை & வே are Wills Filter
Made for each other
உங்க கமெண்ட்டை நான் தொடுவேனா!?
Deleteஎனக்கு ரொம்ப பிடிச்சது போறுமே.... ஆனா மனசுக்குள்ளே இப்படி நிறைய வேணுமே😜☺️
ReplyDeleteCute வைகுந்....sweet வேதா....♥️
Lovely
Deleteவைகுண்டம் என்கிற பெயருக்கு ஏற்றாற் போல ஆபத்பாந்தவர் தான்.... அறிவுஜீவி சுஜாதா குழுவிலும் (வழக்கம் போல) பகிர்ந்தாகி விட்டது.
ReplyDeleteSuper!Thanks
Deleteஏற்கனவே FB யில் எல்லோரும் படித்திருப்பார்களே! அதனால் என்ன என்கிறீர்களா, அதுவும் சரிதான்! என்னை மாதிரி 2,3 ஆம் தடவை ரசித்து படிக்க மாட்டார்களா என்ன!
DeleteR. Jagannathan.
Very good. Realistic
ReplyDeleteThanks
Delete"மீள்" எனினும் சுகம்; வண்டிக்குள் இருந்த 'அவுட் ஆஃப் ஃபோகஸ்'ஆசாமிகள் பற்றிய வர்ணனை(எட்டு வயசு சிறுமி/ லேப்டாப்சினிமா,பார்த்தவர்கள்/,அரைத்தூக்க ஆசாமிகள்/ ஹூப்ளிக்கு பஸ்ஸில் போக வேண்டிய ஆசாமி) படு சுவாரஸ்யம்
ReplyDeleteசுதாகர், சென்னை
படித்திருக்கிறேன்.ஆனால் அவர்கள் வாழ்க்கையில் வேதவல்லி எவ்வளவு தரம் ஒருநாளைக்கு போறுமே சொல்லியிருப்பார் என்று மலைப்பு.
ReplyDelete